இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010
2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் ஆறாவது அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற தேர்தல் ஆகும். இலங்கையின் தற்போதைய அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலம் 2011 இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு 2009 நவம்பர் 23 ம் நாள் அறிவிக்கப்பட்டது[1]. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 17, 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன, தேர்தல்கள் 2010, சனவரி 26 இல் இடம்பெற்றது[2].
![]() | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
![]() அரசுத் தேர்தல் முடிவுகளைக் காட்டும் வரைபடம். நீலம் - ராஜபக்ச வென்ற மாவட்டங்கள், பச்சை - பொன்சேகா வென்ற மாவட்டங்கள். | ||||||||||||||||||||||||||
|
2005 அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக முன்னாள் இலங்கை இராணுவத் தலைவர், ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்தன.
57.88 விழுக்காடுகள் வாக்குகளைப் பெற்று அதிபர் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்[3][4]. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் 16 மாவட்டங்களில் ராஜபக்ச முன்னணி பெற்றார். பொன்சேகா 40% வாக்குகளைப் பெற்றார். இவர் முன்னணி பெற்ற மாவட்டங்கள் அனைத்தும் தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும். ஏனைய 20 போட்டியாளர்களும் 2.0% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.
வேட்பாளர்கள்தொகு
முடிவுகள்தொகு
மாவட்ட முடிவுகள்தொகு
மாவட்ட ரீதியாக அதிகாரபூர்வமான முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன[5].
ராஜபக்ச வெற்றி பெற்ற மாவட்டங்கள் |
பொன்சேகா வெற்றி பெற்ற மாவட்டங்கள் |
மாவட்டம் | மாகாணம் | ராஜபக்ச | % | பொன்சேகா | % | ஏனையோர் | % | வாக்களித்தோர் |
---|---|---|---|---|---|---|---|---|
கொழும்பு | மேற்கு | 614,740 | 52.93% | 533,022 | 45.90% | 13,620 | 1.17% | 77.06% |
கம்பஹா | மேற்கு | 718,716 | 61.66% | 434,506 | 37.28% | 12,426 | 1.07% | 79.66% |
களுத்துறை | மேற்கு | 412,562 | 63.06% | 231,807 | 35.43% | 9,880 | 1.51% | 81.01% |
கண்டி | மத்திய | 406,636 | 54.16% | 329,492 | 43.89% | 14,658 | 1.95% | 78.26% |
மாத்தளை | மத்திய | 157,953 | 59.74% | 100,513 | 38.01% | 5,953 | 2.25% | 77.94% |
நுவரேலியா | மத்திய | 151,604 | 43.77% | 180,604 | 52.14% | 14,174 | 4.09% | 77.19% |
காலி | தெற்கு | 386,971 | 63.69% | 211,633 | 34.83% | 9,017 | 1.48% | 80.25% |
மாத்தறை | தெற்கு | 296,155 | 65.53% | 148,510 | 32.86% | 7,264 | 1.61% | 78.60% |
அம்பாந்தோட்டை | தெற்கு | 226,887 | 67.21% | 105,336 | 31.20% | 5,341 | 1.58% | 80.67% |
யாழ்ப்பாணம் | வடக்கு | 44,154 | 24.75% | 113,877 | 63.84% | 20,338 | 11.40% | 25.66% |
வன்னி | வடக்கு | 28,740 | 27.31% | 70,367 | 66.86% | 6,145 | 5.84% | 40.33% |
மட்டக்களப்பு | கிழக்கு | 55,663 | 26.27% | 146,057 | 68.93% | 10,171 | 4.80% | 64.83% |
அம்பாறை | கிழக்கு | 146,912 | 47.92% | 153,105 | 49.94% | 10,171 | 4.80% | 73.54% |
திருகோணமலை | கிழக்கு | 69,752 | 43.04% | 87,661 | 54.09% | 4,659 | 2.87% | 68.22% |
குருநாகல் | வட மேற்கு | 582,784 | 63.08% | 327,594 | 35.46% | 13,515 | 1.46% | 78.62% |
புத்தளம் | வட மேற்கு | 201,981 | 58.70% | 136,233 | 39.59% | 5,899 | 1.71% | 70.02% |
