இராகுல் திராவிட்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

ராகுல் திராவிட் (Rahul Dravid)(பிறப்பு ஜனவரி 11, 1971) இந்தியாவின் துடுப்பாளர். 1996 இல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய திராவிட் ஒரு வலது கைத் துடுப்பாளர். சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள திராவிட் உலகின் முன்னணித் துடுப்பாளர்களுள் ஒருவர். ராகுல் திராவிட் அக்டோபர் 2005-ல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. திராவிட் 'சிறந்த ஆட்டக்காரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்' ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். திராவிட் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை புரிந்தவர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் ஆவார். மேலும் திராவிட், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேச்சுகள் (210) பிடித்து சாதனை புரிந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 13000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை 24 நவம்பர் அன்று பெற்றார். தேர்வுத் துடுப்பாட்டத்தில் 55 முறைகள் குச்சங்கள் வீழ்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இது ஆலன் பார்டரின் முந்தைய சாதனையான 53 முறைகளை விடக் கூடியதாகும்.

ராகுல் திராவிட்
RahulDravid.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராகுல் சரத் திராவிட்
பட்டப்பெயர்தடுப்புச்சுவர், ஜாம்மி, திரு. நம்பிக்கையாளர்
உயரம்5 ft 11 in (1.80 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை வலச்சுழல்
பங்குமட்டையாளர், குச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 207)20 சூன் 1996 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு24 சனவரி 2012 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 339)3 ஏப்ரல் 1996 எ இலங்கை
கடைசி ஒநாப16 செப்டம்பர் 2011 எ இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்19
ஒரே இ20ப31 ஆகத்து 2011 எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990–2012கர்நாடகத் துடுப்பாட்ட அணி
2003ஸ்கொட்லாந்து துடுப்பாட்ட அணி
2000கென்ட் துடுப்பாட்ட அணி
2008–2010ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
2011–2013ராசத்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.ப.து முதல்தர ப.அ
ஆட்டங்கள் 164 344 298 449
ஓட்டங்கள் 13,288 10,889 23,794 15,271
மட்டையாட்ட சராசரி 52.31 39.16 55.33 42.30
100கள்/50கள் 36/63 12/83 68/117 21/112
அதியுயர் ஓட்டம் 270 153 270 153
வீசிய பந்துகள் 120 186 617 477
வீழ்த்தல்கள் 1 4 5 4
பந்துவீச்சு சராசரி 39.00 42.50 54.60 105.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/18 2/43 2/16 2/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
210/0 196/14 353/1 233/17
மூலம்: கிரிக்இன்ஃபோ, 30 சனவரி 2012

தேசிய இந்திய அணியின் மிகத் தேர்ச்சி பெற்ற கிரிக்கெட் வீரராக 1996 ஆம் ஆண்டு முதல் திகழ்ந்து வருபவர் ராகுல் ஷரத் டிராவிட் (கன்னடம்: ರಾಹುಲ್ ಶರದ್ ದ್ರಾವಿಡ, மராத்தி: राहुल शरद द्रविड) About this soundஒலிப்பு  இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் அந்த பதவியில் இருந்து 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விலகிக்கொண்டார்.[1] 2000 ஆம் ஆண்டில் டிராவிட் ஐந்து வீரர்களில் ஒருவராக இருந்து விஸ்டன் கிரிக்கேடர்ஸ் ஆப் தி இயர் விருதைப்பெற்றார்.[2] டிராவிடுக்கு ICC பிளேயர் ஆப் தி இயர் மற்றும் டெஸ்ட் பிளேயர் ஆப் தி இயர் விருதுகளும் 2004 ஆம் ஆண்டு துவக்க விழாக்களில் வழங்கப்பட்டன.[3]

நீண்ட நேரத்திற்கு நின்று பேட் செய்யக்கூடிய அவரது திறனைப்பார்த்து அவரை தி வால் என்று அழைக்கின்றனர். டிராவிட் பல தரப்பட்ட உலக சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரையும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது இந்திய வீரராக இருக்கிறார்.[4] 14 பிப்ரவரி 2007 அன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவதாகவும் இந்திய அணிவகுப்பில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து மூன்றாவதாகவும் இருந்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.[5] இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பத்து அணிகளுக்கும் எதிராக சதம் எடுத்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் ஆவார்.[6] 210 கேச்சுகளைப் பிடித்து டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேச்சுகளை பிடித்த வீரர் என்ற பெயரைப்பெற்றுள்ளார்.[7] 18 வீரர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு சமையங்களில் 75 க்கும் மேற்பட்ட சதங்களை எடுக்க பங்களித்துள்ளார் டிராவிட். இது உலக சாதனையாக இன்று வரை இருக்கிறது.[8] மார்ச்சு 09, 2012 அன்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் துடுப்பாட்டங்களிலிருந்து ஓய்வுபெறுவதாக பெங்களூருவில் நடந்த ஓர் ஊடக சந்திப்பில் ராகுல் திராவிட் அறிவித்தார்.[9] )

சொந்த வாழ்க்கைதொகு

மத்திய பிரதேசத்தை[10] சேர்ந்த இந்தூரில்,பிறந்தார்.இவர் கர்நாடகாவில் வாழும் ஒரு மகாராஷ்டிரிய தேஷஸ்தா குடும்பத்தை சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் தந்தை வழி முன்னோர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த ஐயர்கள் ஆவர்.[11] அவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வளர்ந்தார்.[12] அவர் மராத்தி மற்றும் கன்னட மொழிகளை பேசுவார்.[13] அவருக்கு விஜய் என்ற ஒரு இளைய சகோதரர் உண்டு. இரண்டு சகோதரர்களும் எளிமையான நடுத்தர குடும்ப சூழலில் தான் வளர்ந்தனர். டிராவிடின் தந்தையார் ஜாம் மற்றும் ஊறுகாய்களை உற்பத்தி செய்யும் கிசான் என்னும் நிறுவனத்தில் வேலை செய்ததால்,பெங்களூரை சேர்ந்த செயின்ட் ஜோசப் பாய்ஸ் ஹை ஸ்கூலை சேர்ந்த அவரது நண்பர்கள் அவரை ஜாமி என்று செல்லமாக அழைத்தனர். அவரது தாயார் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலையியல் பேராசிரியராக பணிபுரிந்தார்.[14] ராகுல் டிராவிட், கர்நாடகாவின் பெங்களூரில், செயின்ட் ஜோசப் காலேஜ் ஆப் காமெர்ஸ்-இல் வணிகவியல் பட்டம் பெற்றார். நான்கு மே 2003 அன்று அவர் நாக்பூரை சேர்ந்த Dr. விஜேதா பெண்தர்கர் என்ற அறுவை மருத்துவரை மணந்தார்.11 அக்டோபர் 2005 அன்று பிறந்த அவர் மகனுக்கு சமித் என்ற பெயரை சூட்டினர்.[15] 27 ஏப்ரல் 2009 அன்று அவரது இரண்டாவது மகன் அன்வே பிறந்தான்.[16]

இளமை காலம்தொகு

டிராவிட் அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே கிரிக்கெட்டை விளையாட துவங்கி விட்டார். அவர், மாநில அளவில் அண்டர்-15, அண்டர்-17 மற்றும் அண்டர்-19 பிரிவுகளில் விளையாடி உள்ளார்.[17] ராகுல் முதன் முதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேகி தாராபோரால், கோடை விடுமுறையில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு கேம்பில் கண்டுபிடிக்கப்பட்டார்.[18] அவர் அவரது பள்ளி அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே முதல் சதம் அடித்தார்.[12] பேட்டிங் செய்ததுடன் அவர் விக்கெட் கீப்பராகவும் இருந்தார். பின்னர் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் குண்டப்பா விஷ்வநாத், ரோஜர் பின்னி, பிரிஜேஷ் படேல் மற்றும் தாராபோரின் அறிவுரையின் பேராலே அவர் விக்கெட் கீப்பிங்கை நிறுத்தி வைத்தார்.

