சரத் பொன்சேகா

ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பிறப்பு: 18 திசம்பர் 1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கின்றார்.

சரத் பொன்சேகா
Sarath Fonseka
பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 பெப்ரவரி 2016
இலங்கை நாடாளுமன்றத் தேசியப் பட்டியல் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
09 பெப்ரவரி 2016
முன்னையவர்எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 7 அக்டோபர் 2010
சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 ஏப்ரல் 2013
பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர்
பதவியில்
15 சூலை 2009 – 30 நவம்பர் 2009
இராணுவத் தளபதி
பதவியில்
6 டிசம்பர் 2005 – 15 சூலை 2009
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கார்திகேவா சரத் சந்திரலால் பொன்சேகா

18 திசம்பர் 1950 (1950-12-18) (அகவை 73)
அம்பலாங்கொடை, இலங்கை
அரசியல் கட்சிசனநாயகக் கடி
(2013 - இன்று)
சனநாயகத் தேசியக் கூட்டணி
(2010 - 2013)
புதிய சனநாயக முன்னணி
(2009–2010)
துணைவர்அனோமா பொன்சேகா
பிள்ளைகள்அபர்ணா, அப்சரா
முன்னாள் கல்லூரிமடவலலந்தை மகா வித்தியாலயம், அம்பாறை,
தர்மசோகா கல்லூரி, அம்பலாங்கொடை

ஆனந்தா கல்லூரி
வேலைஅரசியல்வாதி
இராணுவ அதிகாரி
Military service
பற்றிணைப்புஇலங்கை
கிளை/சேவைஇலங்கைத் தரைப்படை
சேவை ஆண்டுகள்1970–2009,
2015–இன்று
தரம்பீல்டு மார்சல்
அலகுஇலங்கை சிங்கப் படை
கட்டளைஇராணுவத் தளபதி
போர்கள்/யுத்தங்கள்ஈழப் போர்,
1987-89 ஜேவிபி புரட்சி
விருதுகள்

இவர் தமிழ் மக்கள் 20,000க்கும் மேற்பட்டோரை வன்னி போர்முனைப் பகுதியில் படுகொலை செய்வதற்குக் காரணமான முக்கிய சூத்திரதாரியாக பன்னாட்டு மனிதாபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டார். நவம்பர் 16, 2009 அன்று தனது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.[1][2]

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் என இலங்கை அரசினால் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்[3].

மீண்டும் பதவியில்

தொகு

மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றபின், சரத் பொன்சேகா மீண்டும் இலங்கை இராணுவத்தின் தலைமைப் படைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.[4]. 22 மார்ச் 2015இல் இலங்கை இராணுவத்தின் முதல் பீல்டு மார்சல் எனும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என கூறப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

தொகு


  1. இலங்கை தளபதி திடீர் பதவிவிலகல் பிபிசி செய்தி, பெறப்பட்டது 16 நவம்பர் 2009.
  2. இலங்கை இராணுவ தலைவர் பதவி விலகினார் பிபிசி செய்தி, பெறப்பட்டது 12 நவம்பர் 2009.
  3. Fonseka convicted by Sri Lanka court martial (ஆங்கில மொழியில்)
  4. http://edition.cnn.com/2015/01/22/world/sri-lanka-fonseka/ Sri Lanka's ex-army chief Sarath Fonseka reinstated by new government
  5. http://www.asianmirror.lk/news/item/7439-sarath-fonseka-to-be-appointed-field-marshal பரணிடப்பட்டது 2015-03-15 at the வந்தவழி இயந்திரம் Sarath Fonseka To Be Appointed Field Marshal?
  6. பீல்ட் மார்ஷலானார் சரத் பொன்சேகா
  1. பிபிசி செய்திகள்
  2. லங்கா செய்திகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்_பொன்சேகா&oldid=4035007" இலிருந்து மீள்விக்கப்பட்டது