முதன்மை பட்டியைத் திறக்கவும்
அவுஸ்திரேலியா எதிர் இந்தியா ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்ட போட்டி

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் என்பது இரு நாட்டு துடுப்பாட்ட அணிகளுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்கள் கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது "மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் பன்னாட்டுப் போட்டி" எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒதுக்கப்படுவது உண்டு.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். 1971 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகத் தடைப்படவே, போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டபோது குழுமியிருந்த பார்வையாளருக்காக 8 பந்துகளைக் கொண்ட 40 பந்து பரிமாற்றங்களுடன் ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி ஜனவரி 5 1971அன்று அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. 1970களில் அவுஸ்திரேலிய பதிப்பாளர் கேரி பார்கர் என்பவர் உலகத் தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இதில் வர்ண சீருடைகள், வெள்ளைப்பந்து, செயற்கை ஒளி, விக்கெட் ஒலிவாங்கி போன்ற இன்றைய ஒருநாள் போட்டிகளில் உள்ள பல அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.

முதல் ஒருநாள் போட்டிதொகு

உலகின்முதல் ஒருநாள் போட்டி 1971 ஜனவரி 5 ஆம் திகதி ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் தலா எட்டுப் பந்து வீச்சுகளைக் கொண்ட நாற்பது நாற்பது பந்துப் பரிமாற்றங்களைக் கொண்டதாக அமைந்த இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 39.4 பந்துப் பரிமாற்றங்களில் 190 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 34.6 பந்துப் பரிமாற்றங்களில் 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள்தொகு

பன்னாட்டுத் துடுப்பாட்டச் சபை எந்தெந்த அணிகள் ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள் என்பதை தீர்மானிக்கிறது.

தேர்வு துடுப்பாட்டத் தகுதிபெற்ற 10 அணிகள் நிரந்தர ஒருநாள் தகுதியைக் கொண்டுள்ளன.

  ஆஸ்திரேலியா
  வங்காளதேசம்
  இங்கிலாந்து
  இந்தியா
  நியூசிலாந்து

  பாகிஸ்தான்
  தென்னாபிரிக்கா
  இலங்கை
  மேற்கிந்தியத்தீவுகள்
  சிம்பாப்வே

இவற்றுக்கு மேலதிகமாக பன்னாட்டு துடுப்பாட்டச் சபை தற்காலிக ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதியை வழங்கும். தற்போது பின்வரும் அணிகளுக்கு அது வழங்கப்பட்டுள்ளது.

  பெர்மியூடா
  கனடா
  கென்யா

  அயர்லாந்து
  நெதர்லாந்து
  ஸ்காட்லாந்து

உசாத்துணைகள்தொகு