எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா
எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா (M. K. A. D. S. Gunawardana, மார்ச்சு 6, 1947 - 19 சனவரி 2016), இலங்கை அரசியல்வாதி ஆவார். நீண்ட காலம் இலங்கை சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்.[1] இவர் மூன்று தடவைகள் திருகோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகிந்த ராசபக்ச அரசில் பிரதி அமைச்சராக இருந்த இவர் 2014 ஆம் ஆண்டில் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முகமாக ராசபக்சவின் அரசில் இருந்து விலகினார். 2015 பொதுத் தேர்தலில் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார்.[2] ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, இவர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு காணி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா M. K. A. D. S. Gunawardana நா.உ. | |
---|---|
![]() | |
காணி அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – 16 சனவரி 2016 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னவர் | ஜானக பண்டார தென்னக்கூன் |
புத்தசாசன, சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் | |
பதவியில் 2010 – 21 நவம்பர் 2014 | |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2015 – 19 சனவரி 2016 | |
பின்வந்தவர் | சரத் பொன்சேகா |
திருகோணமலை மாவட்டம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2010–2015 | |
பதவியில் 2000–2004 | |
பதவியில் 1989–1994 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 6 மார்ச்சு 1947 |
இறப்பு | 19 சனவரி 2016 கொழும்பு | (அகவை 68)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி (2015-2016) இலங்கை சுதந்திரக் கட்சி (before 2015) |
பிற அரசியல் சார்புகள் |
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (2015-2016) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (2004-2015) |
பணி | வேளாண்மை |
சமயம் | பௌத்தம் |
கம்பகாவில் வசித்து வந்த இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், ஒரு பண்ணை உரிமையாளர்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "M.K.A.D.S. GUNAWARDANA, M.P.". http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/87. பார்த்த நாள்: 15 டிசம்பர் 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304195103/http://www.ceylontoday.lk/16-98033-news-detail-rajitha-arjuna-mkds-join-unp.html.