ரவீந்திர ஜடேஜா

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

இரவீந்திரசிங் அனிருத்சிங் ஜடேஜா (Ravindrasinh Anirudhsinh Jadeja, பிறப்பு: திசம்பர் 6 1988), இந்தியத் துடுப்பாட்டக்காரர். பன்முக வீரரான இவர் இடதுகை மட்டையாளராகவும் இடது-கை சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். இவர் சௌராட்டிர அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடிவருகிறார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்குசு அணிக்காக விளையாடி வருகிறார்.

இரவீந்திர ஜடேஜா
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு6 திசம்பர் 1988 (1988-12-06) (அகவை 35)
ஜாம்நகர், குஜராத், இந்தியா
பட்டப்பெயர்ஜட்டு
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 275)13 திசம்பர் 2012 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு22 நவம்பர் 2019 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 177)8 பிப்ரவரி 2009 எ. இலங்கை
கடைசி ஒநாப22 திசம்பர் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்8
இ20ப அறிமுகம் (தொப்பி 22)10 பிப்ரவரி 2009 எ. இலங்கை
கடைசி இ20ப8 திசம்பர் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006–தற்போதுசௌராட்டிரா
2008–2009இராசத்தான் இராயல்சு (squad no. 12)
2011கொச்சி தசுகர்சு கேரளா (squad no. 12)
2012–2015; 2018–தற்போதுசென்னை சூப்பர் கிங்குசு (squad no. 8) (முன்பு 12)
2016–2017குசராத்து இலயனுசு (squad no. 8)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 56 168 50 110
ஓட்டங்கள் 2,145 2,411 217 6,201
மட்டையாட்ட சராசரி 34.04 32.58 15.50 45.93
100கள்/50கள் 1/16 0/13 0/0 10/33
அதியுயர் ஓட்டம் 100* 87 44* 331
வீசிய பந்துகள் 13,967 8,557 973 26,025
வீழ்த்தல்கள் 223 188 39 438
பந்துவீச்சு சராசரி 24.96 37.36 29.53 24.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 1 0 27
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 0 7
சிறந்த பந்துவீச்சு 7/48 5/36 3/48 7/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
39/– 60/– 21/– 90/–
மூலம்: ESPNcricinfo, 25 நவம்பர் 2021

2008 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் விராட் கோலியின் தலைமையில் கோப்பை வென்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். பெப்ரவரி 8, 2009 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்குஎதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். அந்தப்போட்டியில் 77 பந்துகளை எதிர்கொண்டு 60 ஓட்டங்களை எடுத்தார். பின் திசம்பர் 13, 2012 இல் நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமனார்.

2012 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்குசு அணி இவரை 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. சூதாட்டப் புகாரில் சிக்கி சென்னை சூப்பர் கிங்குசு அணி இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் இந்திய மதிப்பில் 9.5 கோடி ரூபாய்க்கு குசராத்து லயன்சு அணி இவரை ஏலத்தில் எடுதத்து. சனவரி 22, 2017 இல் கொல்கத்தா, ஈடன் கார்டன்சு மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் சாம் பில்லிங்குசு இலக்கை வீழ்த்திய போது 150 இலக்குகளை வீழ்த்திய முதல் இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.[1] மார்ச்சு, 2017 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் நீணடகாலம் முதலிடத்தில் நீடித்த ரவிச்சந்திரன் அசுவினைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்

தொகு

2008 இந்தியன் பிரீமியர் லீக்க்கின் முதல் பருவத்தில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். முதல் பருவத்தில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற்று கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார். இந்தத் தொடரின் முடிவில் 14 போட்டிகளில் விளையாடிய இவர் 135 ஓட்டங்களை எடுத்தார். இவரின் அதிகபட்ச ஓட்டம் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிராக இறுதிவரை ஆட்டமிழக்காமல் எடுத்த 36 ஓட்டங்களாகும். இவரின் ஸ்டிரைக் ரேட் 131.06 ஆக இருந்தது. 2009 ஆம் ஆண்டிலும் சிறப்பாக விளையாடினார். மொத்தம் 295 ஓட்டங்களை எடுத்த இவரின் ஸ்டிரைக் ரேட் 110.90 ஆக இருந்தது.[2] ஒரு ஓவருக்கு 6.5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்[3]. அப்போதைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராக இருந்த ஷேன் வோர்ன் இவரை சூப்பர் ஸ்டார் எனவும் ராக் ஸ்டார் எனவும் புனைபெயர் கொண்டு அழைத்தார்.[4][5]

2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா அணி 950,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. பின் 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவரை ஏலத்தில் எடுப்பதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்கும் கடும் போட்டி நிலவியது பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது[6]. இதன் இரண்டாவது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் 4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.[7]

சான்றுகள்

தொகு
  1. NDTVSports.com. "Ravindra Jadeja Becomes First Indian Left-Arm Spinner to Complete 150 Scalps in ODIs – NDTV Sports". NDTVSports.com. https://sports.ndtv.com/india-vs-england-2016-17/ravindra-jadeja-becomes-first-indian-left-arm-spinner-to-complete-150-scalps-in-odis-1651436. 
  2. "Indian Premier League, 2009 / Records / Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
  3. "Indian Premier League, 2009 / Records / Best economy rates". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
  4. "Ravindra Jadeja: The Rockstar of Indian cricket". Zee News. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  5. Premachandran, Dileep (21 January 2009). "Warne predicts bright future for Jadeja the jewel". The Guardian (London). https://www.theguardian.com/sport/blog/2009/jan/21/ravindra-jadeja-dileep-premachandran-ipl. பார்த்த நாள்: 11 June 2013. 
  6. Siddarth Ravindran (4 February 2012). "Millions for Jadeja, Jayawardene and Vinay". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
  7. "6th match – Deccan Chargers v Chennai Super Kings Jadeja also became the only player in IPL to get caught in the deep and win super match as it was a no ball and won the match against CSK vs RCB". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீந்திர_ஜடேஜா&oldid=4000260" இலிருந்து மீள்விக்கப்பட்டது