நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (United National Front for Good Governance, UNFGG சிங்களம்: යහපාලනය සඳහා වූ එක්සත් ජාතික පෙරමුණ) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணியாகும். இக்கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு 2015 சூலை 12 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.[1]
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி United National Front for Good Governance | |
---|---|
යහපාලනය සඳහා වූ එක්සත් ජාතික පෙරමුණ | |
தலைவர் | ரணில் விக்கிரமசிங்க |
தொடக்கம் | 12 சூலை 2015 |
இலங்கை அரசியல் |
2015 நாடாளுமன்றத் தேர்தல்
தொகு2015 ஆகத்து 17 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவராக முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிருப்தி அடைந்த சிங்கள தேசியவாதக் கட்சியான ஜாதிக எல உறுமய அக்கூட்டணியில் இருந்து 2015 சூலை 5 இல் விலகி, கூட்டணியில் இருந்து விலகிய மேலும் சிலருடன் இணைந்து தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.[2][3]
இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் சார்பில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எம். கே. டி. எஸ். குணவர்தன மற்றும் ஜாதிக எல உறுமய கட்சியின் தலைவர்கள் சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோருக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் 2015 சூலை 12 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இக்கூட்டணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாததால் 2015 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டது.[1]
கூட்டுக் கட்சிகள்
தொகு- ஐக்கிய தேசியக் கட்சி
- ஜாதிக எல உறுமய
- ஐக்கிய இடது முன்னணி[4]
- இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்த குழு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "'நல்லாட்சிக்கான ஐ.தே. முன்னணி'; புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து". பிபிசி தமிழோசை. 12 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015.
- ↑ JHU to contest under a new front
- ↑ Zacki Jabbar (12 சூலை 2015). "Presidential election victors regroup for parliamentary polls". தி ஐலண்டு. Archived from the original on 2015-08-04. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015.
- ↑ "Left breakaways join UNFGG". டெய்லிமிரர். 13 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2015.