ரவிச்சந்திரன் அசுவின்

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

ரவிச்சந்திரன் அசுவின் ('Ravichandran Ashwin, ஒலிப்பு, பிறப்பு: 17 செப்டம்பர் 1986) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அசுவின், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை யை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் இதர உள்நாட்டு போட்டிகளில் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

ரவிச்சந்திரன் அசுவின்
Ravichandran Ashwin
2015 இல் அசுவின்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு17 செப்டம்பர் 1986 (1986-09-17) (அகவை 38)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டப்பெயர்
உயரம்188[3] cm (6 அடி 2 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைஎதிர்ச்சுழல்
பங்குபன்முக வீரர்
வலைத்தளம்raviashwin.com
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 271)6 நவம்பர் 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு6 திசம்பர் 2024 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 185)5 சூன் 2010 எ. இலங்கை
கடைசி ஒநாப8 அக்டோபர் 2023 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்99
இ20ப அறிமுகம் (தொப்பி 30)12 சூன் 2010 எ. சிம்பாப்வே
கடைசி இ20ப10 நவம்பர் 2022 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்99
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07–இன்றுதமிழ் நாடு
2008–2015சென்னை சூப்பர் கிங்ஸ்
2016–2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
2016–இன்றுதமிழ்நாடு பிரீமியர் லீக்
2017ஊசுட்டர்சயர்
2018–2019பஞ்சாப் கிங்ஸ்
2019நோட்டிங்காம்சயர்
2020–2021டெல்லி கேபிடல்ஸ்
2021சரே
2022–2024ராஜஸ்தான் ராயல்ஸ்
2025சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ப.ஒ.நா ப.இ20 மு.த
ஆட்டங்கள் 106 116 65 156
ஓட்டங்கள் 3,503 707 184 5,221
மட்டையாட்ட சராசரி 25.92 16.44 26.28 28.06
100கள்/50கள் 6/14 0/1 0/0 7/25
அதியுயர் ஓட்டம் 124 65 31* 124
வீசிய பந்துகள் 27,138 6,141 1,452 40,702
வீழ்த்தல்கள் 537 156 72 758
பந்துவீச்சு சராசரி 23.95 33.20 23.22 24.81
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
37 0 0 55
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
8 0 0 12
சிறந்த பந்துவீச்சு 7/59 4/25 4/8 7/59
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
36/– 30/– 11/– 58/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 20 திசம்பர் 2024
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடங்கள்அசுவின்
காணொளி வகை(கள்)
சந்தாதாரர்கள்1.61 மில்.
மொத்தப் பார்வைகள்225.81 மில்.
100,000 சந்தாதாரர்கள் 2020
1,000,000 சந்தாதாரர்கள் 2023

19 திசம்பர் 2024 அன்று தகவமைக்கப்பட்டது

அசுவின் தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் 500 இலக்குகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 300 இலக்குகளை மிக வேகமாக எட்டிய பந்து வீச்சாளர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் பத்து முறை தொடர் நாயகன் விருதுகளை வென்றதன் மூலம் அதிக தொடர் நாயகன் விருது வென்றோரின் பட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளார். பன்முக வீரரான இவர் ஐந்து சதங்களை அடித்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் 3000 ஓட்டங்கள் மற்றும் 500 இலக்குகளை எடுத்த மூன்று வீரர்களில் ஒருவர் ஆவார்.

அசுவின் இளையோர் வயது போட்டிகளில் துவக்க மட்டையாளராகக் தனது துடுப்பாட்ட வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் அதில் பெரிதாக வெற்றி காணாததால் பின்னர் ஒரு வலது கை சுழற்பந்துவீச்சாளராக மாறினார். இவர் திசம்பர் 2006 இல் தமிழ்நாட்டின் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். பிறகு அந்த அணிக்குத் தலைமை தாங்கினார். பின் 2010 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் இவரின் திறமை வெளிச்சத்திற்கு வந்தது. இவரது பந்துவீச்சு திறனின் அடிப்படையில் சூன் 2010 இல் இந்திய துடுப்பாட்ட அணிக்காக விளையாடட தேர்வுசெய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டின் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 வாகையாளர் போட்டியில் அதிக இலக்குகள் எடுத்தவர் மற்றும் தொடர் நாயகன் விருதினையும் வென்றார். இவர் இரண்டு பன்னாட்டு இருபது20 வாகையாளர் கோப்பைகள் மற்றும் இரண்டு ஐபிஎல் பட்டங்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக வென்றார்.