மகாராஷ்டிராவுக்கு எதிராக ரஞ்சி ட்ரோபியில் விளையாட அவர் முதன் முதலில் பூனேயில் பிப்ரவரி மாதம் 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். (அப்போது அவர் பெங்களூரைச் சேர்ந்த புனித ஜோசப் வணிக கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார்) இந்த போட்டியில் அவர் ஏழாவது நிலையில் வருங்கால சக அணி வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்துடன் சேர்ந்து 82 ரன்கள் அடித்து ஆட்டத்தை சம நிலைப் படுத்தினார்.[19] அவரது முழு முதல் சீசன் 1991-92 ஆமா ஆண்டில் இருந்தது. அப்பொழுது அவர் இரண்டு சதங்களை அடித்து தொடர் முடிவில் சராசரி 63.3 க்கு 380 ரன்கள் எடுத்திருந்தார்.[20] இதன் பின்னர் டிராவிட் சவுத் சோனில் நடக்கின்ற துலீப் ட்ரோபியில் ஆட தேர்ந்தெடுக்கப்பட்டார்.[21].

சர்வதேச விளையாட்டு வாழ்க்கைதொகு

 
ஒரு டெஸ்ட் போட்டியில் டிராவிட் தனது செயல்திறனை காட்டிய போது

1996 ஆம் ஆண்டில் நடந்த உலக கோப்பையில் விளையாடிய வினோத் காம்ப்ளிக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கப் ஒரு நாள் போட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கிய டிராவிட் அமோகமான ஆரம்பத்தை காணவில்லை. இதற்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர், இங்கிலாந்து சுற்று பயணத்தில் தான் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சய் மஞ்ச்ரேகர் காயமுற்றார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் முதன் முதலில் தோன்றினார். இவருடன் சவுரவ் கங்கூலியும் முதல் முதலில் களம் இறங்கினார்.

இந்த போட்டியில் ராகுல் 95 ஓட்டங்களை எடுத்தார்.[22] சஞ்சயின் வருகைக்கு பிறகு கூட அவரது இடத்தை தக்கவைத்துக் கொண்டு டிராவிட் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 84 ஓட்டங்களை குவித்தார்.[23] இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் சுமாரான ஆற்றலை வெளிப்படுத்திய டிராவிட், 1996-97 ஆம் ஆண்டு தான் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க சுற்று பயணத்தின் போது அபாரமான ஆட்டத்தை வெளிகாட்டினார். இந்த பயணத்தில் ஜொஹனஸ்பர்கில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட் செய்த ராகுல் தனது முதல் சத்தத்தை அடித்தார். இவர் முதல் இன்னிங்க்சில் 148 ரன்களையும் இரண்டாவது இன்னிங்க்சில் 81 ரன்களையும் எடுத்தார். அதிக ரன்களை எடுத்த வீரர் என்பதினால் இந்த போட்டியில் அவர் முதன் முதலாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.[24]. இவர் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 1996 சஹாரா கப்பில் தனது முதல் அரை சத்தத்தை அடித்தார். அவரது பத்தாவது சர்வதேச ஒரு நாள் போட்டியாக இருந்த இந்த போட்டியில் அவர் 90 ரன்களை எடுத்தார்.[25]

மத்திய 1998 இல் முடிந்த பதினெட்டு மாதங்களில் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளிலும், இலங்கைக்கு எதிராக சொந்தநாட்டிலும் வெளிநாட்டிலும், மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலும் விளையாடினார். அவர் 56.7 என்ற சராசரி கணக்கில் நன்றாக விளையாடி 964 ரன்களை குவித்திருந்தார். அவர் பதினோரு அரை சதங்களை அடித்திருந்தாலும் அவரால் அவற்றை நூற்றுக்கணக்கில் மாற்ற இயலாமல் போனது.[சான்று தேவை]. 1998 ஆம் ஆண்டின் கடைசியில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆடிய ஒரு ஆப் டெஸ்ட் போட்டியில் டிராவிட் தனது இரண்டாவது சதத்தை எடுத்தார். இவர் இரண்டு இன்னிங்க்சிலும் 148 மற்றும் 44 ரன்களை எடுத்த போதிலும் இவரால் இந்தியா தழுவிய தோல்வியை தவிர்க்க முடியவில்லை[சான்று தேவை]. விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கரை தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த நியூ இயர் டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்க்சிலும் 190 மற்றும் 103* ரன்களை எடுத்து, ஒரே போட்டியில் இரண்டு சதங்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெயரை வாங்கியது மட்டுமில்லாமல் அந்த போட்டியை சம நிலைக்கு கொண்டுவந்தார்[26][27]. 1999 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் மிக சுமாரான சீசனையே கண்டார். இதில் அவர் 38.42 அவரேசில் 269 ரன்களை மட்டுமே (ஒரு சதத்துடன்) எடுத்திருந்தார். பின்னர் நியூ சிலாந்துக்கு எதிராக 1999 ஆம் ஆண்டின் பின் பகுதியில் நடந்த போட்டிகளில் ஆடிய இவர், 39.8 சராசரி கணக்கில் 239 ரன்களை எடுத்தார். இதிலும் அவர் ஒரு சதத்தை அடித்தார்.[சான்று தேவை]. இதற்கு பிறகு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவே சீரீசிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஹோம் சீரீசிலும் மோசமான விளையாட்டு ஆற்றலை வெளிப்படுத்திய இவர், 18.7 அவரேசில் 187 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். பின்னர், ஜிம்பாப்வேக்கு எதிராக டில்லியில் நடந்த போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை (200*)அடித்து அடுத்த இன்னிங்க்சில் 70* அடித்து இந்தியாவை எளிதில் வெற்றி வாகை சூட செய்தார். பன்னிரண்டு மாதங்களில் முதல் முறையாக அவர் 50-ஐ கடந்து, பின்னர் தொடர்ந்த டெஸ்டில் 162 ரன்களை எடுத்திருந்தார். இந்த இரண்டு மேச் சீரீசில் அவர் 432 அவரேஜ் கணக்கில் 432 ரன்களை எடுத்திருந்தார்[சான்று தேவை].

 
இலங்கைக்கு எதிராக கல்லேவில் 2008 ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் பீல்டிங் பொழுது டிராவிட் செய்கை காட்டுகிறார்.

கொல்கத்தாவில் 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் சீரீசின் இரண்டாவது போட்டியில் அவர் VVS லக்ஷ்மனுடன் கைகோர்த்து விளையாடி இந்திய சரித்திரத்தில் காணாத அளவு வெற்றியை பெற்று தந்தார். போட்டியின் இரண்டாவது இன்னிங்க்சில் பாலோ ஆன் செய்த இவர்கள் ஐந்தாவது விக்கெட்டுக்கு 376 ரன்கள் எடுத்திருந்தனர். டிராவிட் 180 ரன்கள் எடுக்க லக்ஷ்மன் 281 ரன்கள் எடுத்திருந்தார்.[28] இதில் இரண்டாவதாக ராகுல் இருந்தாலும், ராகுலின் மிக முக்கியமான ஆட்டங்களில் இதுநாள் வரை பார்த்ததில் இதுவே முக்கியமானது என்று நாம் கூறலாம். பின்னர் இதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், போர்ட் எலிசபெத்தில் நடந்ததில், ராகுல் இரண்டாவது இன்னிங்க்சில் 87 ரன்களை எடுத்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தார்.[29]

2002 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் நிழலில் இருந்து வெளி தெரிந்த டிராவிட் இந்தியாவின் முதன்மை டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக தெரிய துவங்கினர். மேற்கிந்திய தீவுகளின் ஜோர்ஜ் டவுனில் ஏப்ரல் மாதம் நடந்த முதல் டெஸ்ட் மேச்சில், முதல் இன்னிங்க்சில் மேர்வின் டில்லோன் பந்து வீச்சில் அடிபட்ட பிறகு 144 ரன்களை அடித்து அவுட் ஆகாமல் காலத்தில் இருந்தார்.[30] அதே வருடத்தில் பின்னர், அவர் இங்கிலாந்துக்கும்(3) மேற்கிந்திய தீவுகளுக்கும்(1) எதிரே நடந்த நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்தார். இங்கிலாந்தின் ஹெடிங்க்லே ஸ்டேடியமில், ஆகஸ்ட் 2002 ஆண்டில், லீட்ஸில் சீரீசின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்க்சில் 148 ரன்களை எடுத்து, பவுலிங்குக்கு பெயர் போன ட்ராக்கில் இந்தியாவை வெற்றி பெற செய்தார்.[31] இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் இவர் பெற்றார். இந்த தொடரில் டிராவிட் அடித்த 602 ரன்கள் அவருக்கு தொடர் நாயகனுக்கான விருதையும் பெற்று தந்தது.

