முதல் தரத் துடுப்பாட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முதல் தரத் துடுப்பாட்டம் (First-class cricket) என்பது மூன்று அல்லது கூடுதல் நாட்களுக்கு பதினொருவர் கொண்ட இரு அணிகளிடையே நடைபெறும் துடுப்பாட்டப் போட்டிகள், போட்டியிடும் அணிகளின் தரத்தைக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. இப்போட்டிகளில் நடைமுறையில் ஓர் அணி ஒருமுறை மட்டுமே அல்லது விளையாடாது போனாலும், இரு அணிகளும் இருமுறை ஆட இயலுமாறு இருக்க வேண்டும்.
மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டங்கள், ஒரு விக்கெட் போட்டிகள் போன்ற பெரும் போட்டிகள் உயர்தரத்தில் நடத்தப்பட்டாலும், முதல் தர துடுப்பாட்டத்தில் சேர்க்கப்படாது.
தேர்வுத் துடுப்பாட்டம், மிக உயர்ந்த தர பெரும் துடுப்பாட்டமாக இருப்பினும், முதல்தர துடுப்பாட்ட தகுதியில் இருப்பினும், உள்நாட்டு போட்டிகளே "முதல்தரம்" என்று பொதுவாக குறிக்கப்படுகின்றன. ஓர் துடுப்பாட்டாளரின் முதல்தரத் துடுப்பாட்ட புள்ளிவிவரங்களில் தேர்வுத் துடுப்பாட்ட புள்ளிகளும் சேர்க்கப்படுகின்றன.
பொதுவாக, முதல்-தர விளையாட்டுகளில் பதினோரு வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பர். ஆயினும் சில விலக்குகளையும் காணலாம். அதேபோல முதல்தர போட்டிகள் குறைந்தது மூன்று நாட்கள் காலநீட்சி உடையனவாக இருக்கவேண்டுமென்றாலும் வரலாற்றில் சில விலக்குகள் இருந்திருக்கின்றன.
ஓர் புவியியல் வலயத்தைச் சார்ந்து, ஓர் ஆங்கில கௌன்டி, ஆத்திரேலிய மாநிலம்/ இந்திய மாநிலம், அல்லது மேற்கிந்திய நாடு போன்று முதல்தரத் துடுப்பாட்ட அணிகள் அமைகின்றன.
மேலும் படிக்க
தொகு- விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு – முக்கியமாக 1895 மற்றும் 1948 பதிப்புகள்