2011 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலேயே ஐந்து இலக்குகளைப் பெற்று அறிமுகப் போட்டியில் ஐந்து இலக்குகள் பெறும் ஏழாவது இந்திய வீரரானார். துணைக்கண்டங்களில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய அசுவின், 2013 ஆம் ஆண்டின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தின் போது 29 இலக்குகள் எடுத்தார். நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச இலக்குகள் இதுவாகும். தனது பதினெட்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 இலக்குகள் பெற்றார். தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் குறைவான போட்டிகளில் 100 இலக்குகள் பெற்ற இந்திய வீரர் எனும் சாதனையப் படைத்தார். 2016 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த வீரர் விருதினைப் பெற்ற அசுவின், இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் ஆனார். இவர் ஐந்து முறை பன்னாட்டு துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வு துடுப்பாட்ட அணிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த தசாப்தத்தின் (2011-20) சிறந்த தேர்வு துடுப்பாட்ட அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டில், இவருக்கு இந்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அசுவின் செப்டம்பர் 17, 1986 இல் சென்னையில் ரவிச்சந்திரன் மற்றும் சித்ரா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[4] இவரது தந்தை ரவிச்சந்திரன், வேகப்பந்து வீச்சாளராக கிளப் அளவில் துடுப்பாட்ட விளையாட்டில் பங்கு பெற்றுள்ளார்.[5][6] அசுவின் தனது பள்ளிப்படிப்பை பத்ம சேசாத்ரி பால பவன் மற்றும் புனித பேடின் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.[7][8] ஒய்.எம்.சி.ஏ. அணிக்காக இவர் ஒன்பது வயதில் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார். இவரது ஆரம்ப காலத்தில் சந்திரசேகர் ராவிடம் பயிற்சி எடுத்தார்.[7] இளையோர் வயது போட்டிகளில் துவக்க மட்டையாளராகக் தனது துடுப்பாட்ட வாழ்க்கையை தொடங்கினார்.[5] ஆனால் அதில் பெரிதாக வெற்றி காணாததால் பின்னர் ஒரு வலது கை சுழற்பந்துவீச்சாளராக மாறினார்.[9][10] சென்னையிலுள்ள சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.[11]

அசுவின் சென்னையிலுள்ள மேற்கு மாம்பலத்தில் வசிக்கிறார்.[4] 2011 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி தனது நண்பரான பிரித்தி நாராயணனை மணந்தார்.[12] இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[13][14]

ஆட்ட வாழ்வு

தொகு

உள்நாட்டு போட்டிகள்

தொகு

அசுவின் ரஞ்சிக் கோப்பை மற்றும் இதர உள்நாட்டு போட்டிகளில் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார்.[15] அசுவின் 2006 ஆம் ஆண்டு தனது 20வது வயதில் அரியானாக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் தமிழ்நாட்டிற்காக முதல்தர துடுப்பாட்டத்தில் அறிமுகமாகி ஆறு இலக்குகளை வீழ்த்தினார்.[15][16] ஒரு நாள் மற்றும் இருபது20 துடுப்பாட்டத்தில் ஆந்திராவிற்கு எதிராக தமது ஆட்டத்தைத் துவங்கினார்.[17][18][19] 2008-09 இல் விஜய் ஹசாரே கோப்பையை வென்ற தமிழக அணிக்கு அசுவின் கேப்டனாக இருந்தார்.[20][21]

பன்னாட்டு போட்டிகள்

தொகு

ஒருநாள் துடுப்பாட்டத்தில் சூன் 5, 2010 அன்று இலங்கை அணிக்கு எதிராக அசுவின் தனது முதல் போட்டியை ஆடினார். இவர் 32 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது.[22][23] அசுவின் 15 பேர் கொண்ட 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணதிற்கான இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.[24] அசுவின் உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார், இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி.[25][26]