2003-2004 சீசனில், மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் டிராவிட் மூன்று இரட்டை சதங்களை தொடர்ச்சியாக அடித்தார். அடிலைடில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரே நடந்த நான்கு போட்டிகளைக்கொண்ட தொடரில் டிராவிட் VVS லக்ஷ்மன் ஜோடி மறுபடியும் கை சேர்ந்தது.ஆட்டத்தின் முதல் இன்னிங்க்சில் நான்கு விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் மட்டும் எடுத்திருந்த நிலையில் அவர்கள் ஆஸ்திரேலியா நிர்ணயத்த 556 ரன் இலக்கை அடைய வேண்டியதாக இருந்தது. அவர்களது பர்த்நேர்ஷிப் உடைக்கப்டுவதற்கு முன்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து 303 ரன்கள் எடுத்திருந்தனர். லக்ஷ்மன் 148 ரன்களில் ஆட்டமிழந்தார். டிராவிட் 233 ரன்களை அடித்தார். அந்த சமயத்தில் இந்திய வீரன் கடல் தாண்டி எடுத்த அதிக ரன்னாக இந்த இலக்கு இருந்தது. டிராவிட் ஆட்டம் இழக்கும் சமயத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அடித்த முதல் இன்னிங்க்ஸ் இலக்கைவிட 33 ரன்கள் மட்டுமே குறைவாக இருந்தது. இதன் பிறகு இரண்டாவது இன்னிங்க்சில், டிராவிட் ஆட்டம் இழக்காமல் 72 ரன்களை பெரும் அழுத்தத்திற்கு மத்தியில் எடுத்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.[32] டிராவிட் இந்த நான்கு போட்டி கொண்ட ஆஸ்திரேலிய தொடரில் 619 ரன்களை 103.16 சராசரி கணக்கில் எடுத்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார். சீசன் முடியும் நிலையில் அணியை வழி நடத்தி செல்ல கங்கூலி இல்லாத பொழுது, கேப்டனாக பொறுப்பேற்று முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுதந்த பெருமை இவரை சேரும். அதே தொடரில், ராவல்பிண்டியில் நடந்த இறுதி மற்றும் மூன்றாவது போட்டியில், டிராவிட் 270 ரன்களை மிகவும் திறமையாக எடுத்து இந்தியாவை வரலாறு காணாத அளவில் தொடரை கோப்பையை கைப்பற்ற செய்தார்.[33]

16 ஆகஸ்ட் 2009 அன்று, IPL போட்டிகளில் இளைஞர்கள் காட்டாத சோர்ட் பாலை எதிர்காணும் திறனை காட்டிய டிராவிட் மீண்டும் சர்வதேச ஒருநாள் போட்டி அணியில் சேர்க்கப்பட்டார்.

உலக கோப்பை போட்டிகளில் டிராவிட்தொகு

7 வது உலக கோப்பையில்(1999), 461 ரன்களை அடித்து அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமை தேடிக்கொண்டார் டிராவிட். உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்த ஒரே இந்திய வீரர் ஆவார். இவர் டான்டனில் கென்யாவுக்கு எதிராக 110 ரன்களையும் இலங்கைக்கு எதிராக 145 ரன்களையும் எடுத்தார். பின்னர் இந்த போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்தார்.இவர் 2003 உலக கோப்பையில் இந்திய இறுதி போட்டிக்கு சென்ற போது துணை கேப்டனாக இருந்தார். இவர் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் இருந்தது இந்திய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இடம்பிடிக்க உதவியாக இருந்தது. டிராவிட் கேப்டனாக இருந்த, மேற்கிந்திய தீவுகளில் நடந்த 2007 கிரிக்கெட் உலக கோப்பையில், இந்திய கிரிக்கெட் அணி சரியாக ஆடவில்லை. டிராவிட் வங்காளதேசம் போட்டியில் 14, பெர்முடா போட்டியில் 7*, மற்றும் இலங்கை போட்டியில் 60 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

நடைதொகு

வலுவான ஆட்ட நுட்பங்களை கொண்ட இவர், இந்தியா கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக இருந்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட கூடிய டிபென்சிவ் பேட்ஸ்மேன் என்ற மாயை வலைக்குள் இருந்து டிராவிட், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ரன்களை மெதுவாக எடுத்தார். எதுவாகினும் அவரது ஆட்ட பாதையில் அவர் தன்னை மாற்றிக்கொண்டு ஒரு நாள் போட்டிகளிலும் அதிக ரன்களை எடுத்து ICC பிளேயர் ஆப் தி இயர் விருதைப்பெற்றார். ரீபாக் விளம்பரங்களில் வந்த 'தி வால்' என்ற அவரது செல்ல பெயர் அவரது திறனை குறிக்க இப்போது பெரிதும் உதவுகிறது. டிராவிட் 55.11 சராசரி கணக்கில் இதுவரை 26 சதங்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் எடுத்துள்ளார். இதில் அவர் எடுத்த ஐந்து இரட்டை சதங்களும் சேரும். ஒரு நாள் போட்டிகளில் அவர் 39.49 ரன், 71.22 ஸ்ட்ரைக் ரேட்டும் கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு வெளியே ஆடும் போட்டிகளில் சிறந்து விளையாட கூடிய ஒரு சில இந்திய வீரர்களுள் ஒருவர். இவரது ஆவரேக் இந்திய மண்ணில் ஆடுவதை விட சராசரியும்கடல் தாண்டி ஆடுவதில் பத்து ரன்கள் அதிகமாக இருக்கிறது. ஒன்பது ஆகஸ்ட், 2006, அன்று பார்க்கும் போது ட்ராவிடின் கடல் தாண்டிய டெஸ்ட் போட்டி சராசரி 65.28 இருந்தது. அவரது ஓவர் ஆல் சராசரி 55.41 ஆகவும் வெளிநாடுகளில் விளையாடிய ஒரு நாள் சர்வதேச போட்டிகளின் சராசரி 42.03 ஆகவும் அவரது ஓவர் ஆல் ODI சராசரி 39.49 ஆகவும் இருந்தது. இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் ட்ராவிடின் சராசரி டெஸ்ட் போட்டிகளில் 78.72 ஆகவும், ODI களில் 53.40 ஆகவும் இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட் எடுத்த விக்கெட் ரிட்லே ஜேகப்ஸ் உடையது ஆகும். இவரை டிராவிட் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த 2001-2002 சீரீசின் நான்காம் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தினார். ராகுல் ஒரு பந்து வீச்சாளராக இல்லாத பொழுதிலும் அவர் இந்தியா ODI கள் ஆடும் போக்ஸ்து விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். அவருக்கு பின்னர் ஆட, பார்த்திவ் படேல் மற்றும் மகேந்திர சிங்க் தோனியை உருவகப்படுத்தினார். டிராவிட் இப்பொழுது ஒரு முழுமையான பேட்ஸ்மேன். இவர் ஜனவரி 1, 2000 முதல் போட்டிகளில் ஆடி 63.51 சராசரி பெற்றுள்ளார்.

டிராவிட் இரண்டு பெரிய அளவு ODI பார்ட்னர்ஷிப்களில் பங்களித்துள்ளார்: சவுரவ் கங்குலியுடன் அவர் எடுத்த 318 ரன் பார்ட்னர்ஷிப்(இது 300 ரன்கள் எடுத்த முதல் ஜோடியாக இருந்தது) மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து எடுத்த 331-ரன் பார்ட்னர்ஷிப் ஆகும். இது இன்று வரை உலக சாதனையாக இருக்கிறது. இவர் ஒன்றுமே எடுக்கமால்(டக்) அதிக போட்டிகளில் ஆட்டம் இழப்பதில் கூட ரெகார்ட் வைத்துள்ளார். அவர் ODI மற்றும் டெஸ்ட்களில் எடுத்த அதிக ரன்கள் 153 மற்றும் 270 ஆக இருக்கின்றன. அவர் எடுத்த ஐந்து இரட்டை சதங்களும் ஒன்றை விட ஒன்று அதிகமாகவே இருக்கின்றன. இது வியக்கத்தக்க ஒன்றாகும் (200*, 217, 222, 233, 270).

