முதன்மை பட்டியைத் திறக்கவும்

இந்தியத் துடுப்பாட்ட அணி

(இந்தியா துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியத் துடுப்பாட்ட அணி (இந்தியக் கிரிக்கெட் அணி) இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1932 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது. 1932 சூனில் இங்கிலாந்துக்கெதிராக லோட்ஸ் மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணி முதற் தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குகொண்டது. 2000 -ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்திய துடுப்பாட்ட அணி அபார வளர்ச்சி கண்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் ஐ எல்லா தர மக்களிடமும் கொண்டு சென்றனர், 2003 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. பின்னர் 2007 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக 2008 - ஆண்டு முதல் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி வருடந்தோறும் இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்தியா
India Cricket Cap Insignia.svg.png
தேர்வுத் தகுதி கிடைத்தது 1932
முதல் தேர்வுப் போட்டி எதிர் இங்கிலாந்து 25-28 ஜூன் 1932
தலைவர் விராட் கோலி
பயிற்றுனர் ரவி சாஸ்திரி
ஐ.சி.சி. தேர்வு,
ஒருநாள் தரம்
1வது (தேர்வு), 2வது (ஒ.ப.து) [1],[2]
தேர்வுப் போட்டிகள்
- இவ்வாண்டில்
446
கடைசி தேர்வுப் போட்டி எதிர் தென்னாபிரிக்கா
வெற்றி்/தோல்வி
- இவ்வாண்டில்
108/139
20 டிசம்பர் 2010 அன்று தகவல்படி