இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்

இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் (Lord's Cricket Ground) (பொதுவாக இலார்ட்சு) என்பது ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனின் செயின்ட். ஜான்சு வுட் பகுதியில் அமைந்துள்ள ஓர் துடுப்பாட்ட மைதானம் ஆகும். இதனுடைய நிறுவனர் தாமசு இலார்டு நினைவாக பெயரிடப்பட்டுள்ள இவ்விளையாட்டரங்கம் மேரைல்போன் துடுப்பாட்ட சங்கத்திற்கு சொந்தமானது. மேலும் மிடில்செக்சு கௌன்ட்டி துடுப்பாட்ட சங்கம், இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம், மற்றும் ஐரோப்பிய துடுப்பாட்ட அவையின் இருப்பிடமாக இது விளங்குகிறது. ஆகத்து 2005 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி)யின் தலைமையிடமாகவும் இருந்தது.

இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்
இலார்ட்சு
துடுப்பாட்ட வீரர்கள் கூடாரம்
அரங்கத் தகவல்
அமைவிடம்செயின்ட் ஜான்சு வுட், இலண்டன்
உருவாக்கம்1814
இருக்கைகள்28,000
உரிமையாளர்மேரைல்போன் துடுப்பாட்ட சங்கம்
குத்தகையாளர்இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம்
முடிவுகளின் பெயர்கள்
அணிக்கூடார முனை
நர்சரி முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வுசூலை 21 1884:
 இங்கிலாந்து v  ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஆகத்து 20 2012:
 இங்கிலாந்து v  தென்னாப்பிரிக்கா
முதல் ஒநாபஆகத்து 26 1972:
 இங்கிலாந்து v  ஆத்திரேலியா
கடைசி ஒநாபசெப்டம்பர் 16 2011:
 இங்கிலாந்து v  இந்தியா
அணித் தகவல்
மேரைல்போன் துடுப்பாட்ட சங்கம் (1814 – நடப்பு)
மிடில்செக்சு கௌன்டி துடுப்பாட்ட சங்கம் (1877 – நடப்பு)
சூலை 24 2011 இல் உள்ள தரவு
மூலம்: CricketArchive

இலார்ட்சு மைதானம் "துடுப்பாட்டத்தின் தாயகம்" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு உலகின் மிகப்பழமையான விளையாட்டு அருங்காட்சியகம் உள்ளது. இந்த மைதானம் 2014ஆம் ஆண்டு தனது 200ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இங்கு இதுவரை மொத்தம் 5 முறை துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி நடைபெற்றுள்ளது. [1] [2]

துவக்க வரலாறு தொகு

தற்போதைய இலார்ட்சு மைதானத்தில் விளையாடப்பட்ட முதல் ஆட்டமாக மேரைல்போன் துடுப்பாட்ட சங்கத்திற்கும் ஹெர்ட்போர்டுசையருக்கும் சூன் 22, 1814இல் நடந்த ஆட்டம் குறிப்பிடப்படுகிறது.[3]

மிகவும் தொன்மையான துடுப்பாட்ட (இன்றுவரை தொடரும்) நிகழ்ச்சி ஈட்டனுக்கும் ஹர்ரோவிற்கும் ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டமாகும். இந்த ஆட்டம் முதன்முதலாக பழைய மைதானத்தில் 1805இலும் தற்போதைய மைதானத்தில் சூலை 1818இலும் நடைபெற்றது.

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lord's Cricket Ground
என்பதின் ஊடகங்கள் உள்ளன.