நேபாளத் தேசியத் துடுப்பாட்ட அணி
நேபாளத் தேசியத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் நேபாள நாட்டின் சார்பாக பங்கெடுக்கும் தேசிய துடுப்பாட்ட அணியாகும். 1988இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் உறுப்பினராகச் சேர்ந்து (affiliate member) 1996இலிருந்து இணை உறுப்பினராக உள்ளது. [1]
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | பராசு கட்கா |
பயிற்றுநர் | புபுது தசநாயக்க |
அணித் தகவல் | |
உருவாக்கம் | 1988 (ப.து.அவையில் இணைந்தது) |
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | |
ஐசிசி நிலை | Associate member |
ஐசிசி மண்டலம் | ஆசியா |
உதுச | Two |
பன்னாட்டுத் துடுப்பாட்டம் | |
முதல் பன்னாட்டு | 6 September 1996 v வங்காளதேசம், மலேசியா |
இற்றை: 30 January 2014 |
பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 1996 முதல் பங்கேற்று வருகின்றனர். ஆசியத் துடுப்பாட்ட அவையின் ஏசிசி கோப்பை[2]ஏசிசி இருபது20 கோப்பை, 2001 ஐசிசி கோப்பை[3] மற்றும் இரு ஐசிசி கண்டமிடை கோப்பைகளில் பங்கேற்றுள்ளது.[2] 2010 ஆசிய விளையாட்டுக்களிலும் மிக அண்மையில் ஐசிசி உலக இருபது20 தகுதிநிலை போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளது. 2013ஆம் ஆண்டின் ஐசிசி உலக துடுப்பாட்ட லீக் மூன்றாம் டிவிசன் வெற்றியாளராக உள்ளது. நவம்பர் 27, 2013இல் நேபாளம் 2014 ஐசிசி உலக இருபது20க்கு தகுதி பெற்றது. இதுவே நேபாளம் பங்கெடுக்கும் முதல் பெரிய ஐசிசி போட்டியாகும். மலேசியாவில் மே 4, 2014 முதல் மே 10,2014 வரை நடைபெறவுள்ள ஆசியத் துடுப்பாட்ட அவையின் 2014 பிரீமியர் லிக்கில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Nepal at CricketArchive
- ↑ 2.0 2.1 Encyclopedia of World Cricket by Roy Morgan, Sports Books Publishing, 2007
- ↑ 2001 ICC Trophy at கிரிக்இன்ஃபோ