மகிந்த ராசபக்ச

இலங்கையின் முன்னாள் பிரதமர் மற்றும் சனாதிபதி/நாடாளுமன்ற உறுப்பினர்

பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa, சிங்களம்: පර්සි මහේන්ද්‍ර රාජපක්ෂ; பிறப்பு: 18 நவம்பர் 1945[1]), பொதுவாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் அரசுத்தலைவரும், முன்னாள் பிரதமரும் ஆவார்.[2] முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். மகிந்தவின் அரசுக்கும், அரசுத்தலைவர் கோட்டாபய இராசபட்சவிற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், 2022 மே 9 இல் மகிந்த ராசபக்ச தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[3].

மகிந்த ராசபக்ச
Mahinda Rajapaksa
2018 இல் மகிந்த ராசபக்ச
இலங்கை பிரதமர்
பதவியில்
21 நவம்பர் 2019 – 9 மே 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய இராசபட்ச
முன்னையவர்ரணில் விக்கிரமசிங்க
பின்னவர்ரணில் விக்கிரமசிங்க
பதவியில்
26 அக்டோபர் 2018 – 15 திசம்பர் 2018[a]
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
முன்னையவர்ரணில் விக்கிரமசிங்க
பின்னவர்ரணில் விக்கிரமசிங்க
பதவியில்
6 ஏப்ரல் 2004 – 19 நவம்பர் 2005
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னையவர்ரணில் விக்கிரமசிங்க
பின்னவர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
இலங்கையின் 6-வது அரசுத்தலைவர்
பதவியில்
19 நவம்பர் 2005 – 9 சனவரி 2015
பிரதமர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
தி. மு. சயரத்தின
முன்னையவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பின்னவர்மைத்திரிபால சிறிசேன
12-வது எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
18 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்இரா. சம்பந்தன்
பின்னவர்சச்சித்து பிரேமதாச
பதவியில்
6 பெப்ரவரி 2002 – 2 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பின்னவர்ரணில் விக்கிரமசிங்க
அமைச்சுப் பதவிகள்
நிதி அமைச்சர்
பதவியில்
26 அக்டோபர் 2018 – 15 திசம்பர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
முன்னையவர்மங்கள சமரவீர
பின்னவர்மங்கள சமரவீர
பதவியில்
23 நவம்பர் 2005 – 9 சனவரி 2015
குடியரசுத் தலைவர்இவரே
முன்னையவர்சரத் அமுனுகம
பின்னவர்ரவி கருணாநாயக்க
பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
19 நவம்பர் 2005 – 8 சனவரி 2015
குடியரசுத் தலைவர்இவரே
முன்னையவர்திலக் மாரப்பன
பின்னவர்மைத்திரிபால சிறிசேன
நெடுஞ்சாலைகள், துறைமுக, கப்பற் போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
23 ஏப்ரல் 2010 – 8 சனவரி 2015
குடியரசுத் தலைவர்இவரே
முன்னையவர்மங்கள சமரவீர
பின்னவர்கபீர் ஆசிம்
பதவியில்
22 ஏப்ரல் 2004 – 19 நவம்பர் 2005
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னையவர்செயராசு பெருனாண்டோபுள்ளே
பின்னவர்மங்கள சமரவீர
சட்டம், ஒழுங்கு அமைச்சர்
பதவியில்
26 ஆகத்து 2013 – 8 சனவரி 2015
குடியரசுத் தலைவர்இவரே
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்சான் அமரதுங்க
மீன்பிடி, நீர்வளத்துறை அமைச்சர்
பதவியில்
1997 – 14 செப்டம்பர் 2001
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னையவர்இந்திக குணவர்தனா
பின்னவர்மகிந்த விசயசேகர
தொழில், தொழிற் பயிற்சி அமைச்சர்
பதவியில்
19 ஆகத்து 1994 – 1997
குடியரசுத் தலைவர்திங்கிரி பண்டா விசயதுங்கா
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னையவர்திங்கிரி பண்டா விசயதுங்கா
பின்னவர்அலவி மௌலானா
தொகுதிகள்
குருணாகல் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஆகத்து 2015
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
15 பெப்ரவரி 1989 – 19 நவம்பர் 2005
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்நிருபமா இராசபட்ச
பெலியத்தை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
27 மே 1970 – 21 சூலை 1977
முன்னையவர்டி. பி. அத்தபத்து
பின்னவர்ரஞ்சித் அத்தபத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பேர்சி மகிந்த ராசபக்ச

18 நவம்பர் 1945 (1945-11-18) (அகவை 78)
வீரகெட்டிய, தெற்கு மாகாணம், இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை பொதுசன முன்னணி (2018 இற்குப் பின்னர்)
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கை சுதந்திரக் கட்சி (2018 இற்கு முன்னர்)
துணைவர்சிராந்தி ராசபக்ச
பிள்ளைகள்நாமல்
யோசித்த
ரோகித்த
வாழிடம்(s)கார்ல்டன் வீடு, தங்காலை,
மெதுமுலனை வளவு
முன்னாள் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரி
தொழில்சட்டவறிஞர்
இணையத்தளம்இணையதளம்

