குவின்டன் டி கொக்

குவின்டன் டி கொக் (Quinton de Kock, பிறப்பு: 17 டிசம்பர் 1992) என்பவர் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் தென்னாப்பிரிக்க நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார். ஜோகானஸ்பேர்க்கைச் சேர்ந்த இவர் தனது 16வது அகவையில் 19-வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சேர்ந்து விளையாடினார். இவர் ஒரு முதல்-வரிசை மட்டையாளரும், இழப்புக் கவனிப்பாளரும் ஆவார். 2012–13 காலப்பகுதியில் தேசிய அணியில் இணைந்து ஒரு-நாள், மற்றும் இ20ப போட்டிகளில் 2014 பெப்ரவரியில் இருந்து விளையாடத் தொடங்கினார். இந்தியன் பிரீமியர் லீக்கின் 2013 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும், 2014 தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் விளையாடினார். இவர் ஒரு-நாள் போட்டிகளில் அடுத்தடுத்த நூறுகளை அடித்த முதலாவது வீரராவார்.[1]

குவின்டன் டி கொக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்குவின்டன் டி கொக்
பிறப்பு17 திசம்பர் 1992 (1992-12-17) (அகவை 31)
ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
மட்டையாட்ட நடைஇடது-கை
பங்குமுதல்-வரிசை மட்டையாளர்
இழப்புக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 317)20 பிப்ரவரி 2014 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 105)19 சனவரி 2013 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்12
இ20ப அறிமுகம் (தொப்பி 54)21 திசம்பர் 2012 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–2015லயன்ஸ்
2015–தற்போதுடைட்டன்ஸ்
2013சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2014–2017டெல்லி டேர்டெவில்ஸ்
2018பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
2018கேப் டவுன் பிலிட்ஸ்
2019மும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 44 115 36 72
ஓட்டங்கள் 2,683 4,907 887 4,699
மட்டையாட்ட சராசரி 38.88 45.01 27.72 41.58
100கள்/50கள் 5/18 14/24 0/2 11/31
அதியுயர் ஓட்டம் 129* 178 59 194
வீசிய பந்துகள் 6
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
166/9 158/8 35/9 262/16
மூலம்: ESPNcricinfo, 26 டிசம்பர் 2019

பன்னாட்டு நூறுகள் தொகு

ஒரு-நாள் நூறுகள் தொகு

குவின்டன் டி கொக்கின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
# ஓட்டங்கள் எதிராக நகரம்/நாடு அரங்கு நாள் முடிவு
1 112   பாக்கித்தான்   அபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் சேக் சையது அரங்கு 8 நவம்பர் 2013 வெற்றி[2]
2 135   இந்தியா   ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா வான்டரர்ஸ் அரங்கு 8 திசம்பர் 2013 வெற்றி[3]
3 106   இந்தியா   டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்க்ஸ்மீட் அரங்கு 5 திசம்பர் 2013 வெற்றி[4]
4 101   இந்தியா   செஞ்ச்சூரியன், தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் பார்க் 11 திசம்பர் 2013 முடிவு இல்லை[5]
5 128   இலங்கை   அம்பாந்தோட்டை, இலங்கை மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் 12 சூலை 2014 வெற்றி[6]
6 107   ஆத்திரேலியா   சிட்னி, ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 23 நவம்பர் 2014 தோல்வி[7]
7 103   இந்தியா   ராஜ்கோட், இந்தியா சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம் 18 அக்டோபர் 2015 வெற்றி
8 109   இந்தியா   மும்பை, இந்தியா வான்கேடே அரங்கம் 25 அக்டோபர் 2015 வெற்றி
9 138*   இங்கிலாந்து   புளும்பொன்டின், தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் பார்க் 3 பிப்ரவரி 2016 தோல்வி
10 135   இங்கிலாந்து   செஞ்ச்சூரியன், தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் பார்க் 9 பிப்ரவரி 2016 வெற்றி
11 178   ஆத்திரேலியா   செஞ்ச்சூரியன், தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் பார்க் 30 செப்டம்பர் 2016 வெற்றி
12 109   இலங்கை   செஞ்ச்சூரியன், தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் பார்க் 10 பிப்ரவரி 2017 வெற்றி
13 168*   வங்காளதேசம்   கிம்பர்லே, தென்னாப்பிரிக்கா டயமண்ட் ஓவல் 15 அக்டோபர் 2017 வெற்றி
14 121   இலங்கை   டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்க்ஸ்மீட் அரங்கு 10 மார்ச் 2019 வெற்றி

தேர்வு நூறுகள் தொகு

குவின்டன் டி கொக்கின் தேர்வு நூறுகள்[8]
# ஓட்டங்கள் ஆட்டப்பகுதி எதிராக நகரம்/நாடு அரங்கு நாள் முடிவு
1 129* 1வது   இங்கிலாந்து   செஞ்ச்சூரியன், தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் பார்க் 22 சனவரி 2016 வெற்றி
2 104 1வது   ஆத்திரேலியா   ஹோபர்ட், ஆத்திரேலியா பெல்லேரிவ் ஓவல் 12 நவம்பர் 2016 வெற்றி
3 101 1வது   இலங்கை   கேப் டவுன், தென்னாப்பிரிக்கா நியூலேண்ட்ஸ் 2 சனவரி 2017 வெற்றி
4 129 2வது   ஆத்திரேலியா   ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா வான்டரர்ஸ் அரங்கம் 11 சனவரி 2019 வெற்றி
5 111 1வது   இந்தியா   விசாகப்பட்டினம், இந்தியா மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம் 2 அக்டோபர் 2019 தோல்வி

மேற்கோள்கள் தொகு

  1. "ICC CRICKET WORLD CUP TOP TEN: DEBUTANTS". Archived from the original on 2015-02-11. பார்க்கப்பட்ட நாள் 2015-03-18.
  2. "De Kock's maiden ODI ton, RSA v PAK Scorecard". Cricinfo. http://www.espncricinfo.com/pakistan-v-south-africa-2013-14/engine/match/649097.html. 
  3. "De Kock scores 2nd ODI ton to lead South Africa to victory against India". Cricinfo. http://www.espncricinfo.com/south-africa-v-india-2013-14/engine/match/648651.html. 
  4. "De Kock's successive ODI tons win South Africa the series 2–0 against India". Cricinfo. http://www.espncricinfo.com/south-africa-v-india-2013-14/engine/match/648653.html. 
  5. "IND vs RSA Scorecard". ESPN Cricinfo. 11 December 2013. http://www.espncricinfo.com/south-africa-v-india-2013-14/engine/current/match/648655.html. 
  6. . http://www.espncricinfo.com/southafrica/engine/match/730087.html. 
  7. http://www.espncricinfo.com/australia-v-south-africa-2014-15/engine/match/754731.html
  8. "Batting records | Test matches | Cricinfo Statsguru | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவின்டன்_டி_கொக்&oldid=3550819" இலிருந்து மீள்விக்கப்பட்டது