ம. க. சிவாஜிலிங்கம்

(எம். கே. சிவாஜிலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (Mahalingam Kanagalingam Shivajilingam) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

எம். கே. சிவாஜிலிங்கம்
இலங்கை நாடாளுமன்றம்
யாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
2001–2010
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2013–2018
வல்வெட்டித்துறை நகரசபை துணைத்தலைவர்
பதவியில்
2011–2013
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புoder3
ஆகத்து 15, 1957 (1957-08-15) (அகவை 67)
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
இறப்புoder3
இளைப்பாறுமிடம்oder3
தேசியம்இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சிதமிழ்த் தேசியக் கட்சி இலங்கை
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (2010-2011)
தமிழீழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(2001-2010, 2011-2019)
பெற்றோர்
  • oder3

அரசியலில்

தொகு

2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவாஜிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[1] 2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

சிவாஜிலிங்கம் 2010 அரசுத்தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடு 9,662 வாக்குகளைப் பெற்று (0.09%) ஒன்பதாவதாக வந்து தோல்வியடைந்தார்.[3]

2010 தேர்தலில் இவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர் பட்டியலில் இணைக்கவில்லை. இதனை அடுத்து இவர் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இலிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இலிருந்தும் விலகி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.[4] இக்கூட்டமைப்பின் சார்பில் இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2011 சூன் மாதத்தில் தனது கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் டெலோ, மற்றும் ததேகூ இல் இணைந்தார்.[5]

 
2014 ஆகத்து 30, வவுனியா: அனைத்துலக காணாமற்போனோர் நாள் நிகழ்வில் சிவாஜிலிங்கம்

சிவாஜிலிங்கம் 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வல்வெட்டித்துறை நகரசபைக்குப் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] 2013 மாகாணசபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானார்.[7][8] மாகாண சபை உறுப்பினருக்கான பதவிப் பிரமானத்தை முள்ளிவாய்க்கால் கிராமத்தில் சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் எடுத்துக் கொண்டார்.[9][10][11]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கம் சுயேட்சைக் குழு ஒன்றில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டார். இவரது குழு எந்த நாடாளுமன்ற இடங்களையும் பெறவில்லை.[12][13][14]

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election 2001 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.
  2. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.
  3. "PRESIDENTIAL ELECTION – 2010 Official Results - All Island Final Result". இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.
  4. "New Tamil alliance in Sri Lanka says TNA betrayed Tamils". Colombo Page. 23 பெப்ரவரி 2010 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303170139/http://www.colombopage.com/archive_10/Feb1266911405CH.html. 
  5. "Sivajilingam, Sri Kantha decide to join TNA, restructure TELO". தமிழ்நெட். 25 சூன் 2011. http://tamilnet.com/art.html?catid=13&artid=34110. 
  6. "PREFERENCES" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 21 செப்டம்பர் 2015. 
  8. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லிமிரர். 26 செப்டம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 16 சனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116012528/http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  9. Balachandran, P. K. (14 அக்டோபர் 2013). "TNA member Sivajilingam breaks away, takes oaths at Mullivaikkal". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/TNA-member-Sivajilingam-breaks-away-takes-oaths-at-Mullivaikkal/2013/10/14/article1835163.ece. 
  10. "PLOTE members take oaths". டெய்லி எஃப்டி. 15 அக்டோபர் 2013. http://www.ft.lk/article/201518/PLOTE-members-take-oaths. 
  11. "Shivajilingam takes oaths in Mullivaikal". Eye Sri Lanka. 14 அக்டோபர் 2013. http://www.eyesrilanka.com/2013/10/14/shivajilingam-takes-oaths-in-mullivaikal/. 
  12. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1923/03. 13 July 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jul/1923_03/1923_03E.pdf. பார்த்த நாள்: 21 செப்டம்பர் 2015. 
  13. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  14. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._க._சிவாஜிலிங்கம்&oldid=3940518" இலிருந்து மீள்விக்கப்பட்டது