ஒரு கேப்டனுக்கு கீழ் ஒரு அணி அதிக போட்டிகளில் அதிக ரன்களை குவித்து வென்றதில் கூட டிராவிட் அதிக பங்கு விகிதத்தை கொண்டு உள்ளார். இவர் இருபதுக்கும் மேலான டெஸ்ட் போட்டிகளை வென்று தந்துள்ளார்.[34] சவுரவ் கங்குலியின் தலைமையில் வென்ற 21 டெஸ்ட் போட்டிகளில் கூட, டிராவிட் தனது பங்கை சரிவர செய்தார். இவற்றில் அவரது சராசரி 102.84 ஆகவும் ரன் குவிப்பு 2571 ஆகவும் இருந்தது. இந்த போட்டிகளில் ஒன்பது சதங்களும்- இவற்றில் மூன்று இரட்டை சதங்கள்- மற்றும் பத்து அரை சதங்களை 32 இன்னிங்க்சில் அடித்துள்ளார். இந்த 21 போட்டிகளில் இந்தியா எடுத்த மொத்த ரன்களில் இவர் 23% அடித்துள்ளார். இது அணி எடுத்த ஒவ்வொரு நாலு ரன்னுக்கும் இவர் ஒரு ரன் அடித்தது போல் இருக்கிறது.

 
ஒவ்வொரு இன்னிங்காக டிராவிடின் டெஸ்ட் போட்டி பேட்டிங் முன்னேற்றம் காட்டப்பட்டுள்ளது. அவர் எடுத்த ரன்கள் (சிகப்பு பார்கள் மூலமும்), அவர் ஆடிய கடைசி பத்து இன்னிங்ஸின் சராசரி ரன்கள் (நீல கோடு மூலமும்) காண்பிக்கப்பட்டுள்ளன.

இவர் 2000 ஆம் ஆண்டு விஸ்டென் கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டார். இவர் முதன்மையான டிபென்சிவ் பேட்ச்மேனாக இருந்தாலும் இவர் 22 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 50 ரன்களை எடுத்துள்ளார். (ஸ்ட்ரைக் ரேட்-227.27)vs நியூசிலாந்து, ஹைதராபாதில் 15 நவம்பர்,2003, அன்று நடந்த போட்டியில் வேகமாக அரை சதம் அடித்த இந்திய வீரர்களின் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தார்.இதுவரை 21 பந்துகளில் 67 ரன்களை அடித்து அஜீத் அகர்கர் முதல் நிலையில் உள்ளார்.

2004 ஆம் ஆண்டு டிராவிடுக்கு இந்திய அரசாங்கம் பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது. ஏழு செப்டம்பர், 2004 அன்று அவருக்கு முதல் பிளேயர் ஆப் தி இயர் அவார்ட் மற்றும் டெஸ்ட் பிளேயர் ஆப் தி இயர் விருது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால், வழங்கப்பட்டது.(ICC) (படம் கீழே). சென்ற ஆண்டில் ட்ராவிடின் பேட்டிங் சராசரி 95.46 இருந்ததால் அவர் இந்த ஆண்டின் இந்திய டெஸ்ட் அணியில் பங்குபெற தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர் ஆனார். மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக தனது நூறாவது டெஸ்ட் மேச்சை 18 மார்ச், 2006, அன்று டிராவிட் விளையாடினார்.

2005 ஆம் ஆண்டு தேவேந்திர பிரபுதேசாய்எழுதிய 'தி நைஸ் கை ஹூ பினிஷ்ட் பர்ஸ்ட்', என்ற ராகுல் ட்ராவிடின் வாழ்க்கை சரிதை வெளிவந்தது.

2005 ICC விருதுகளில், வேர்ல்ட் ஒன்-டே XI அணியில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் இவரை சாரும்.

2006 ஆம் வருடம் மேற்கிந்திய தீவுகளில் நடக்கவிருக்க 2007 உலக கோப்பை வரைக்கும் அவர் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அவர் சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்து சீரீசுக்கு பின்னர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு மகேந்திர சிங்க் டோனிODI கேப்டனாகவும், அணில் கும்ப்ளே டெஸ்ட் கேப்டனாகவும் பொறுப்பேற்றனர்.

2007 ஆம் ஆண்டில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் சரிவர ஆடமுடியாததால் அந்த வருடம் அவர் இந்திய ODI அணியில் இருந்து நீக்கப்பட்டார். டிராவிட் கர்நாடகாவுக்காக ரஞ்சி டிராபியில் விளையாடி மும்பைக்கு எதிராக 218 ரன்களை குவித்தார்.

2008 ஆம் ஆண்டில் பெர்த்தில் நடந்த முதல் இன்னிங்க்சில் 93 ரன்களை அடித்து, போட்டியிலே அதிக ரன்களை எடுத்து இந்தியாவை தொடரில் 1-2 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். ஆயினும் அவர் இந்த சீரீசை தொடர்ந்த ஒன்-டே ட்ரை-சீரீசில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

2008 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் எடுக்காத டிராவிடை போட்டியில் இருந்து விலக்க அல்லது விலகிக்கொள்ள பத்திரிக்கை துறையாளர்கள் நிர்பந்தப்படுத்தினர். மொகாலியில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கவுதம் கம்பீருடன் சேர்ந்து முன்னூறு ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெயர் பெற்றதுடன், இவர் 136 ரன்களை எடுத்தார்.

10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த பொழுது அவர், " இது கண்டிப்பாக ஒரு பெருமையான காலம். வளரும் போதே நான் இந்தியாவுக்கு ஆட கனவு கண்டேன் இப்பொழுது திரும்பி பார்கையில் நான் நினைத்ததைவிட கடந்த 10 - 12 வருடங்களில் நிறையவே செய்துள்ளேன். எனக்கு பெரிதாக எந்த குறிக்கோளும் இல்லாததால் நான் பெரிதாக எதையும் நம்பவில்லை- நான் இந்த ஆட்டத்தில் நிறை காலம் இருந்ததே இதற்கு காரணம்.", என்று கூறியுள்ளார்.[35]