வழக்கறிஞரரான மகிந்தா 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.[4] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை.[5]

2018 அக்டோபர் 28 இல், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி விலகியதை அடுத்து மகிந்த ராசபக்ச இலங்கைப் பிரதமராக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். இந்நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரனாணது எனக் கூறி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இதன் மூலம் நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இலங்கை நாடாளுமன்றம் ராசபக்சவுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை 2018 நவம்பர் 14, 16 தேதிகளில் கொண்டு வந்தது. இரண்டு தீர்மானங்களையும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனக் காரணம் கூறி சிறிசேன ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில், 2018 திசம்பர் 3 இல் ராசபக்சவின் நியமனத்தை நீதிமன்றம் ஒன்று செல்லுபடியற்றதாக்கியது.

ராசபக்ச 2018 திசம்பர் 15 இல் பிரதமர் பதவியில் இருந்து விலகி, எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற இலங்கை பொதுசன முன்னணியின் தலைவராக மகிந்த 2019 இல் பொறுப்பேற்றார். 2019 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்தவின் தம்பி கோட்டாபய இராசபட்ச வெற்றி பெற்றதை அடுத்து மகிந்த நவம்பர் 18 இல் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ராசபக்ச நான்காவது தடவையாக பிரதமரானார். 2022 மே 3 இல் மகிந்தவின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று எதிர்க்கட்சிகளினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.[6] இராசபட்ச குடும்பத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொருளாதார நெருக்கடி இலங்கையின் விடுதலைக்குப் பிறகு அதன் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையினால் நாட்டை திவால் நிலைக்கு கொண்டு வந்தது. போராட்டக்காரர்கள் அவரை "மைனா" என அழைத்து பதவி விலகக் கோரினர். 2022 மே 9 இல், மகிந்த தனது ஆதரவாளர்களை பேருந்துகள் மூலம் அழைத்து வந்து தனது அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆதரவாளர்கள் இலங்கை பொதுசன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டு, அலரி மாளிகைக்கு வெளியே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காலிமுகத் திடல் சென்று தாக்குதல்களை நடத்தினர். இதனை அடுத்து தென்னிலங்கையில் பல இடங்களிலும் வன்முறைகள் வெடித்தன. மகிந்த ராசபக்ச 2022 மே 9 இல் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[7][8][9]

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

பின்னணி

தொகு

மகிந்த இராசபக்ச அம்பாந்தோட்டையில் வீரக்கெட்டிய என்ற ஊரில்[10] புகழ்பெற்ற அரசியல் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை டி. ஏ. ராசபக்ச தகநாயக்காவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவரது மாமன் டி. எம். ராசபக்ச அம்பாந்தோட்டை தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக 1930களில் பதவி வகித்து வந்தவர்.[10]

ஆரம்ப வாழ்வும் கல்வியும்

தொகு

ராசபக்ச காலி, ரிச்மண்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு, நாளந்தா கல்லூரியிலும், தேர்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[10][11] ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றினார்.[12][13] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1977 நவம்பரில் சட்டவறிஞர் ஆனார்.[14] தங்காலையில் இவர் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.[10]

குடும்பம்

தொகு

1983 இல் ராசபக்ச சிராந்தி விக்கிரமசிங்கவைத் திருமணம் புரிந்தார். சிராந்தி சிறுவர்-உளவியலாளரும், கல்வியாளரும் ஆவார். சிராந்தியின் தந்தை இலங்கைக் கடற்படையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார்.[15] இவர்களுக்கு நாமல், யோசித்த, ரோகித்த என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். யோசித்த இலங்கைக் கடற்படையில் பணியாற்றியவர்.[16]

மகிந்தவின் சகோதரர் கோத்தாபய ராசபக்ச இலங்கைத் தரைப்படையில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் மகிந்தவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாலராகப் பணியாற்றினார்.[17] இன்னும் ஒரு சகோதரர் பசில் ராசபக்ச கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். மகிந்தவின் மூத்த சகோதரர் சாமல் ராசபக்ச நாடாளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றினார்.

கௌரவ விருதுகள்

தொகு

விமர்சனங்கள்

தொகு

மனித உரிமை மீறல்கள்

தொகு

இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மகிந்த ராசபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

  • 2007 பெப்ரவரி இல் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தனக்கு எதிரான கருத்துக்களைத் தெரித்ததற்காக இராணுவத்தின் உதவியுடன் கடத்தப்பட்டனர்.[24]
  • 2006 ஏப்ரல் மாதம், திருகோணமலை நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ராஜபக்சவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிக்கையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சா செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது.[25]
  • ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை வழக்கில் சூலை 2005 இல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு 2006 ஏப்ரல் மாதத்தில் குற்றம் சாட்டியது.[26]
  • இவரது இரண்டாவது மகன் இலங்கைக் கடற்படையில் இணைந்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் [27] அரச செலவில் இலண்டனில் மேற்படிப்பிற்காக அனுப்பப்பட்டார்.[சான்று தேவை]
  • இவர் மீது போர்க்குற்றம் சம்பந்தமான வழக்கு ஒன்று அமெரிக்காவில் பதியப்பட்டது.[28][29]