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்டத்தின் போது 103 ஓட்டங்களைப் பெற்று நவம்பர் 25, 2011.இல் தனது முதல் சதத்தைப் நிறைவேற்றினார்.[27] அறிமுகமாகிய முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் (நவம்பர் 6-10, 2011) ஒன்பது இலக்குகளை வீழ்த்திய அசுவின், தனது 3வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் ஐந்து இலக்குகளை வீழ்த்தி, ஒரு சதமும் அடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் எடுத்த 3வது இந்தியர் ஆவார். இதற்கு முன்பு 1952ல் வினோ மன்கட்டும், 1962ல் பாலி உம்ரிகரும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.[28][29]

இருபது20

தொகு

2008 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்க ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் உள்நாட்டு வீரராக அசுவின் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[30] இவர் 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். அப்போதிருந்து 2015 வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு இந்த அணிகாக்காக விளையாடினார்.[31] 2010 ஆண்டு போட்டிகளில் இவர் 13 இலக்குகளை வீழ்த்தி, சென்னை முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்வதற்கும் பன்னாட்டு இருபது20 வாகையாளர் (சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20) கோப்பைக்கு தகுதி பெறுவதற்கும் உதவினார்.[31][32] 2010ல் சென்னை பன்னாட்டு இருபது20 வாகையாளர் பட்டத்தை வென்றது, அசுவின் தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[33] அசுவின் 2011 இந்தியன் பிரீமியர் லீக்கில் 20 இலக்குகளை வீழ்த்தி சென்னை அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற உதவினார்.[34] அசுவின் தனது இரண்டாவது பன்னாட்டு இருபது20 வாகையாளர் பட்டத்தை 2014 ஆம் ஆண்டு வென்றார்.[35] ஐபிஎல்லில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக எட்டு ஆண்டுகளில் 97 போட்டிகளில் விளையாடி 90 இலக்குகளை அசுவின் வீழ்த்தியுள்ளார்.[31]

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு வருடங்கள் இடைநீக்கபட்டதைத் தொடர்ந்து 2016 இந்தியன் பிரீமியர் லீக்கில் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணிக்காக விளையாடினார்.[36] காயம் காரணமாக 2017 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளிலிருந்து விலகினார்.[37] 2018 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முந்தைய ஏலத்தில் அசுவின் ₹7.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.[38][39]

2020 இந்தியன் பிரீமியர் லீக்குக்கு முன்னதாக, அசுவின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறினார்.[40] அந்த ஆண்டு போட்டிகளில் 13 இலக்குகளை வீழ்த்தி, அணியில் அதிக இலக்குகளை எடுத்தவர்களின் பட்டியலில் நான்காவது இடம் பிடித்தார்.[41][42] 2022 ஐபிஎல் ஏலத்தில், அசுவினை ₹5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.[43][44][45] இவர் 12 இலக்குகளை வீழ்த்தி மற்றும் 191 ஓட்டங்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 2022 ஆம் ஆண்டு போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு சென்றதில் பெரும்பங்காற்றினார்.[31] ஏப்ரல் 2022 இல், ஹர்பஜன் சிங்க்குப் பிறகு ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது சுழற் பந்துவீச்சார் ஆனார்.[46][47]

புள்ளி விவரம்

தொகு

மட்டையாளராக

தொகு
ரவிச்சந்திரன் அசுவின் தேர்வுத்துடுப்பாட்டத்தில் சதம் அடித்த போட்டிகள்
வ.எ. ஓட்டங்கள் எதிரணி இடம் ஆண்டு முடிவு
1 103   மேற்கிந்தியத் தீவுகள் வான்கேடே அரங்கம், மும்பை 2011 டிரா[48]
2 124   மேற்கிந்தியத் தீவுகள் ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 2013 வெற்றி[49]
3 113   மேற்கிந்தியத் தீவுகள் விவியன் ரிச்சர்ட்ஸ் அரங்கம், ஆண்டிகுவா மற்றும் பர்புடா 2016 வெற்றி[50]
4 118   மேற்கிந்தியத் தீவுகள் டேரன் சமி துடுப்பாட்ட அரங்கம், செயிண்ட் லூசியா 2016 வெற்றி[51]
5 106   இங்கிலாந்து எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை 2021 வெற்றி[52]