அனுராதபுரம் | வட மத்திய | 298,448 | 66.32% | 143,761 | 31.94% | 7,829 | 1.74% | 78.35% |
பொலனறுவை | வட மத்திய | 144,889 | 64.92% | 75,026 | 33.62% | 3,260 | 1.46% | 80.13% |
பதுளை | ஊவா | 237,579 | 53.23% | 198,835 | 44.55% | 9,880 | 2.21% | 78.70% |
மொனராகலை | ஊவா | 158,435 | 69.01% | 66,803 | 29.10% | 4,346 | 1.89% | 77.12% |
இரத்தினபுரி | சபரகமுவா | 377,734 | 63.76% | 203,566 | 34.36% | 11,126 | 1.88% | 81.24% |
கேகாலை | சபரகமுவா | 296,639 | 61.80% | 174,877 | 36.44% | 8,448 | 1.76% | 78.76% |
தேசிய மட்ட முடிவுகள்தொகு
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
---|---|---|---|---|
மகிந்த ராஜபக்ச | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 6,015,934 | 57.88% | |
சரத் பொன்சேகா | புதிய ஜனநாயக முன்னணி | 4,173,185 | 40.15% | |
முகமது காசிம் முகமது இஸ்மைல் | ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 39,226 | 0.38% | |
அச்சல அசோக சுரவீர | ஜாதிக சங்கவர்தன பெரமுன | 26,266 | 0.25% | |
சன்ன ஜானக சுகத்சிரி கமகே | ஐக்கிய ஜனநாயக முன்னணி | 23,290 | 0.22% | |
மகிமன் ரஞ்சித் | சுயேட்சை | 18,747 | 0.18% | |
ஏ.எஸ்.பி.லியனகே | சிறீ லங்கா தொழிற் கட்சி | 14,220 | 0.14% | |
சரத் மனமேந்திரா | நவ சிகல உருமய | 9,684 | 0.09% | |
எம். கே. சிவாஜிலிங்கம் | சுயேட்சை | 9,662 | 0.09% | |
உக்குபண்டா விஜேக்கூன் | சுயேட்சை | 9,381 | 0.09% | |
லால் பெரேரா | எமது தேசிய முன்னணி | 9,353 | 0.09% | |
சிரிதுங்க ஜெயசூரிய | ஐக்கிய சோசலிசக் கட்சி | 8,352 | 0.08% | |
விக்கிரபாகு கருணாரத்தின | இடது முன்னணி | 7,055 | 0.07% | |
இதுரூஸ் முகமது இலியாஸ் | சுயேட்சை | 6,131 | 0.06% | |
விஜே தாஸ் | சோசலிச ஈக்குவாலிட்டி கட்சி | 4,195 | 0.04% | |
சனத் பின்னாதுவ | தேசியக் கூட்டமைப்பு | 3,523 | 0.03% | |
முகமது முஸ்தபா | சுயேட்சை | 3,134 | 0.03% | |
பத்தரமுல்ல சீலாரதன தேரோ | ஜன சேதா பெரமுன | 2,770 | 0.03% | |
சேனரத்ன டி சில்வா | Patriotic National Front | 2,620 | 0.03% | |
அருணா டி சொய்சா | ருகுணு ஜனதா கட்சி | 2,618 | 0.03% | |
உபாலி சரத் கொங்கஹகே | ஐக்கிய தேசிய மாற்று முன்னணி | 2,260 | 0.02% | |
முத்து பண்டார தெமினிமுல்ல | ஒக்கொம வெசியோ | 2,007 | 0.02% | |
மொத்தம் | 10,393,613 | |||
பதிவுசெய்த வாக்காளர்கள் | 14,088,500 | |||
மொத்த வாக்குகள் | 10,495,451 (74.50%) | |||
பழுதான வாக்குகள் | 101,838 | |||
செல்லுபடியான வாக்குகள் | 10,393,613 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "President decides to hold the Presidential Election". Government Information Department. 2009-11-23. http://news.lk/index.php?option=com_content&task=view&id=12489&Itemid=44. பார்த்த நாள்: 2009-11-23.
- ↑ "5 candidates in the fray". The Sunday Times. 2009-11-29. http://www.sundaytimes.lk/091129/News/nws_04.html. பார்த்த நாள்: 2009-11-26.
- ↑ Sri Lanka president wins re-election - state TV, பிபிசி, சனவரி 27, 2010
- ↑ Rajapaksa registers landslide win in Sri Lanka presidential poll பரணிடப்பட்டது 2010-01-28 at the வந்தவழி இயந்திரம், த இந்து, சனவரி 27, 2010
- ↑ "Presidential Election – 2010". slelections.gov.lk. Department of Elections (Sri Lanka). 2010. 27 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 January 2010 அன்று பார்க்கப்பட்டது.