அர்ஜுன றணதுங்க

(அர்ஜுன ரணதுங்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அர்ஜுன றணதுங்க (பிறப்பு - டிசம்பர் 1, 1963) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர். இவர் ஆனந்தக் கல்லூரியில் கல்விகற்றார். இடதுகைத் துடுப்பாளராகவும் மத்திம வேக சுழல் பந்தாளராகவும் விளையாடிய இவரது தலைமைத்துவத்திலேயே இலங்கை அணி 1996 இல் உலகக் கோப்பையை வென்றது. இவர் 2000 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

அர்ஜுன றணதுங்க
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு1 திசம்பர் 1963 (1963-12-01) (அகவை 61)
கம்பகா, இலங்கை
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை
பங்குமட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1982–2001சிங்கள விளையாட்டுக்கள் குழு (Sinhalese Sports Club)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப
ஆட்டங்கள் 93 269
ஓட்டங்கள் 5,103 7,456
மட்டையாட்ட சராசரி 35.69 35.84
100கள்/50கள் 4/38 4/49
அதியுயர் ஓட்டம் 135* 131*
வீசிய பந்துகள் 2373 4710
வீழ்த்தல்கள் 16 79
பந்துவீச்சு சராசரி 65.00 47.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/17 4/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
47/– 63/–
மூலம்: [1], 11 பெப்ரவரி 2013

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.இவர் 2015 செப்டம்பர் 4 அன்று துறைமுகங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

50/4,C பெலவத்தை ரோட், நுகேகொடயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர்
ரஞன் மடுகல்லே
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர்
1988/89-1999
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன_றணதுங்க&oldid=3765484" இலிருந்து மீள்விக்கப்பட்டது