பந்துவீச்சாளராக

தொகு
ரவிச்சந்திரன் அசுவின் தேர்வுத்துடுப்பாட்டத்தில் பத்து இலக்குகளுக்கு மேல் எடுத்த போட்டிகள்
வ.எ. இலக்கு/ஓட்டங்கள் எதிரணி இடம் ஆண்டு முடிவு
1 12/85   நியூசிலாந்து இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்து 2012 வெற்றி
2 12/198   ஆத்திரேலியா எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை 2013 வெற்றி
3 10/160   இலங்கை காலி பன்னாட்டு அரங்கம், காலி 2015 தோல்வி
4 12/98   தென்னாப்பிரிக்கா விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர் 2015 வெற்றி
5 10/225   நியூசிலாந்து கிரீன் பார்க் அரங்கம், கான்பூர் 2016 வெற்றி
6 13/140   நியூசிலாந்து ஹோல்கர் அரங்கம், இந்தோர் 2016 வெற்றி
7 12/167   இங்கிலாந்து வான்கேடே அரங்கம், மும்பை 2016 வெற்றி
8 12/131   மேற்கிந்தியத் தீவுகள் வின்ட்சர் பார்க், டொமினிக்கா 2023 வெற்றி

மரியாதைகள் மற்றும் விருதுகள்

தொகு
 
அசுவின் அர்ஜுனா விருது பெறுகிறார்
 
அசுவின் சியட் விருதை பெறுகிறார்

இந்தியா

தொகு

சென்னை சூப்பர் கிங்ஸ்

தொகு

தனிநபர்

தொகு

துடுப்பாட்ட சாதனைகள்

தொகு
  • தேர்வு துடுப்பாட்டத்தில் 250, 300 மற்றும் 350 இலக்குகளை வேகமாக எட்டியவர் (போட்டிகளின் அடிப்படையில்)[73][74]
  • 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 தேர்வு துடுப்பாட்ட இலக்குகளை அதிவேகமாக எட்டிய இந்தியர் (போட்டிகளின் அடிப்படையில்)[75][76][77][78][79][80][81]
  • மூன்று வெவ்வேறு போட்டிகளில் ஒரே தேர்வு போட்டியில் சதம் அடித்த மற்றும் ஐந்து இலக்குகளை வீழ்த்திய ஒரே இந்திய துடுப்பாட்ட வீரர்[82]
  • டி20யில் 50 இலக்குகளை வீழ்த்திய முதல் இந்தியர்[83]
  • தேர்வு போட்டிகளில் இரண்டாவது அதிக தொடர் நாயகன் விருதுகள் (10)[84]
  • தேர்வு போட்டிகளில் அதிக முறை ஐந்து இலக்குகளை வீழ்த்தியதில் மூன்றாவது இடம் (36)[85] and fastest to 25 five wicket hauls[86][87]
  • இந்தியாவுக்காக தேர்வு போட்டிகளில் இரண்டாவது அதிக இலக்குகளை வீழ்த்தியவர் (501)[88][89]
  • ஒரு ஆண்டில் 500 ஓட்டங்கள் மற்றும் 50 இலக்குகளை எடுத்த இரண்டாவது இந்தியர் (2016)[90]
  • ஒரு சீசனில் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் (82)[91][92]
  • தேர்வு போட்டிகளில் பெரும்பாலான இடது கை வீரர்களின் இலக்குகளை வீழ்த்தியவர்[93][94]
  • Second Indian bowler to take 300 Test wickets at home [95]
  • பன்னாட்டு போட்டிகளில் 700 இலக்குகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியர்[96]
  • தேர்வு போட்டிகளில் 3000 ஓட்டங்கள் மற்றும் 500 இலக்குகளை வீழ்த்திய மூன்று வீரர்களில் ஒருவர்[97]
  • தேர்வு போட்டிகளில் இந்தியாவில் அதிக இலக்குகளை எடுத்தவர் (354)[98]
  • ஐசிசி ஆடவர் தரவரிசையில் (மார்ச் 2024) முதல் இடத்தில் உள்ள பந்துவீச்சாளர் மற்றும் டெஸ்டில் இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற இந்திய பந்துவீச்சாளர்[99][100]