தனிப்பட்ட சாதனைகள்தொகு

டெஸ்ட் போட்டிகள்தொகு

 • 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த மூன்றாவது இந்திய வீரனாக (உலகில் ஆறாவது) திகழ்கிறார் டிராவிட்.
 • வரலாற்றிலேயே அதிக அளவு டெஸ்ட் பார்ட்னர்ஷிப்களில் ஈடுபட்டுள்ளார்- 76 (5 ஏப்ரல் 2009).
 • கங்குலியின் தலைமையில் வென்ற 21 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எடுத்த மொத்த ரன்களில் கிட்டத்தட்ட 23% ரன்களை இவரே தனியாக எடுத்துள்ளார். (அவரது பேட்டிங் சராசரி - 102.84) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே தனி மனிதனால் ஒரே கேப்டனுக்கு கீழ், அதுவும் 20 க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றியை பெறவைத்த கேப்டனுக்கு கீழ் எடுக்கப்பட்ட அதிக சதவிகிதமாக இது கருதப்படுகிறது.[34]
 • அவர் ஆட துவங்கியதில் இருந்து தொடர்ச்சியாக ஆடி, வெகு நீளமான போட்டி என்னை கொண்டுள்ள வீரர். இவர் ஆடம் கில்கிறிஸ்ட்டை(96) பின் தொடர்கிறார்.(93 + ஒரு in ICC XI). அவரது 95 வது போட்டி, அஹமெதாபாதில் நடந்ததை ஜுரம் காரணமாக அவ்ராமல் ஆட முடியாமல் போனது.
 • கடல் தாண்டி விளையாடி, எல்லா நாடுகளுக்கும் எதிரே சதம் அடித்த ஒரே வீரர்.[36]
 • துணை கேப்டன் விரேந்தர் சேவாகுடன் கைகோர்த்து ஆடி பாகிஸ்தானுக்கு எதிரே, லாகூரில் 2006 ஆம் ஆண்டு 410 எடுத்தார்.(இது கேப்டனும் துணை கேப்டனும் சேர்ந்து எடுத்த ரன் மொத்தத்திலே அதிகமான ரன் குவிப்பு) இதுவரை இந்தியாவுக்காக விளையாடிய பங்கஜ் ராய் மற்றும் வினூ மங்கத் சென்னையில் நியூசிலாந்துக்கு எதிரே எடுத்த 413 ரன்களே அதிகமானதாக இருந்தது.(6-11 Jan 1956).
 • தொடர்ச்சியாக நான்கு இன்னிங்க்சில் மூன்று சதங்களை அடித்த மூன்று பேட்ஸ்மேன்களில் ஒருவர் டிராவிட். மற்ற இருவர்,ஜாக் பின்கள்டன் மற்றும் அலன் மெல்வில். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுக்கு எதிரே, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் டிராவிட் 115, 148, 217 and 100* என்று அடித்ததன் மூலம் இதனை சாதித்தார்.இதுவரை ஐந்து தொடர்ச்சியான இன்னிங்க்சில் விளையாடி அவற்றில் சதம் அடித்த எவர்டன் வீக்ஸ் தான் ரெகார்ட்டில் தனது பெயரை புகுத்தியுள்ளார்.[37]
 • தொடர்ச்சியான ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்கள் எடுத்தவர்களில் சச்சின் டெண்டுல்கரை(8) தொடர்ந்து வரும் இந்திய வீரர், டிராவிட் தான். IVA ரிச்சர்ட்ஸ் 11 போட்டிகள் ஆடி ரெகார்ட் செய்துள்ளார்.
 • இந்திய நாட்டிற்கு வெளியே விளையாடி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் இவர் இரண்டாவது இடம் வகிக்கிறார்.(6430 - ஏப்ரல் 2009 வரை). சச்சின் டெண்டுல்கர் மட்டுமே(7165) அதையும் தாண்டி அதிக டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார்.
 • அவர் 94 டெஸ்ட் போட்டிகளில் 150 இன்னிங்க்சில் மூன்றாவது இடத்தில் ஆடியுள்ளார். இந்த மூன்றாவது இடத்தில் அவர் 8000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இவை இரண்டுமே உலக சாதனைகளாக கருதப்படுகிறது.
 • சுனில் கவாஸ்கரை அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் ஆவார். கவாஸ்கர், பாண்டிங் ஆகிய இருவரும் தான் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதங்களை மூன்று முறை அடித்துள்ளனர்.
 • ஐந்து இரட்டை சதங்கள் அடித்த இரண்டு இந்திய வீரர்களுள் ஒருவர்.(ஒவ்வொன்றும் அதற்கு முந்தைய மொத்தத்தை விட அதிகமானதாக இருக்கிறது. 200* vs ஜிம்பாப்வே, 217 vs இங்கிலாந்து, 222 vs நியூசிலாந்து, 233 vs ஆஸ்திரேலியா, 270 vs பாகிஸ்தான்).
 • விக்கெட் கீப்பர் அல்லாமல் அதிக கேச்சுகளை பிடித்தவர் என்ற உலக சாதனையையும் புரிந்துள்ளார்.(184)
 • டெண்டுல்கருடன் சேர்ந்து எந்த ஜோடியும் அடிக்காத வண்ணம் இவர் அதிக ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒபனிங் பார்ட்னர்ஷிப் சேராது. இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது பெஸ்ட் பார்ட்னர்ஷிப் என்று கருதப்படுகிறது.[38]

ஒரு நாள் போட்டிகள்தொகு

 • ODI க்களில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் டிராவிட்.(உலகில் ஆறாவது)

கூட்டு முயற்சி சாதனைகள்

உலக கோப்பை சாதனைகள்

 • 1999 உலக கோப்பையில் 461 ரன்கள் எடுத்து லீடிங் ரன் ஸ்கோரராக இருந்தார்.
 • AC கில்கிறிஸ்ட் (149) தொடர்ந்து, உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த இரண்டாவது விக்கெட் கீப்பர் (145) என்ற பெயர் எடுத்துள்ளார்.
 • ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் தேவ் ஹைடனை தொடர்ந்து உலக கோப்பை சர்வதேச ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
 • மார்க் வாகை தொடர்ந்து இரண்டு போட்டிகளில் உலக கோப்பையில் தொடர்ந்து சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெறுவார்.

தலைமை பொறுப்பு சாதனைகள்

 • சச்சின் டெண்டுல்கர் வழி நடத்தி சென்று இந்தியா எத்தனை வெற்றிகளை கண்டதோ அதே அளவு வெற்றியை டிராவிட் வழி நடத்தி சென்று பெற்றுத்தந்துள்ளார்.

மற்ற சாதனைகள்

 • 120 தொடர்ச்சியான ODI போட்டிகளில் டக் எடுக்காமல் இருந்தார்.
 • சச்சின் டெண்டுல்கர்(93), இன்சமாம் உல் ஹக்கை(83) தொடர்ந்து அதிக அரை சதங்களை எடுத்த மூன்றாவது வீரர் ஆவார். அவர் இந்திய சுவர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.(Indian wall)

தலைமை பொறுப்புதொகு

சாதனைகள்தொகு

 • உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரராவார் ராகுல் டிராவிட்.(மற்றவர் - சச்சின் டெண்டுல்கர் - இருமுறை - 1996, 2003) 1999 உலக கோப்பையில் அவர் 461 ரன்களை எடுத்து குவித்திருந்தார்.
 • ராகுல் டிராவிட் மேற்கிந்திய தீவுகளில் அவர்களுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியாவை வற்றி பாதையில் 2006 ஆம் ஆண்டு வழி நடத்தி சென்றார். 1971 ஆம் ஆண்டு முதல் இந்திய மேற்கிந்திய தீவுகளில் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றியதில்லை. இதுவே 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு நமது நாட்டிற்கு வெளியே இந்திய அணி கண்ட முதல் பெரிய வெற்றியாகும்.(2005 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா கண்ட வெற்றி இதில் சேர்க்கப்படவில்லை)
 • சவுரவ் கங்குலியின் தலைமையின் கீழ் 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ODI போட்டிவரை தொடர்ச்சியாக எடுத்த வெற்றிகளே அதிக அளவு என்று இருந்ததை ராகுல் டிராவிட் தனது தலைமை கீழ் இந்தியாவை வழி நடத்தி சென்று அந்த வெற்றி எண்ணிக்கையை சமன் செய்துள்ளார்.(8) இது பின்னர் மகேந்திர சிங்க் தோனியால் 2008-2009.ஆம் ஆண்டு ஒன்பது தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் முறியடிக்கப்பட்டது.
 • இவரது தலைமை கீழ், மேற்கிந்திய தீவுகள் அதிக வெற்றிகளை ODI போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்றிருந்தது என்ற ரெகார்ட் முறியடிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் 14 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது. அவரது 17 போட்டி வெற்றியில், டிராவிட் 15 போட்டிகளுக்கு கேப்டனாகவும் மற்ற இரண்டுக்கும் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தனர். இந்த தொடர் 20 மே 2006 அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளால் சபினா பார்க்கில், ஜமைக்காவில் தோல்வியை தழுவிய பொது கைவிடப்பட்டது.
 • தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாபிரிக்கவையே தோற்கடித்த முதல் இந்திய அணி தலைவர் என்ற பெருமை ராகுல் டிராவிடை சாரும்.
 • இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் வென்ற மூன்றாவது இந்திய அணி தலைவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இது சுமார் 21 வருடங்களுக்கு பின்னர் நடந்த ஒரு நிகழ்வாகும். கபில் தேவ் (1986), அஜீத் வடேகர் (1971)ஆகிய இருவரும் தான் மற்ற இரு இந்திய அணி தலைவர்கள்.
 • இவர் டெஸ்ட் போட்டிகள் மட்டும் ODI போட்டிகளில் தனித்தனியே 10,000 ரன்களுக்கு மேல் எடுத்ததில் இவர் சச்சின் மற்றும் லாரவை தொடர்ந்து மூன்றாவது வீரராக கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடிக்கிறார். டிராவிடை தவிர பாண்டிங் மட்டுமே இந்த சாதனையை புரிந்துள்ளார்.
 • இவர் விக்கெட் கீப்பர் அல்லாமல் அதிக அளவு கேச்சுகளை பிடித்துள்ளார் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.