பிரதமர் பதவியிலிருந்து விலகல்

தொகு

இலங்கை பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு 9 மே 2022 அன்று மகிந்த ராஜபக்ச, இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பினார்.[30][31][32]

குறிப்புகள்

தொகு
  1. பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்க உடன் கேள்விக்குள்ளானது. No-confidence motion was passed on 2018 நவம்பர் 14 இல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2018 திசம்பர் 3 இல் நீதிமன்றம் இவரது பதவியைப் பறித்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mahinda Rajapakse". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017.
  2. "இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே!".NDTV தமிழ் (அக்டோபர் 26, 2018)
  3. "Prime Minister Mahinda Rajapaksa resigns". NewsWire. 2022-05-09. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  4. "(BBC)". BBC News. 2010-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
  5. "Sri Lanka election: Mahinda Rajapaksa concedes he is unlikely to be PM". தி கார்டியன். 18-08-2015. https://www.theguardian.com/world/2015/aug/18/mahinda-rajapakse-concedes-defeat-in-sri-lanka-elections. பார்த்த நாள்: 2 September 2015. 
  6. "Sri Lanka opposition declares no confidence in government". ABC News. 3 May 2022.
  7. "Prime Minister Mahinda Rajapaksa resigns". NewsWire (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-05-09. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  8. "More violence reported around the country : Over 100 injured". NewsWire. 9 May 2022. https://www.newswire.lk/2022/05/09/more-violence-reported-around-the-country-over-100-injured/. 
  9. Gazette published confirming Prime Minister’s resignation, Newswire, மே 9, 2022
  10. 10.0 10.1 10.2 10.3 President's Fund of Sri Lanka, President's Profile பரணிடப்பட்டது 4 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம்
  11. Nalanda Keerthi Sri பரணிடப்பட்டது 7 சனவரி 2016 at the வந்தவழி இயந்திரம்
  12. "Mahinda Rajapaksa". Imdb. பார்க்கப்பட்ட நாள் 17 August 2018.
  13. When Mahinda became the youngest MP பரணிடப்பட்டது 30 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் Thilakarathne, Indeewara, The Sunday Observer
  14. "President Mahinda Rajapaksa". President.gov.lk. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "First Lady of Sri Lanka". Dailynews.lk. 2006-02-26. Archived from the original on 8 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
  16. "His Excellency the President Chief Guest at the Commissioning Parade held at the Naval and Maritime Academy". Navy.lk. Archived from the original on 27 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டெம்பர் 2012.
  17. "Sri Lanka: a country ruled as a family business by four brothers". The Telegraph (UK). பார்க்கப்பட்ட நாள் 17 Oct 2013.
  18. "Palestine confers highest honor on Sri Lankan President". colombopage. Archived from the original on 30 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. Gamini Gunaratna, Sri Lanka News Paper by LankaPage.com (LLC)- Latest Hot News from Sri Lanka (6 September 2009). "Sri Lanka: Sri Lanka President and defence secretary conferred honorary doctorates". Colombopage.com. Archived from the original on 10 April 2010. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
  20. "Lumumba University honors President Rajapaksa with a Doctorate in Moscow, Russia". Lankaenews.com. Archived from the original on 10 March 2012. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
  21. "Beijing Language and Culture University". Blcu.edu.cn. Archived from the original on 18 March 2012. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
  22. "Profile in Brief". Priu.gov.lk. Archived from the original on 6 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. "கௌரவ விருதுகள்". Archived from the original on 2011-09-18. பார்க்கப்பட்ட நாள் 2011-09-01.
  24. 3 சிங்கள ஊடகவியலாளர்கள் கடத்தல் தமிழ் நெட் அணுகப்பட்டது பெப்ரவரி 11, 2007 (ஆங்கில மொழியில்)
  25. "Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence". மனித உரிமைகள் கண்காணிப்பகம். 2006-04-25. http://hrw.org/english/docs/2006/04/25/slanka13262.htm. பார்த்த நாள்: 2006-10-01. 
  26. "Tamilnet editor’s murder still unpunished after one year". எல்லைகளற்ற செய்தியாளர்கள். 2006-04-28 இம் மூலத்தில் இருந்து 2006-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060822091217/http://www.rsf.org/article.php3?id_article=17503. பார்த்த நாள்: 2006-10-01. 
  27. மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார் பரணிடப்பட்டது 2007-01-08 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது நவம்பர் 26, (ஆங்கில மொழியில்)
  28. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-02.
  29. http://www.colombotelegraph.com/index.php/war-crime-case-against-mahinda-rajapaksa-dismissed-by-us-court/
  30. இலங்கை: கோட்டாபயவுக்கு மஹிந்த அனுப்பிய ராஜிநாமா கடிதம்
  31. Mahinda Rajapaksa: Sri Lankan PM resigns amid economic crisis
  32. Sri Lanka PM Mahinda Rajapaksa resigns as crisis worsens

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்த_ராசபக்ச&oldid=4082942" இலிருந்து மீள்விக்கப்பட்டது