வெளி விவரங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The story behind the nicknames of Indian players". Cric Tracker. 7 March 2015. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  2. "Pink-ball Test: Virat Kohli has a new nickname for modern-day legend R Ashwin after 400-wicket milestone". இந்தியா டுடே. 25 February 2021. Archived from the original on 3 December 2023. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  3. "Milestone Man Ashwin's High Five!". தி இந்து. 26 July 2017 இம் மூலத்தில் இருந்து 25 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230925130517/https://sportstar.thehindu.com/cricket/india-vs-srilanka-2017/milestone-man-ashwins-high-five/article19363115.ece. 
  4. 4.0 4.1 Mohan, Sai (28 April 2011). "Interview with R.Ashwin's parents". Mid-Day. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013.
  5. 5.0 5.1 "R Ashwin and the spin evolution". Forbes India. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
  6. "Ashwin's off-beat story: Failed opening batsman to India's spin hope". The Indian Express. 15 April 2010. பார்க்கப்பட்ட நாள் 14 December 2012.
  7. 7.0 7.1 Prasad, Bagawati (28 November 2017). "For Ashwin, it's all in the mind". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 22 June 2018.
  8. "St.Bede's felicitates cricketer and alumni, R. Ashwin". Mylapore Times. 20 January 2011. http://www.mylaporetimes.com/2011/01/st-bedes-felicitates-cricketer-r-ashwin/. 
  9. Mukhopadhyay, Atreyo (15 February 2011). "Right turn". Hindustan Times. https://www.hindustantimes.com/cricket/right-turn/story-43XyFVMW42XKDRf0uKgaVP.html. 
  10. Manohar, T. S. (19 October 2017). "How the four Ts built cricketing careers". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/how-the-four-ts-built-cricketing-careers/article19883002.ece. 
  11. "Alma mater that moulded Ashwin's cricketing career". Times of India. 12 December 2016. https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/alma-mater-that-moulded-ashwins-cricketing-career/articleshow/55935824.cms. 
  12. "Ravichandran Ashwin to marry Sunday". New Indian Express. 9 November 2011. https://www.newindianexpress.com/sport/cricket/2011/nov/09/ravichandran-ashwin-to-marry-sunday-308509.html. 
  13. "'Wanted to get my daughters involved too in the moment. They went, 'Did we win?'". 15 January 2021.
  14. "Why Ravichandran Ashwin's wife announced birth of 2nd 'carrom' baby five days after delivery". Firstpost. 27 December 2016. http://www.firstpost.com/firstcricket/sports-news/why-ravichandran-ashwins-wife-announced-birth-of-2nd-carrom-baby-five-days-after-delivery-3175276.html. 
  15. 15.0 15.1 "R Ashwin, profile". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  16. "Group A, Chennai, December 09 - 12, 2006, Ranji Trophy Super League". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  17. "South Zone, Secunderabad, February 10, 2007, Ranji One-Day Trophy". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  18. "South Zone, Visakhapatnam, April 03, 2007, Inter State Twenty-20 Tournament". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  19. "Ranji Trophy 2019-20: Ashwin, Karthik return to TN squad". The Hindu. 8 January 2020. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  20. "Final, Agartala, March 09, 2009, Vijay Hazare Trophy". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  21. "2nd Semi-final, Alur, December 26, 2015, Vijay Hazare Trophy". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  22. "ODI match statistics, Ashwin". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  23. "T20 match statistics, Ashwin". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  24. "No Rohit Sharma in World Cup squad". ESPNcricinfo. 17 January 2011. https://www.espncricinfo.com/story/icc-world-cup-2011-no-rohit-sharma-in-world-cup-squad-497102. 
  25. "Final (D/N), Wankhede, April 02, 2011, ICC Cricket World Cup". ESPNcricinfo. https://www.espncricinfo.com/series/icc-cricket-world-cup-2010-11-381449/india-vs-sri-lanka-final-433606/full-scorecard. 