திறனாய்வுதொகு

 • டிராவிட் எடுத்த முக்கிய முடிவுகளில் அவர் சவுரவ் கங்குலிக்கு(அடிபட்டதால்) பதிலாக மார்ச் 2004 அன்று கேப்டனாக களம் இறங்கியது, மிக முக்கியமானதாகும். சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 16 ஓவர்கள் பாக்கி இருந்த சமயத்தில் இரண்டாவது நாள் அன்று ஆட்டத்தை டிக்ளேர் செய்தது மற்றொரு முடிவாகும். சவுரவ் கங்கூலியின் வற்புறுத்தலின் பெயரால் இந்த முடிவை ராகுஉல் எடுத்தார்.[39]
 • ராகுல் டிராவிட் இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வழி நடத்தி சென்ற போது அவர் இருவகையான முடிவுகளையும் சந்தித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு இந்தியா காராச்சியில் தோல்வியுற்றதால் பாகிஸ்தான் அந்த தொடரை 1-௦0 என்று வென்றது. மார்ச் 2006 இல், இந்தியா மும்பை டெஸ்டில் தோல்வியுற்றது. இதனால் இங்கிலாந்து 1985 ஆம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் காணாத வெற்றியை பெற்றது. இதனால் பிளின்டாப் கீழ் இருந்த அணி தொடரை 1-1 என்று சமன் செய்தது. கராச்சியில் தோல்வியடைந்தது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது தான் காரணம் என்று இருந்தாலும் மும்பையில் தழுவிய தோல்விக்கு திராவிடின் முடிவு தான் முற்றிலும் காரணமாக இருந்தது. இவர் டாசை வென்று, தட்டையான காய்ந்த பிச்சில் பவுலிங் செய்யலாம் என்று எடுத்த முடிவு விபரீதமாக முடிந்தது. இதனால் இந்தியாவால் இங்கிலாந்து எடுத்த இலக்கை அடைய முடியவில்லை.
 • இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை திறன்பட தேர்ந்தெடுக்கவில்லை என்று விஜய் மல்லையாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.இந்த அணி 2008 இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியில் இடம்பெற்ற எட்டு அணிகளில் ஏழாவது இடம் பிடித்து இருந்தது.[40]
 • DLF கோப்பை இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதற்கு, முன்னாள் ஆள் ரவுண்டர் ரவி சாஸ்த்ரி, ராகுல் டிராவிட் இன்னும் வலுமையாக இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும். கிரேக் சாப்பெலை சார்ந்து இருக்க கூடாது என்று கூறினார்.[41] இதற்கு கருத்து தெரிவிக்கையில் ராகுல் டிராவிட் ரவி சாஸ்திரியை ஒரு சிறந்த விமர்சகர் என்றும் அவர் அணிகுள் என்ன நடக்கிறது என்பது தெரியாது என்றும் கூறினார்.[42].

புதிய அணிகள்தொகு

சர்வதேசம்தொகு

இந்திய முதல் தரம்தொகு

இந்தியன் பிரீமியர் லீக்தொகு

இங்கிலீஷ் கவுண்டிதொகு

காலக்கோடு(முழு பட்டியல்)தொகு

 • 1973 - பிறப்பு 11 January 1973, இன்டோர்
 • 1984 - KSCA வின்சின்னசுவாமி ஸ்டேடியம், பெங்களூரில் நடந்த கோடை விடுமறை கேம்பில் சேர்ந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கோச்சாக இருந்த கேகி தாரபோரால் இவர் கண்டெடுக்கப்பட்டார்.(மும்பையில் வசித்து இறந்த மற்றொரு கேகி தாரபோருடன் இந்த தாரபோரை குழப்பி கொள்வர்.)
 • புனித அந்தோனியார் பள்ளிக்கு எதிராக, தனது பள்ளி புனித ஜோசப்புக்காக ஆடி முதல் சதத்தை அடித்தார்.
 • கேரளாவுக்கு எதிராக தனது கர்நாடக பள்ளிகளுக்காக ஆடிய போட்டியில் இரட்டை சத்தத்தை அடித்தார்.
 • கர்நாடகாவுக்காக அண்டர்-15 அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • குண்டப்பா விஷ்வநாத், ரோஜர் பின்னி, பிரிஜேஷ் படேல் மற்றும் கோச் கேகி தாரபோரின் அறிவுரையின் பேராலே இவர் விக்கெட் கீப்பிங்கை நிறுத்தினார்.
 • 1985 -பெங்களூர் கொட்டேனியான் ஷீல்ட் இன்டர் ஸ்கூல் போட்டியில்(ஜூனியர்) பால்ட்வின் பாய்ஸ் ஹை ஸ்கூலுக்கு எதிராக இறுதி போட்டியில் புனித ஜோசப் ஹை ஸ்கூல் ஆடியபோது அதில் அவர் அடித்த சத்தத்தை கண்டு அவரை எல்லோரும் பாராட்டினர்.
 • 1991 - மகாராஷ்டிராவுக்கு எதிராக ரஞ்சி கோப்பையில் பங்கேற்றார்.
 • 1996 - ரஞ்சி இறுதி போட்டியில் இரட்டை சதம் vs. தமிழ் நாடு.
 • 1996 - முதன் முதலில் டெஸ்ட் போட்டி ஆடுகிறார். இங்கிலாந்து லார்ட்சில் சஞ்சய் மஞ்ச்ரேகர் காயமுற்ற பிறகு, கேப்டன் அசாருதினுடன்நவ்ஜோத் சிங்க் சித்து கோபித்து கொண்டு வீடு திரும்பிய சமயம் டிராவிட் களம் இறக்கப்பட்டார். இதில் அவர் 95 ரன்களை எடுத்தார்.
 • 1997 - முதல் டெஸ்ட் சதம் (148), vs. தென்னாபிரிக்கா, மூன்றாவது டெஸ்ட், ஜோகனஸ்பெர்க்.
 • 1997 - முதல் ஒரு நாள் போட்டி சதம் (107), vs. பாகிஸ்தான், இண்டிபெண்டன்ஸ் கப், சென்னை.
 • 1998 - வங்காள தேசத்தில் விளையாட இருந்த ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
 • 1999 - இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார் (190,103) vs. நியூசிலாந்து, ஹாமில்டன்.
 • 1999 - உலக கோப்பையில் 461 ரன்கள் எடுக்கிறார், இதில் மூன்று 50 களும், இரண்டு 100 களும் சேரும்.
 • 1999 - கென்ட் உடன் 2000 இங்க்லீஷ் கவுன்டி சீசனில் விளையாட ஒப்பந்தம் செய்கிறார்.
 • 2001 - V. V. S. லக்ஷ்மன் 281 ரன்கள் எடுக்க இவர் 180 ரன்கள் எடுக்கிறார். இது ஐந்தாவுது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திய போட்டியாகும். ஈடன் கார்டெனசில் நடந்த இந்த போட்டியில் தொடர்ச்சியாக 16 முறை வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்தியா இவர்கள் எடுத்த 376 ரன்கள் மூலம் முறியடித்தது.
 • 2004 - அவர் ஆட்டத்திலேயே சிறந்த 270 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்தார், ராவல்பிண்டி.
 • 2005 - சவுரவ் கங்குலிக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ODI கேப்டனாகிறார்.
 • 2005 - தி நைஸ் கை ஹூ பினிஷ்ட் பர்ஸ்ட், தேவேந்திர பிரபு தேசாயால் எழுதப்பட்டு கிரேக் சாபெளால் வெளியிடப்பட்டது.
 • 2006 - கேப்டனாக இருந்து லாகூரில் முதல் டெஸ்ட் சதம் அடித்தார் vs. பாகிஸ்தான்.
 • 2006 - முல்தானில் சேவாகுடன் சேர்ந்து 410 ரன்களை அடித்தார்.
 • 2006 - தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியை பதித்தார்.
 • 2007 - 2007 கிரிக்கெட் உலக கோப்பை, மேற்கிந்திய தீவுகளில் நடந்த போது இந்தியாவை வழி நடத்தினார்.
 • 2007 - இந்தியா இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்ட பின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொண்டார்.
 • 2007 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய போட்டியில் சரியாக விளையாடாததால் அவர் இந்திய ODI அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
 • 2008 - 10000 டெஸ்ட் ரன்கள் இலக்கை அடைந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரே சென்னையில் மார்ச் 29 ஆம் தேதி அன்று நடந்த முதல் போட்டியில் இதனை செய்தார்.
 • 2009 - வெல்லிங்க்டனில் நியூசிலாந்துக்கு எதிரே நடந்த மூன்றாவது போட்டியில் சிறந்த பீல்டராக 182 கேச்சுகளை பிடித்துள்ளார், ஆறு ஏப்ரல்.

