முதன்மை பட்டியைத் திறக்கவும்

தேர்வுத் துடுப்பாட்டம்

ஐந்து நாள்கள் நடைபெறக்கூடிய துடுப்பாட்டம்

தேர்வுத் துடுப்பாட்டம் (test cricket match) (டெஸ்ட்/ரெஸ்ற் போட்டி) துடுப்பாட்ட வகைகளில் ஒன்றாகும். துடுப்பாட்ட வகைகளில் மிக நீண்டதும் இதுவே. பொதுவாக தகுதி வழங்கப்பட்ட நாடுகளுக்கிடையில் மட்டுமே நடைபெறுகிறது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காள தேசம் ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் நாடுகளாகும்.

அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15 1877 முதல் மார்ச் 19 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

[1] 100 ஆவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணி முதல் போட்டி போலவே 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [2]

இவற்றையும் பார்க்கவும்தொகு

சான்றுகள்தொகு