  26. "Ashwin Origin story". தி இந்து. 28 September 2023. https://sportstar.thehindu.com/videos/ashwin-origin-story-chennai-odi-world-cup-team-squad-india-2023/article67357880.ece. 
  27. "Test match statistics, Ashwin". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  28. "Match fizzles after Ashwin century". ESPNcricinfo. 25 November 2011. https://www.espncricinfo.com/series/west-indies-tour-of-india-2011-12-535995/india-vs-west-indies-3rd-test-535999/match-report-4. 
  29. "Century and five-wicket haul in the same Test". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 February 2024.
  30. "BCCI for one-year IPL contract for u-22 and 19 players". The Hindu. 25 February 2008. https://www.thehindu.com/todays-paper/tp-sports/BCCI-for-one-year-IPL-contract-for-u-22-and-19-players/article15173194.ece. 
  31. 31.0 31.1 31.2 31.3 "Player overview:Ravichandran Ashwin". IPL. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  32. "Raina, Dhoni star in Chennai triumph". ESPNcricinfo. Archived from the original on 26 February 2021. பார்க்கப்பட்ட நாள் 4 June 2013.
  33. "Warriors v Chennai: Dominant Chennai seal title". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 April 2012.
  34. "Most wickets, IPL 2011". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 May 2023.
  35. "2014 Champions League Twenty20". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  36. Amol (5 January 2016). "Pune picks Dhoni, Rajkot recruits Raina". The Hindu. http://www.thehindu.com/sport/cricket/ipl/ipl-2016-pune-picks-dhoni-ashwin-rajkot-recuits-raina-jadeja/article7993173.ece. 
  37. "Ravichandran Ashwin to miss IPL 2017 due to sports hernia injury". Hindustan Times. 31 March 2017. https://www.hindustantimes.com/ipl-2017/ravichandran-ashwin-set-to-be-ruled-out-of-ipl-2017-due-to-injury-reports/story-4WRyUsZ5DqXsSbebEcntwO.html. 
  38. "IPL Auction 2018: Complete list of all players sold and unsold". Indian Express. 12 February 2018. http://indianexpress.com/article/sports/ipl-2018/ipl-auction-2018-complete-sold-unsold-player-list-live-price-squad-5040823/. 
  39. "IPL 2020: R Ashwin reveals why he left Kings XI Punjab for Delhi Capitals". Times Now. 23 May 2020. https://www.timesnownews.com/sports/cricket/article/ipl-2020-r-ashwin-reveals-why-he-left-kings-xi-punjab-for-delhi-capitals/595976. 
  40. "Kings XI Punjab trade R Ashwin to Delhi Capitals". ESPNcricinfo. 7 November 2019. https://www.espncricinfo.com/story/_/id/28028554/kings-xi-punjab-trade-r-ashwin-delhi-capitals. 
  41. "R Ashwin traded to Delhi Capitals from Kings XI Punjab". IPL. 8 November 2019. https://www.iplt20.com/news/196794/r-ashwin-traded-to-delhi-capitals-from-kings-xi-punjab#:~:text=Ace%20off-spinner%20R%20Ashwin,trade%20by%20Kings%20XI%20Punjab.. 
  42. "DC Squad". Delhi Capitals. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  43. Muthu, Deivarayan; Somani, Saurabh (12 February 2022). "Live blog: The IPL 2022 auction". ESPNcricinfo. https://www.espncricinfo.com/live-blog/live-blog-ipl-2022-auction-1300707. 
  44. "Retired out: Ashwin, RR think out of the box". Indian Express. 11 April 2022. https://indianexpress.com/article/sports/ipl/ashwin-retires-out-rr-thinks-out-of-the-box-tops-the-table-7863038/. 
  45. Chakraborty, Amlan (11 April 2022). "Ashwin's 'retired out' tactic may catch on". Reuters. https://www.reuters.com/lifestyle/sports/ashwins-retired-out-tactic-may-catch-2022-04-11/. 
  46. "Most wickets in IPL". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  47. "RCB vs RR: R Ashwin becomes 2nd off-spinner to take 150 wickets in Indian Premier League". India Today. 26 April 2022. https://www.indiatoday.in/sports/ipl-2022/story/rcb-vs-rr-r-ashwin-becomes-2nd-off-spinner-to-take-150-wickets-in-indian-premier-league-1942174-2022-04-26. 