தொழில் முன்னேற்ற பாதையில் சிறப்பு அடையாளங்களாக கருதப்படுபவனதொகு

புலனுணர்வு திறனுக்கான உட்காக்-ஜான்சன் சோதனைகள்தொகு

டெஸ்ட் டெப்யூ: vs இங்கிலாந்து, லார்ட்ஸ், 1996

 • திராவிடின் சிறந்த ரன் குவிப்பாக இருந்த 270 ரன்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில், 2003-2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
 • பதினெட்டு பந்துகளில் ஒரு விக்கெட் என்ற அவரது சிறப்பு டெஸ்ட் பந்து வீச்சும் St. ஜான்ஸ், மேற்கிந்திய தீவுகளில், 2001-2002 ஆம் ஆண்டு வெளிவந்தது.
 • சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து 10,000 டெஸ்ட் ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் ஆவார்.
 • இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 9,000 ரன் இலக்கை அடைந்தார். 2006 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகுக்கு எதிராக தான் ஆடிய 176 வது இன்னிங்க்சில், ஏற்கனவே ப்ரையன் லாரா எடுத்த ரெக்கார்டை முறியடித்தார்.
 • இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேச்சுகளை பிடித்து(184), மார்க் வாக்கின் 181 கேச் ரெக்கார்டை முறியடித்தார். இது வெல்லிங்டன் பேசின் ரிசர்வில் நடந்த மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸ் பொழுது அவர் நியூசிலாந்தின் ஒபனர் டிம் மேக்கிண்டோசின் விக்கெட்டை பிடித்த போது நடந்தது.

ஒரு நாள் சர்வதேச போட்டிகள்தொகு

ODI டெப்யூ: vs இலங்கை, சிங்கப்பூர், 1995-1996

 • திராவிடின் சிறந்த ODI பேட்டிங் ஸ்கோரான 153, நியூசிலாந்துக்கு எதிராக, ஹைதராபாத்தில், 1999-2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
 • அவரது சிறந்த ODI பந்துவீச்சாக அவர் 43 ரன்னுக்கு எடுத்த இரண்டு விக்கெட்கள் கருதப்படுகின்றன. இது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரே, கொச்சியில், 1999-2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
 • உலகில் ஆறாவதாகவும் இந்தியாவில் மூன்றாவதாகவும் 10,000 ரன்கள் எடுத்தவர்களில் உள்ளார். அவருக்கு இருந்த தடையை அவர் இலங்கைக்கு எதிரான போட்டியில் 66 ரன்கள் எடுத்து சீரீசை 1-1 என்று சமன் செய்ததன் மூலம் தகர்த்தார்.

சாதனைகள் & விருதுகள்தொகு

விருதுகள்தொகு

டெஸ்ட் போட்டி விருதுகள்தொகு

டெஸ்ட் போட்டி - போட்டி தொடருக்கான நாயகன் விருதுகள் :

எண் தொடர் ஆண்டு தொடர் செயல்பாடு
1 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா 2002 602 (4 போட்டிகள், ஆறு இன்னிங்க்ஸ், 3x100, 1x50); 10 கேச்சுகள்
2. பார்டர்-கவாஸ்கர் டிராபி (ஆஸ்திரலிய டெஸ்ட் தொடரில் இந்தியா) 2003/04 619 ரன்கள் (4 போட்டிகள், எட்டு இன்னிங்க்ஸ், 1x100, 3x50); நான்கு கேச்சுகள்
3. மேற்கிந்திய தீவு டெஸ்ட் தொடரில் இந்தியா 2006 496 ரன்கள் (4 போட்டிகள், ஏழு இன்னிங்க்ஸ், 1x100, 4x50); எட்டு கேச்சுகள்

டெஸ்ட் போட்டிகள் - ஆட்ட நாயகன் விருதுகள்  :

எண் எதிராக இடம் ஆண்டு ஆட்டத்தில் செயல்பாடு
[1] தென்னாப்பிரிக்கா வேண்டரர்ஸ், ஜோன்ஸ்பர்க் 1996–97 1st இன்னிங்க்ஸ்: 148 (21x4); ஒரு கேச்
2nd இன்னிங்க்ஸ்: 81 (11x4); ஒரு கேச்
2 மேற்கிந்திய தீவு பூர்டா, ஜார்ஜ்டவுன் 1996–97 1st இன்னிங்க்ஸ்: 92 (8x4, 1x6)
3 இங்கிலாந்து ஹெடிங்க்லே, லீட்ஸ் 2002/03 1st இன்னிங்க்ஸ்: 148 (23x4)
2nd இன்னிங்க்ஸ்: மூன்று கேச்சுகள்
4 இங்கிலாந்து தி ஓவல், லண்டன் 2002–03 1st இன்னிங்க்ஸ்: 217 (28x4); மூன்று கேச்சுகள்
5. நியூசிலாந்து மோடேரா, அஹ்மதாபாத் 2003–04 1st இன்னிங்க்ஸ்: 222 (28x4, 1x6); இரண்டு கேச்சுகள்
2nd இன்னிங்க்ஸ்: 73 (6x4); ஒரு கேச்
6. ஆஸ்திரேலியா அடிலைட் ஓவல், அடிலைட் 2003–04 1st இன்னிங்க்ஸ்: 233 (23x4, 1x6); ஒரு கேச்
2nd இன்னிங்க்ஸ்: 72* (7x4); இரண்டு கேச்சுகள்
7 பாகிஸ்தான் ராவல்பிண்டி 2003–04 1st இன்னிங்க்ஸ்: 270 (34x4, 1x6)
2nd இன்னிங்க்ஸ்: ஒரு கேச்
8. பாகிஸ்தான் ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 2004/05: 1st இன்னிங்க்ஸ்: 110 (15x4, 1x6); ஒரு கேச்
2nd இன்னிங்க்ஸ்: 135 (15x4)
9 மேற்கு இந்திய தீவுகள் சபீனா பார்க், கிங்க்ஸ்டன் 2006 1st இன்னிங்க்ஸ்: 81 (10x4)
2nd இன்னிங்க்ஸ்: 68 (12x4); ஒரு கேச்

ஒரு நாள் போட்டிகள்தொகு

ஒரு நாள் போட்டிகள் - ஆட்ட நாயகன் விருதுகள்  :

எண் எதிராக இடம் ஆண்டு ஆட்டத்தில் செயல்பாடு
1 பாகிஸ்தான் டொரோன்டோ 1996 46 (93b, 3x4)
2 தென்னாப்பிரிக்கா கிங்க்ஸ்மீட், டர்பன் 1996/97 84 (94b, 5x4, 1x6); ஒரு கேச்
3 நியூசிலாந்து டவுபோ 1998/99 123* (123b, 10x4, 1x6)
4 நியூசிலாந்து ஈடன் பார்க், ஆக்லாந்து 1998/99 51 (71b, 5x4, 1x6)
5. மேற்கு இந்திய தீவுகள் டொரோன்டோ 1999 77 (87b, 6x4, 2x6); நான்கு கேச்சுகள்
6 சிம்பாப்வே புலவாயோ 2001 72* (64b, 7x4, 1x6)
7 இலங்கை எட்க்பாஸ்டன், பிர்மிங்க்ஹாம் 2002 64 (95b, 5x4, 1x6); ஒரு கேச்
8 ஐக்கிய அரபு அமீரகம் தம்புல்லா 2004 104 (93b, 8x4); ஒரு கேச், ஒரு ஸ்டம்பிங்
9 மேற்கு இந்திய தீவுகள் தம்புல்லா 2005 52* (65b, 7x4), ஒரு கேச்
10 இலங்கை விதர்பா CA கிரவுண்ட், நாக்பூர் 2005/06 85 (63b, 8x4, 1x6); ஒரு கேச்
11 தென்னாபிரிக்கா மும்பை 2005/06 78* (106b, 10x4)
12 பாகிஸ்தான் அபுதாபி 2005–06 92 (116b, 10x4); ஒரு கேச்
13. மேற்கு இந்திய தீவுகள் சபீனா பார்க், கிங்க்ஸ்டன் 2006 105 (102b, 10x4, 2x6); ஒரு கேச்
14. இங்கிலாந்து எட்க்பாஸ்டன் 2007 92* (63b, 7x4, 1x6)

சர்ச்சைகள்தொகு

பந்து உருக்குலைத்த நிகழ்ச்சிதொகு

2004 ஆம் ஆண்டு டிராவிட் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பந்தை உருகுலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மேட்ச் ரெபரீ கிளைவ் லாய்ட் ராகுல் தெரிந்ததே சூயிங் கம்மை பந்தில் ஒட்டவைத்தார் என்ற குற்றசாட்டை உறுதிப்படுத்தினார். இதனை ராகுல் டிராவிட் தெரியாமல் செய்த பிழை என்று கூறிய போதும் அவர் ஒத்துக்கொள்ளவிலை.[47] ICC யின் நடத்தை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2.10 விதிக்கு எதிராக இந்திய நட்சத்திர வீரர் செவ்வாய் கிழமை இரவு கப்பாவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் பந்தில் சூயிங் கம்மை ஓட்டினார் என்று லாய்ட் தொலைக்காட்சி படங்கள் தெளிவாக காட்டியதாக கூறினார்.

