சனத் ஜயசூரியா

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்
(சனத் ஜெயசூரிய இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசபந்து சனத் தெரன் ஜயசூரிய (Sanath Teran Jayasuriya (சிங்களம்: සනත් ටෙරාන් ජයසූරිය பிறப்பு: ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் மற்றும் தலைவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் பரவலாக அறியப்படுகிறார்.[3]

சனத் ஜயசூரிய
සනත් ජයසූරිය
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சனத் தெரன் ஜயசூரியா
பிறப்பு30 சூன் 1969 (1969-06-30) (அகவை 55)
மாத்தறை, சிலோன்
பட்டப்பெயர்மாஸ்டர் பிளாஸ்டர்,[1] மதாரா மாலர்[2]
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர்
பங்குமட்டையாளர் மற்றும் இடதுகை மரபுவழா சுழல் வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 49)22–26 பெப்ரவரி 1991 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு1–5 டிசம்பர் 2007 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 58)26 டிசம்பர் 1989 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப28 ஜூன் 2011 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்07
இ20ப அறிமுகம் (தொப்பி 4)15 ஜூன் 2006 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப25 ஜூன் 2011 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1994 – presentபுளூம் ஃபீல்டு
2005சாமர்செட்
2007மேரிலெபோன் துடுப்பாட்ட சங்கம்
2007லங்காஷயர்
2008வார்விக்‌ஷயர்
2008–2010மும்பை இந்தியன்ஸ்
2010வார்விக்‌ஷயர்
2011ருஹுன்ஹா ரைனோஸ்
2012குல்னா ராயல்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 110 445 264 557
ஓட்டங்கள் 6973 13430 14782 16128
மட்டையாட்ட சராசரி 40.07 32.36 45.56 31.19
100கள்/50கள் 14/31 28/68 29/70 31/82
அதியுயர் ஓட்டம் 340 189 340 189
வீசிய பந்துகள் 8,188 14874 15,221 17,730
வீழ்த்தல்கள் 98 323 205 413
பந்துவீச்சு சராசரி 34.34 36.75 33.12 34.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 4 2 5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/34 6/29 5/34 6/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
78/0 123/0 162/0 153/0
மூலம்: Cricinfo player profile, 27 டிசம்பர் 2011
சனத் ஜயசூரிய
நாடாளுமன்ற உறுப்பினர்
மாத்தறை
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 26 ஜூன் 2015
பெரும்பான்மை74,352 விருப்ப வாக்குகள்
மாகாண சபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர்
பதவியில்
10 ஜூன் 2015 – 17 ஆகத்து 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
உள்ளூராட்சி மற்றும் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சர்
பதவியில்
12 ஜனவரி 2015 – 10 ஜூன் 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
தபால் சேவைகள் பிரதி அமைச்சர்
பதவியில்
28 ஜனவரி 2013 – 12 ஜனவரி 2015
குடியரசுத் தலைவர்மஹிந்த ராஜபக்ச
பிரதமர்தி. மு. ஜயரத்ன
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.[4] மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[5][6] 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் 1997 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது.[7] 1993 முதல் 2003 ஆம் ஆண்டு வரை இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.

டிசம்பர் 2007 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும், சூன் 2011 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் தேர்வுக் காலத்தில் தான் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.[8] மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் அஞ்சல் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.[9]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

சனத் ஜயசூரியா சூன் 30, 1969 இல் தென் இலங்கையிலுள்ள மாத்தறையில் பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது கல்லூரியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.[10]

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

1997 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 340 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் ரொசான் மகாநாமவுடன் இணைந்து 576 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளும் 2006 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது மகேல ஜயவர்தன 374 ஓட்டங்களும் , குமார் சங்கக்காரவுடன் இணைந்து 624 ஓட்டங்களும் எடுத்து தகர்த்தனர். செப்டம்பர் 20, 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற வங்கதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் மூலம் நூறாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இலங்கை வீரர் மற்றும் 33 வது சர்வதேச வீரர் ஆவார்.