  48. "3rd Test, Wankhede, November 22 - 26, 2011, West Indies tour of India". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  49. "1st Test, Eden Gardens, November 06 - 08, 2013, West Indies tour of India". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  50. "1st Test, North Sound, July 21 - 24, 2016, India tour of West Indies and USA". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  51. "3rd Test, Gros Islet, August 09 - 13, 2016, India tour of West Indies and USA". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  52. "2nd Test, Chennai, February 13 - 16, 2021, England tour of India". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  53. "Asia cup 2010". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2022.
  54. "Final, Asia cup 2016". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2022.
  55. "2011 Cricket World Cup". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
  56. "2013 ICC Champions Trophy". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
  57. "Chennai Super Kings Squad – Indian Premier League, 2010 Squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
  58. "Chennai Super Kings Squad – Indian Premier League, 2011 Squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
  59. "Final (D/N), Johannesburg, September 26, 2010, Champions League Twenty20". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2022.
  60. "Poly Umrigar award for Ashwin". The Hindu. 26 December 2013. https://www.thehindu.com/sport/cricket/poly-umrigar-award-for-ashwin/article5503936.ece. 
  61. "Ashwin presented with Arjuna Award". The Hindu. 15 July 2015. https://www.thehindu.com/sport/cricket/india-offspinner-ravichandran-ashwin-presented-with-arjuna-award/article7486101.ece. 
  62. "R Ashwin receives Sir Garfield Sobers trophy". Business Line. https://www.thehindubusinessline.com/news/sports/r-ashwin-receives-sir-garfield-sobers-trophy/article9604594.ece. 
  63. "ICC Awards: R Ashwin wins Cricketer of the Year award". The Times of India. 23 December 2016. http://timesofindia.indiatimes.com/sports/cricket/news/icc-awards-r-ashwin-wins-cricketer-of-the-year-award/articleshow/56116825.cms. 
  64. "ICC announces Test and ODI Teams of the Year". www.icc-cricket.com. https://www.icc-cricket.com/news/178968. 
  65. "ICC Test and ODI Teams of the Year 2015 announced". www.icc-cricket.com. https://www.icc-cricket.com/news/182259. 
  66. International Cricket Council. "IC Test and ODI Teams of the Year Announced". செய்திக் குறிப்பு.
  67. "ICC Awards: Men's Test and ODI Teams of the Year 2017 announced". International Cricket Council. https://www.icc-cricket.com/media-releases/597047. 
  68. "ICC Men's Test Team of the Year revealed". International Cricket Council. https://www.icc-cricket.com/news/2451778. 
  69. "CEAT Awards". CEAT. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
  70. "ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்". ஆனந்த விகடன். 4 April 2017.
  71. "The ICC Awards of the Decade winners announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
  72. "Ravichandran Ashwin Wins ICC Men's Player Of The Month Award For February". NDTV. 16 March 2021. https://sports.ndtv.com/cricket/ravichandran-ashwin-wins-icc-mens-player-of-the-month-award-for-february-2386814. 
  73. "India v Bangladesh: R Ashwin becomes fastest to 250 Test wickets". Times of India. 12 February 2017. http://timesofindia.indiatimes.com/sports/cricket/bangladesh-in-india/india-v-bangladesh-r-ashwin-becomes-fastest-to-250-test-wickets/articleshow/57107038.cms. 
  74. "India vs South Africa: R Ashwin equals Muttiah Muralitharan's record for fastest to 350 Test wickets". India Today. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
  75. "Records / Test matches / Bowling records / Fastest to 50. wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
  76. "Ashwin leaves New Zealand facing uphill task". ESPNcricinfo. 25 September 2016. https://www.espncricinfo.com/series/nz-tour-of-india-2016-17-1030193/india-vs-new-zealand-1st-test-1030213/match-report-4. 
  77. Jayaraman, Shiva (14 November 2013). "Ashwin the fastest to 100 Test wickets in over 80 years". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