இந்திய கோச் ஜான் ரைட் டிராவிடுக்கு சாதகமாக, "இது அறியாமல் செய்த பிழை", என்று கூறினார். டிராவிட் ICC விதிகளுக்கு உட்பட்டு இந்த நிகழ்வை பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்ககுலி இதனை "ஒரு விபத்து" என்று கூறுகிறார். ரிக்கி பாண்டிங் அவரது தனிப்பட்ட கருத்தில் " நாங்கள் இவ்வாறு செய்வோம் என்று நான் நினைக்கவில்லை," என்று கூறுகிறார்.[48]

சுயசரிதைகள்தொகு

ராகுல் டிராவிடின் தொழில் முன்னேற்ற வாழ்க்கையைப்பற்றி இரண்டு சுயசரிதைகள் எழுதப்பட்டுள்ளன:

 • ராகுல் டிராவிட் - எ பயோகிராபி - வேடம் ஜெய்ஷங்கர் (ISBN 817476481X). பதிப்பாளர்: UBSPD பப்ளிகேஷன்ஸ். தேதி: ஜனவரி 2004[49]
 • தி நைஸ் கை ஹூ பினிஷ்ட் பர்ஸ்ட் - தேவேந்திர பிரபுதேசாய். பதிப்பாளர்: ரூபா பப்ளிகேஷன்ஸ். தேதி: நவம்பர் 2005[50]

நிறுவனங்களுக்காக விளம்பர படுத்துதல்தொகு

சமுக ஈடுபாடுகள் :

 • சில்ட்ரன்ஸ் மூவ்மென்ட் பார் சிவிக் அவேர்னஸ் (CMCA)[61]
 • UNICEF சபோர்டர் அண்ட் எய்ட்ஸ் அவேர்னஸ் காம்பெயின்[62]

குறிப்புகள்தொகு

 1. Resignation from India Cricket Captiancy
 2. Cricketer of the Year, 2000 - Rahul Dravid
 3. "ICC Awards: Look no further Dravid". 2011-07-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-01 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Cricinfo - Records - India - Test matches - Most runs". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Cricinfo - Dravid joins the 10,000 club". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 6. "கிரிக்இன்ஃபோ, They came, they played, they conquered". 2009-05-11 அன்று பார்க்கப்பட்டது.
 7. Indian Dravid claims Test catch record
 8. Dravid’s breaks a few records in Napier
 9. "Retirment announced". ஓய்வு அறிவிக்கப்பட்டது. டைம்சு ஆஃப் இந்தியா. 9 மார்ச்சு 2012 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Cricinfo - Players and Officials - Rahul Dravid". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 11. Jaishankar, Vedam (2004). Rahul Dravid A Biography. USB Publishers Distributers Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8174764828. 
 12. 12.0 12.1 "Rahul Dravid". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 13. "The Hindu : Keeping the windows". 2013-10-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-31 அன்று பார்க்கப்பட்டது.
 14. People | The Great Wall of India
 15. "Dravid blessed with a baby boy". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Dravid becomes a dad again". 2009-05-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-29 அன்று பார்க்கப்பட்டது.
 17. "webindia123-Indian personalities-sports-RAHUL DRAVID". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Cricinfo - Coach Keki Tarapore reflects on pupil Rahul Dravid". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Maharashtra v Karnataka at Pune, 02-05 Feb 1991". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Batting - Most Runs (Ranji trophy 1991-92)". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 21. "South Zone squad 1991-92". 2007-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 22. கிரிக்இன்ஃபோ - 2nd Test: England v India at Lord's, Jun 20-24, 1996
 23. 3rd TEST: England v India at Nottingham, 4-9 Jul 1996
 24. கிரிக்இன்ஃபோ - 3rd Test: South Africa v India at Johannesburg, Jan 16-20, 1997
 25. 2nd ODI: India v Pakistan at Toronto, 17 Sep 1996
 26. centuries in both innings of a test match
 27. 3rd Test: New Zealand v India at Hamilton, 2-6 Jan 1999
 28. கிரிக்இன்ஃபோ - 2nd Test: India v Australia at Kolkata, Mar 11-15, 2001
 29. கிரிக்இன்ஃபோ - 2nd Test: South Africa v India at Port Elizabeth, Nov 16-20, 2001
 30. கிரிக்இன்ஃபோ - 1st Test: West Indies v India at Georgetown, Apr 11-15, 2002
 31. கிரிக்இன்ஃபோ - 3rd Test: England v India at Leeds, Aug 22-26, 2002
 32. கிரிக்இன்ஃபோ - 2nd Test: Australia v India at Adelaide, Dec 12-16, 2003
 33. கிரிக்இன்ஃபோ - 3rd Test: Pakistan v India at Rawalpindi, Apr 13-16, 2004
 34. 34.0 34.1 கிரிக்இன்ஃபோ - The Man Fridays
 35. Dravid reaches Test runs landmark
 36. Rahul Dravid – Firm on the path of greatness : Cricket COLUMNS : CricketZone. பரணிடப்பட்டது 2009-01-06 at the வந்தவழி இயந்திரம்Com, ஐஎஸ்பிஎன் 0595003885 பரணிடப்பட்டது 2009-01-06 at the வந்தவழி இயந்திரம்
 37. கிரிக்இன்ஃபோ - centuries in consecutive test innings
 38. கிரிக்இன்ஃபோ records page on max partnership runs made by a pair
 39. "The Hindu : Sport / Cricket : Multan declaration was a mistake: Ganguly". 2005-09-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-01 அன்று பார்க்கப்பட்டது.
 40. கிரிக்இன்ஃபோ - Dravid regrets top-order failiure
 41. "The Hindu : Sport / Cricket : Shastri criticises Dravid". 2007-10-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-12-17 அன்று பார்க்கப்பட்டது.
 42. Zee News - Pathan's destiny is in his own hands: Dravid
 43. "Rahul Dravid - Wisden Cricketer of the Year". விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது.
 44. 44.0 44.1 "Dravid walks away with honours". தி இந்து. 2004-09-09. 2007-10-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 45. "Rahul Dravid awarded Padma Shri". டெக்கன் ஹெரால்டு. 2004-07-01. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 46. "ICC Test Team Captain 2006". ரெடிப்.காம். 2006-11-03. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 47. Dravid ball-tampering incident SMH
 48. John Wright defence of Dravid கிரிக்இன்ஃபோ
 49. "Book Review - Rahul Dravid, A Biography". 2007-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது.
 50. "Book Launch:The Nice Guy Who Finished First". ரெடிப்.காம். [2005-11-17]. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 51. "3 more ambassadors for Reebok". பிசினஸ் லைன். 2004-05-07. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 52. "Rahul Dravid to be the brand ambassador of Pepsi". ரெடிப்.காம். 1997-06-10. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 53. "Rahul Dravid to be the brand ambassador of". The Tribune. 2002-05-12. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 54. "Rahul Dravid to be the brand ambassador of Castrol". பிசினஸ் லைன். 2001-02-16. 2007-10-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 55. "Rahul Dravid to be the honorary brand ambassador of Karnataka Tourism". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2004-02-23. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 56. "Rahul Dravid to be the brand ambassador of Max Life Insurance". சிஃபி. 2005-04-27. 2007-09-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 57. "Rahul Dravid to be the brand ambassador of Bank of Baroda". பிசினஸ் லைன். 2005-06-07. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 58. "Rahul Dravid to be the brand ambassador of Citizen Watches". பிசினஸ் லைன். 2006-05-09. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 59. "Rahul Dravid to be the brand ambassador of Skyline Construction". ரெடிப்.காம். 2006-11-10. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 60. "Rahul Dravid to be the brand ambassador of Sansui". பிசினஸ் லைன். 2007-02-16. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 61. "Rahul Dravid to endorse CMCA". டெக்கன் ஹெரால்டு. 2005-01-27. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 62. "Rahul Dravid leads AIDS Awareness Campaign". Indian Television.com. 2004-07-16. 2007-03-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகுல்_திராவிட்&oldid=3544050" இருந்து மீள்விக்கப்பட்டது