ஏப்ரல் 2006 இல் ஓய்வு பெற இருப்பதாக தனது விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு மே 2006 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாது , மூன்றாவது போட்டியில் விளையாடினார்.[11]

ஒருநாள் போட்டிகள்

தொகு

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விரைவாக ஓட்டங்களை பல முறை எடுத்தவர் எனும்  சாதனையை இவர் படைத்துள்ளார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 17  பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே அணிக்கு எதிராக 48 பந்துகளில் 100 ஓட்டங்களையும்,  இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 95 பந்துகளில் இவர் விரைவாக 150 ஓட்டங்களை எடுத்தார்.  இவர் விரைவாக எடுத்த 50 ஓட்டங்கள் எனும் சாதனையானது 19 ஆண்டுகள் எந்த ஒரு வீரராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. மேலும் பவர் பிளே போன்ற எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாத சமயத்தில் இவர் விரைவாக 50 ஓட்டங்கள் எடுத்தது தற்போது வரை சிறந்த 50 ஓட்டங்களாக கருதப்படுகிறது.  பின்னர் ஏ பி டிவில்லியர்ஸ் இந்தச் சாதனையை முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் இவர் மட்டுமே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நான்கு முறை 150 ஓட்டங்களுக்கு மேலாக எடுத்துள்ளனர். இதில் இவர் மட்டும் இரு முறை தொடர்ச்சியாக 150க்கும் மேலான ஓட்டங்களை எடுத்துள்ளார்.

2000 ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.  இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 189 ஓட்டங்களை எடுத்தார் இதுவே இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.  அந்த சமயத்தில் இது மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது மேலும் இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் இதுவே இந்த இடத்தில் இருந்தது.  தற்போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இவர் 11வது இடத்தில் உள்ளார்.

பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 48 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார். பின்னாளில் இந்தச் சாதனை சகித் அப்ரிதியால் முறியடிக்கப்பட்டது. மேலும் அவர் 37 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார். பின்னர் அப்ரிதியின் சாதனையினை நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் முறியடித்தார். அவர் 36 பந்துகளில் இந்தச் சாதனை படைத்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் ஏ. பி. டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் இந்தச் சாதனையினை முறியடித்தார்.ஜயசூரியா ஒருநாள் போட்டிகளில் 270 ஆறு ஓட்டங்களை அடித்து , அதிக ஆறு ஓட்டங்களை அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார். ஆசியக் கோப்பைத் தொடரின் போது இந்தச் சாதனையானது சகித் அப்ரிதியால் முறியடிக்கப்பட்டது. மேலும் 10, 000 ஓட்டங்களை கடந்த நான்காவது வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 12, 000 மற்றும் 13, 000 ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.28 நூறு ஓட்டங்களை எடுத்துள்ள இவர் அதிக நூறு ஓட்டங்களை எடுத்த வீரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார். ஒரே நிறைவுகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையினையும் இவர் படைத்துள்ளார். 30 ஓட்டங்களை இவர் இருமுறை எடுத்துள்ளார். பின்னர் இந்தச் சாதனையானது தென்னாப்பிரிக்க வீரர் ஹிப்ஸ் என்பவரால் முறியடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Amit, M.Shamil (13 டிசம்பர் 2002). "Officials in comedy of errors at sporting spectacle". Sunday Times. http://sundaytimes.lk/020811/sports/1.html. பார்த்த நாள்: 28 ஆகஸ்ட் 2009. 
  2. Abeysinghe, Roshan (25 ஏப்ரல் 2010). "‘Matara Mauler’ enters Parliament". Sunday Times. http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html. பார்த்த நாள்: 29 டிசம்பர் 2011. 
  3. "Biographies of Present Members". The Parliament of Sri Lanka. Archived from the original on 27 October 2010.
  4. Rex Clementine (2011). "The legend who made us look stupid". The Island Online. Archived from the original on 2012-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
  5. "Cricket Legends". Talk Cricket. 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
  6. "Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today". Asian Tribune. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  7. "Wisden – 1997". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20. "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."
  8. "Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara". Asian Tribune. 9 April 2010. http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara. 
  9. "Nine deputy ministers sworn in before President in Sri Lanka". Colombopage. 10 October 2013 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303205345/http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php. 
  10. Fernando, Leslie (22 June 2008). "Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988". sunday observer இம் மூலத்தில் இருந்து 5 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp. பார்த்த நாள்: 6 October 2012. 
  11. http://content-aus.cricinfo.com/engvsl/content/story/249041.html

வெளியிணைப்புகள்

தொகு

வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

விருதுகளும் சாதனைகளும்
முன்னர் Wisden Leading Cricketer in the World
1996
பின்னர்
விளையாட்டு தரவரிசை
முன்னர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (தேர்வு)
1999–2003
பின்னர்
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (ஒருநாள்)
1999–2003
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனத்_ஜயசூரியா&oldid=3586866" இலிருந்து மீள்விக்கப்பட்டது