  78. "India vs New Zealand 2016: Ravichandran Ashwin second fastest in Test history to 200 wickets". The Times of India. 25 September 2016. http://timesofindia.indiatimes.com/sports/new-zealand-in-india-2016/top-stories/India-vs-New-Zealand-2016-Ravichandran-Ashwin-second-fastest-in-Test-history-to-200-wickets/articleshow/54508837.cms. 
  79. "Test cricket bowling records for fastest to 300 wickets". பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  80. "2nd Test, Sri Lanka tour of India at Nagpur, Nov 24–28 2017". பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  81. "Ravichandran Ashwin breaks Dennis Lillee's record of fastest 300 Test wickets". The Economic Times. 27 November 2017. https://economictimes.indiatimes.com/news/sports/ravichandran-ashwin-breaks-dennis-lillee-s-record-of-fastest-300-test-wickets/articleshow/61817764.cms. 
  82. "All-round records". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 November 2011.
  83. "Ravichandran Ashwin first Indian to take 50 T20I wickets". India Today. 1 August 2016. http://indiatoday.intoday.in/t20-world-cup-2016/story/icc-world-twenty20-ravichandran-ashwin-first-indian-to-take-50-t20i-wickets/1/628938.html. 
  84. "Most player-of-the-series awards in tests". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  85. "Most five wicket hauls in tests". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  86. "Fastest to take 25 five wicket hauls". ESPNcricinfo. 7 March 2017. http://www.espncricinfo.com/india-v-australia-2016-17/content/story/1085660.html. 
  87. "Fastest to take 25 five wicket hauls". News18. 7 March 2017. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  88. "Most wickets in career in tests". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  89. Rajesh, S (6 March 2022). "Stats – Jadeja continues love affair with Mohali; Ashwin goes past Kapil Dev". ESPNcricinfo.
  90. "R Ashwin emulates Kapil Dev's all-round feat". ESPNcricinfo. https://www.espncricinfo.com/story/r-ashwin-emulates-kapil-dev-s-all-round-feat-1069246. 
  91. "India vs Australia 2017: R Ashwin breaks Kapil Dev's record of most wickets in home". The Indian Express. 24 February 2017. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.
  92. "Most test wickets in a home test season". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
  93. Ashwin, Ravichandran (17 February 2021). "Ravichandran Ashwin Becomes First-ever Bowler To Dismiss Left-handers 200 Times In Test Cricket". Outlook. https://www.outlookindia.com/website/story/sports-news-ravichandran-ashwin-becomes-first-ever-bowler-to-dismiss-left-handers-200-times-in-test-cricket/374262. 
  94. Kumar, Saurabh (29 December 2020). "India vs Australia: R Ashwin surpasses Muttiah Muralitharan to claim unique Test record at MCG". India Today. https://www.indiatoday.in/sports/cricket/story/r-ashwin-left-handers-wickets-muttiah-muralitharan-record-australia-vs-india-boxing-day-test-1754047-2020-12-29. 
  95. "India vs New Zealand: R Ashwin becomes 2nd fastest bowler to take 300 Test wickets at home". India Today. 6 December 2021. https://www.indiatoday.in/sports/cricket/story/india-vs-new-zealand-r-ashwin-becomes-2nd-fastest-bowler-to-take-300-test-wickets-at-home-1884568-2021-12-06. 
  96. "Ravichandran Ashwin becomes third Indian to claim 700 international wickets". The Times of India. 3 July 2023. https://timesofindia.indiatimes.com/sports/cricket/india-in-west-indies/ravichandran-ashwin-becomes-third-indian-to-claim-700-international-wickets/articleshow/101714788.cms?from=mdr. 
  97. "R Ashwin 3rd after Shane Warne, Stuart Broad to rare double after landmark 500 Test wickets". India Today. 16 February 2024. https://www.indiatoday.in/sports/cricket/story/ind-vs-eng-r-ashwin-shane-warne-stuart-broad-rare-double-after-landmark-500-test-wickets-2503089-2024-02-16. 
  98. "R Ashwin goes past Anil Kumble". ESPNcricinfo. 25 February 2024. பார்க்கப்பட்ட நாள் 28 February 2024.
  99. "Test bowling rankings Men". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  100. "All time test bowling rankings Men". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிச்சந்திரன்_அசுவின்&oldid=4171384" இலிருந்து மீள்விக்கப்பட்டது