மும்பை இந்தியன்ஸ்

மும்பையின் ஐ.பி.எல் கிரிக்கெட் அணி

மும்பை இந்தியன்ஸ் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் மும்பை நகரை அடிப்படையாகக் கொண்டது. 2008இல் தொடங்கப்பட்ட இந்த அணி, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. தற்போது அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா உள்ளார். இந்த அணியின் முன்னாள் தலைவராக சச்சின் தெண்டுல்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஹர்திக் பாண்டியா
பயிற்றுநர்மகேல ஜயவர்தன[1]
உரிமையாளர்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்[2]
அணித் தகவல்
நகரம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
நிறங்கள்MI Blue
உருவாக்கம்24 January 2008; 16 ஆண்டுகள் முன்னர் (24 January 2008)
உள்ளக அரங்கம்வான்கேடே அரங்கம்
(கொள்ளளவு: 33,108)
Secondary home ground(s)பிரபோர்ன் அரங்கம் (கொள்ளளவு: 25,000)
வரலாறு
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள்5 (2013, 2015, 2017, 2019),2020)
சலீஇ20 வெற்றிகள்2 (2012, 2013)
அதிகாரபூர்வ இணையதளம்:www.mumbaiindians.com

இ20

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மிகவும் வெற்றிகரமான அணியாகும். இதுவரை நடைபெற்ற 12 தொடர்களில் 5 முறை பட்டம் வென்றுள்ளது. சாம்பின்ஸ் லீக் இ20ப தொடரில் இருமுறை பட்டம் வென்றுள்ளது.

உரிமைக்குழு வரலாறு

தொகு

செப்டம்பர் 2007இல், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அதன் முதல் பருவம் 2008ஆம் ஆண்டில் தொடங்கவிருந்தது. 20 பிப்ரவரி 2008இல் மும்பை உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மும்பையில் ஏலம் விடப்பட்டன அதில் மும்பை அணியை ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனம் 111.9 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் அந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியாக இருந்தது. முகேஷ் அம்பானி தலைமையிலான அந்நிறுவனம் மும்பை அணியின் உரிமைக்குழுவை 10 ஆண்டுகளுக்கு வாங்கியிருந்தது. பிறகு அந்த அணிக்கு "மும்பை இந்தியன்ஸ்" என்று பெயரிடப்பட்டது.

பருவங்கள்

தொகு
ஆண்டு ஐபிஎல் சாலீஇ20
2008 குழுநிலை தகுதிபெறவில்லை
2009 குழுநிலை தகுதிபெறவில்லை
2010 இரண்டாமிடம் குழுநிலை
2011 தகுதிச்சுற்று வாகையாளர்
2012 தகுதிச்சுற்று குழுநிலை
2013 வாகையாளர் வாகையாளர்
2014 தகுதிச்சுற்று தகுதி நிலை
2015 வாகையாளர் தொடர் கைவிடப்பட்டது
ஆண்டு ஐபிஎல்
2016 தகுதிச்சுற்று
2017 வாகையாளர்
2018 தகுதிச்சுற்று
2019 வாகையாளர்
2020 வாகையாளர்
2021 தகுதிச்சுற்று

வீரர்கள் பட்டியல்

தொகு
  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
28 அன்மோல்பிரீத் சிங்   28 மார்ச்சு 1998 (1998-03-28) (அகவை 26) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2019 80 லட்சம்
45 ரோகித் சர்மா   30 ஏப்ரல் 1987 (1987-04-30) (அகவை 37) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2018 15 கோடி தலைவர்
77 சூர்யகுமார் யாதவ்   14 செப்டம்பர் 1990 (1990-09-14) (அகவை 33) வலது-கை வலது-கை மிதம் 2018 3.2 கோடி
பன்முக வீரர்கள்
6 அனுகூல் ராய்   30 நவம்பர் 1998 (1998-11-30) (அகவை 25) இடது-கை மந்த இடது-கை வழமைச் சுழல் 2018 20 லட்சம்
19 ஜெயந்த் யாதவ்   22 சனவரி 1990 (1990-01-22) (அகவை 34) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2019 50 லட்சம்
24 குருணால் பாண்டியா   24 மார்ச்சு 1991 (1991-03-24) (அகவை 33) இடது-கை மந்த இடது-கை வழமைச் சுழல் 2018 8.8 கோடி
33 ஹர்திக் பாண்டியா   11 அக்டோபர் 1993 (1993-10-11) (அகவை 30) வலது-கை வலது-கை மிதம்-வேகம் 2018 11 கோடி
55 கீரோன் பொல்லார்ட்   12 மே 1987 (1987-05-12) (அகவை 37) வலது-கை வலது-கை மிதம்-வேகம் 2018 5.4 கோடி வெளிநாட்டு
N/A ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்   15 ஆகத்து 1998 (1998-08-15) (அகவை 26) இடது-கை வலது-கை வேகம்-மிதம் 2020 2 கோடி வெளிநாட்டு
இழப்புக் கவனிப்பாளர்கள்
13 குவின்டன் டி கொக்   17 திசம்பர் 1992 (1992-12-17) (அகவை 31) இடது-கை 2019 2.8 கோடி வெளிநாட்டு
27 ஆதித்ய தாரே   7 நவம்பர் 1987 (1987-11-07) (அகவை 36) வலது-கை 2018 20 லட்சம்
51 இஷான் கிஷான்   18 சூலை 1998 (1998-07-18) (அகவை 26) இடது-கை இடது-கை மிதம் 2018 6.2 கோடி
பந்து வீச்சாளர்கள்
1 ராகுல் சாஹர்   4 ஆகத்து 1999 (1999-08-04) (அகவை 25) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 1.9 கோடி
81 மிட்செல் மெக்கலெனகன்   11 சூன் 1986 (1986-06-11) (அகவை 38) இடது-கை இடது-கை வேகம்-மிதம் 2018 1 கோடி வெளிநாட்டு
93 ஜஸ்பிரித் பும்ரா   6 திசம்பர் 1993 (1993-12-06) (அகவை 30) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2018 7 கோடி
99 லசித் மாலிங்க   27 ஆகத்து 1983 (1983-08-27) (அகவை 41) வலது-கை வலது-கை வேகம் 2019 {2 கோடி வெளிநாட்டு
N/A டிரென்ட் போல்ட்   22 சூலை 1989 (1989-07-22) (அகவை 35) வலது-கை இடது-கை வேகம் 2020 2.2 கோடி வெளிநாட்டு
N/A தவால் குல்கர்னி   10 திசம்பர் 1988 (1988-12-10) (அகவை 35) வலது-கை வலது-கை மித வேகம் 2020 75 லட்சம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_இந்தியன்ஸ்&oldid=3979100" இலிருந்து மீள்விக்கப்பட்டது