உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள்

ஐசிசி உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் (ICC World Cricket League) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் தேர்வுநிலை பெறாத நாடுகளின் துடுப்பாட்ட அணிகளிடையே நடத்தப்படும் ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். பன்னாட்டு அவையின் அனைத்து இணை மற்றும் கிளை உறுப்பினர்கள் இந்தப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றவர்கள். சங்கப்போட்டிகள் அமைப்பு|சங்கப்போட்டிகளில் கோட்டங்களிடையே மேலேற்றும் மற்றும் கீழிறக்கும் முறை உள்ளது. சங்கப்போட்டிகள் இரு நோக்கங்களுடன் செயல்படுகின்றன: அனைத்து இணை மற்றும் கிளை வாரிய அணிகள் பங்குகொள்ளும் விதமாக துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான தகுதிநிலை தேர்வுகளுக்கும் இத்தகைய பன்னாட்டு சீர்தரத்தில் இந்நாடுகளிடையே ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுகிறது.

உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
பட்டியல் அ
முதல் பதிப்புஉலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் 2007-09
போட்டித் தொடர் வடிவம்சங்கப்போட்டிகள் அமைப்பு
மொத்த அணிகள்87 நாடுகள்
தற்போதைய வாகையாளர்அயர்லாந்து
அதிகமுறை வெற்றிகள்அயர்லாந்து (1 வெற்றி)
உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் 2009-13

வெளியிணைப்புகள்

தொகு