வீச்சு (துடுப்பாட்டம்)

பந்துவீச்சாளர் மட்டையாளரை நோக்கி பந்துவீசும் நிகழ்வு

துடுப்பாட்டத்தில் வீச்சு (Delivery) என்பது ஒரு பந்து வீச்சாளர் மட்டையாடுபவரை நோக்கி பந்துவீசும் நிகழ்வைக் குறிக்கிறது. களத்தடுப்பு செய்யும் அணியில் இருந்து ஒருவர் வந்து பந்துவீசுவார். ஆறு வீச்சுகளை உள்ளடக்கியது ஒரு நிறைவு (Over) ஆகும்.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஒன்றில் மட்டையாளர் அடம் கில்கிறிஸ்ற்க்கு சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்துவீசும் காட்சி

வீசுகளத்தில் மட்டையாடுபவருக்கு நேரெதிரே உள்ள முனையில் இருந்து பந்து வீச்சாளர் தனது இடது அல்லது வலது கை கொண்டு பந்து வீசுவார்.

வீச்சு வகைகள்

தொகு

பொதுவாக பந்து வீச்சாளர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்று இருவகைகளாகப் பிரிக்கலாம். வீசப்படும் பந்து நிலத்தில் பட்டு எழும்பி மட்டையாளரை நோக்கிச் செல்லும் தூரம் வீச்சின் நீளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீளத்தின் வரம்பு குத்து வீச்சில் இருந்து நேர்க்கூர் வீச்சு வரை இருக்கும்.

ஒரு வீச்சாளர் பந்து வீசுவதற்கு பல்வேறு முறைககளைக் கையாள்வார். அவை வீச்சின் நுட்பம், பந்து வீச்சாளர் தன் கை மற்றும் விரல்களைப் பயன்படுத்தும் விதம், பந்தின் விளிம்பைப் பயன்படுத்தும் விதம், பந்தைக் கையில் நிலைநிறுத்தும் விதம், இழப்பை நோக்கி பந்து வீசும் விதம், பந்தின் வேகம் மற்றும் பந்து வீச்சாளரின் தந்திரமான நோக்கம் போன்ற பண்புகளால் வேறுபடுகின்றன.

வீச்சு முறைகள்:

  • சுழல் வீச்சுகள்
    • காற்சுழல் (Leg spin)
    • விலகுசுழல் (Off spin)
  • வேக வீச்சுகள்
    • துள்ளு வீச்சு (Bouncer)
    • மாறு வீச்சு (Swing)
    • விரைவுச்சுழல் (Cutter)
    • நேர்க்கூர் வீச்சு (Yorker)

முறையற்ற வீச்சு

தொகு

முறையற்ற வகையில் பந்துவீசுவது முறையற்ற வீச்சு என்று அழைக்கப்படுகிறது. இது நிறைவில் ஒன்றாகக் கணக்கிடப்படாது. எனவே அதை ஈடுகட்ட பந்து வீச்சாளர் கூடுதலாக ஒரு பந்து வீச வேண்டும். அத்துடன் மட்டையாடும் அணிக்குக் கூடுதலாக ஒரு ஓட்டம் வழங்கப்படும். முறையற்ற வீச்சில் பிழை வீச்சு (no ball) மற்றும் அகல வீச்சு (wide) என்று இரு வகைகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீச்சு_(துடுப்பாட்டம்)&oldid=2866709" இலிருந்து மீள்விக்கப்பட்டது