முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆட்டப்பகுதி (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் களமிறங்கி மட்டையாடும் அணியின் ஆட்ட நேரத்தைக் குறிக்கும்
(ஆட்டப் பகுதி (துடுப்பாட்டம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆட்டப்பகுதி (Innings) என்பது துடுப்பாட்டத்தில் களமிறங்கி மட்டையாடும் ஒரு அணி அல்லது அதன் மட்டையாளரின் ஆட்ட நேரத்தைக் குறிக்கும்.[1] ஒரு அணியின் ஆட்டப்பகுதி முடித்த பிறகு அடுத்த ஆட்டப்பகுதியில் அதன் எதிரணி களமிறங்கும். இறுதியாக தனது ஆட்டப் பகுதியில் எதிரணியை அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள அணி வெற்றி பெறும். பொதுவாக முதல்-தரப் போட்டிகளில் 4 ஆட்டப்பகுதிகளும் ஒருநாள் போட்டிகளில் 2 ஆட்டப்பகுதிகளும் இடம்பெறும்.

ஆட்டப்பகுதியின் முடிவுதொகு

ஒரு அணியின் ஆட்டப்பகுதி முடிவுக்கு வரும் முறைகள் பின்வருமாறு:

  • பத்து மட்டையாளர்கள் ஆட்டமிழந்து வெளியேறுதல் (பொது)
  • வெற்றிக்குத் தேவையான இலக்கை எட்டுதல் (பொது)
  • ஆட்ட நேரம் முடிதல் (தேர்வுத் துடு.)
  • நிறைவுகளின் அளவு முடிதல் (ஒருநாள் துடு.)
  • ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அணித்தலைவர் அறிவித்தல் (தேர்வுத் துடு.)
  • பந்துவீசும் அணி போட்டியில் இருந்து விலகுதல் (தேர்வுத் துடு.)

மேற்கோள்கள்தொகு