பன்முக வீரர்

துடுப்பாட்ட பங்கு

துடுப்பாட்டத்தில் பன்முக வீரர் (All-rounder) என்பது மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டு பணிகளிலும் சிறந்து விளங்கும் வீரரைக் குறிக்கும். ஒரு அணியில் அனைத்து பந்து வீச்சாளர்களும் தங்கள் வாய்ப்பு வரும் போது மட்டையாடுவதும் சில மட்டையாளர்கள் எப்போதாவது பந்து வீசுவதும் இயல்பான நிகழ்வுகள் என்றாலும், பெரும்பாலான வீரர்கள் இரண்டு பிரிவுகளில் ஒன்றில் மட்டுமே திறமையானவர்களாகவும் தனித்துவம் பெற்றவர்களாகவும் கருதப்படுகின்றனர். சில இழப்புமுனைக் காப்பாளர்கள் சிறப்பாக மட்டையாடும் திறன்களைக் கொண்டுள்ளதால் அவர்களும் பன்முக வீரர்களாக அறியப்படுகின்றனர்.

2013 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் 42 உண்மையான பன்முக வீரர்கள் இருப்பதாக அலி பாக்கர் என்பவர் ஓர் புள்ளிவிவர பகுப்பாய்வினைப் பயன்படுத்தி அறிவித்தார். அதில் அவர் கேரி சோபர்ஸை சிறந்தவர் என்று மதிப்பிட்டார். அதில் ஜாக் காலிஸ் இரண்டாம் இடம் பெற்றார் . [1]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்முக_வீரர்&oldid=2900645" இலிருந்து மீள்விக்கப்பட்டது