முதன்மை பட்டியைத் திறக்கவும்
ஓர் இடதுகை மரபுவழா சுழற்பந்து வீச்சு.

இடதுகை மரபுவழா சுழல் (Left-arm orthodox spin) துடுப்பாட்டத்தில் கையாளப்படும் பந்து வீச்சுகளில் ஓர் வகையாகும். இது ஓர் இடதுகை சுழற்பந்து வீச்சாளரின் தாக்கும் வீச்சாகும் .

மாண்டி பனேசர் அடிலேய்ட் ஓவலில் இடதுகை மரபுவழா சுழற்பந்து வீசுதல்

இடதுகை ஆட்டக்காரர்கள் தங்கள் விரல்களைப் பயன்படுத்தி வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக (வீச்சாளரின் பார்வையில்) பந்தை சுழற்றி வீசும் பந்துவீச்சாகும். இடதுகை மரபுவழா வீச்சாளர்கள் பொதுவாக பந்தை காற்றில் மட்டையாளருக்கு நேராக வீசி களத்தில் பட்டெழுந்தவுடன் வலதுகை மட்டையாளரை விட்டு (புறக் குச்சத்தை நோக்கி) விலகுமாறு செய்வர். காற்றில் மிதக்கும்போது ஏற்படும் நகர்வும் திருப்பமும் வீச்சாளரின் ஆயுதங்களாகும். இந்தவகை வீச்சாளரின் மாறுபாடுகள்: மேற்சுழல் (திருப்பம் குறைவாகவும் மேலெழும்பும் உயரம் கூடுதலாகவோ குறைவாகவோ இருத்தல்),நேர்ச் சுழல் (திருப்பமே இல்லாது வலதுகை மட்டையாளருக்கு வீச்சாளரின் வீசு கையின் திசையிலேயே வருதல்;'மிதவை' என்றும் கூறப்படுவதுண்டு) மற்றும் இடதுகை வீச்சாளரின் தூஸ்ரா (எதிர்த்திசை திருப்பம்) .

புகழ்பெற்ற இடதுகை மரபுவழா சுழற்பந்து வீச்சாளர்களில் சிலர்:நியூசிலாந்து அணித்தலைவர் டேனியல் வெட்டோரி [1] முன்னாள் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆஷ்லே கைல்ஸ் [2],டெரெக் அன்டர்வுட் (இங்கிலாந்து), சர் கேரி சோபர்ஸ், மற்றும் பிசன் சிங் பேடி.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடதுகை_மரபுவழா_சுழல்&oldid=1358562" இருந்து மீள்விக்கப்பட்டது