டேனியல் வெட்டோரி

டேனியல் லூகா வெட்டோரி (Daniel Luca Vettori, பிறப்பு: சனவரி 27 1979), நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். நியூசிலாந்து அணி விளையாடிய 200 ஆவது தேர்வுத் துடுப்பாட்டத்தின் தலைவராக இருந்தார்.

டேனியல் வெட்டோரி
Daniel Vettori, Dunedin, NZ, 2009.jpg
2009 இல் ஓவல் பல்கலைக்கழகத்தில்
நியூசிலாந்து நியூசிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் டேனியல் லூகா வெட்டோரி
பட்டப்பெயர் டன்
பிறப்பு 27 சனவரி 1979 (1979-01-27) (அகவை 40)
ஆக்லான்ட், நியூசிலாந்து
உயரம் 6 ft 3 in (1.91 m)
வகை சகலதுறை, அணித்தலைவர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை மரபுவழா சுழல்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 200) பிப்ரவரி 6, 1997: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு சனவரி 19, 2011: எ பாக்கிஸ்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 100) மார்ச்சு 25, 1997: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி 8 மார்ச், 2015:  எ பாக்கிஸ்தான்
சட்டை இல. 11
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 113 291 174 356
ஓட்டங்கள் 4,531 2,213 6,695 3,499
துடுப்பாட்ட சராசரி 30.00 17.15 29.62 20.10
100கள்/50கள் 6/23 0/4 9/34 2/10
அதிக ஓட்டங்கள் 140 83 140 138
பந்து வீச்சுகள் 28,814 13,877 42,258 17,173
இலக்குகள் 362 302 565 372
பந்துவீச்சு சராசரி 34.36 31.82 31.82 31.41
சுற்றில் 5 இலக்குகள் 20 2 33 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 3 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 7/87 5/7 7/87 5/7
பிடிகள்/ஸ்டம்புகள் 58/– 82/– 98/– 115–

மார்ச் 8, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

இவர் 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் 3000 ஓட்டங்கள் மற்றும் 300 இலக்குகளை வீழ்த்திய எட்டாவது வீரர் ஆவார். 1996-1997 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைவராக தனது 18 ஆவது வயதில் பொறுப்பேற்றார். இதன்மூலம் குறைந்த வயதில் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவரானவர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 112 தேர்வுத் துடுப்பாட்டங்களுக்கும்,284 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் தலைவராக இருந்தவர். இதன்மூலம் அதிக போட்டிகளுக்கு நியூசிலாந்தின் தலைவராக இருந்தவர் எனும் சாதனையைப் படைத்தார். இடதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளரான இவர் சகலத்துறையராக விளங்கினார்.

தேர்வுத் துடுப்பாட்டங்களில் இவரின் சராசரி 30 க்கும் அதிகமாக உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணியின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது பருவகாலத்தில் 550,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரோடு அனைத்துவடிவ போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.[1]

ஏப்ரல் 2, 2015 இல் பிரிசுபேன் ஹீட் அணிக்காக 3 ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் ஆனார். இவர் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், பிக் பாஷ் போட்டித் தொடரில் பிரிசுபேன் ஹீட் மற்றும் டி20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காகவும் தலைமைப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்.

மட்டையாளராகதொகு

வெட்டோரி சிறப்பான மட்டையாளராகவும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 4,000 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் ஆறு நூறுகளும் அடங்கும். 2011 ஆம் ஆண்டில்பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் நூறு அடித்தார். அந்தப் போட்டியில் 110 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் இதே அணிக்கு எதிராக 2009 இல் 134 ஓட்டங்களும், 2003 இல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 138* ஓட்டங்களும் எடுத்தார். 2009 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 140 ஓட்டங்களும், 2005 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக 127 ஓட்டங்கள், இதே ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 118 ஓட்டங்களும் எடுத்துள்ளார். மேலும் 53 அரைநூறுகளும் அடித்துள்ளார். தனது 47 ஆவது போட்டியிலேயே 1,000 ஓட்டங்களை எடுத்தார். தனது 2,000 ஓட்டஙகளை 22 போட்டிகளிலேயே எடுத்தார்.

பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 110 ஓட்டங்கள் எடுத்து அந்த அணி 356 ஓட்டங்கள் எடுப்பதற்கு உதவினார்.[2] இவரின் தேர்வு மட்டையாளர் சராசரி 30.60 ஆகும். ஆனால் பாக்கித்தான் அணிக்கு எதிராக 57.9 சராசரியைக் கொண்டுள்ளார். இவர் அடித்த 6 நூறுகளில் 3 பாக்கித்தான் அணிக்கு எதிரானது ஆகும்.

வ எ எதிரணி ஆட்டநாயகன் நாள் செயல்பாடு முடிவு
1   ஆத்திரேலியா N/A டிசம்பர், 2004 ஓட்டங்கள்: 33 (36 பந்துகள்: 2×4), சராசரி – 33.00, SR – 91.67

களத்தடுப்பு: 20–2–67–4, சராசரி – 16.75, எக்கானமி – 3.35

சமன்; 1–1[3]

சான்றுகள்தொகு

  1. "New Zealand's Daniel Vettori retires from international cricket". BBC Sport (BBC Sport). 31 March 2015. https://www.bbc.co.uk/sport/0/cricket/32127049. பார்த்த நாள்: 31 March 2015. 
  2. http://www.espncricinfo.com/new-zealand-v-pakistan-2010/content/story/496914.html
  3. "Chappell-Hadlee Trophy, 2004/05". ESPNcricinfo. 10 December 2004. http://www.espncricinfo.com/newzealand/engine/series/61162.html. பார்த்த நாள்: 21 March 2015. 

வெளியிணைப்புகள்தொகு

ICC Player Rankings

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_வெட்டோரி&oldid=2714167" இருந்து மீள்விக்கப்பட்டது