தமிழ்நாடு துடுப்பாட்ட அணி

தமிழ்நாடு கிரிக்கெட் அணி (The Tamil Nadu Cricket Team) என்பது தமிழ்நாடு சார்பாக உள்ள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்ளும் துடுப்பாட்ட அணி ஆகும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இதனை வழைநடத்துகிறது. ரஞ்சிக் கோப்பை, உள் நாட்டில்நடக்கும் போட்டிகள் முதல் தரத் துடூப்பாட்டப் போட்டிகளான பட்டியல் ஏ போட்டிகள், விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆகிய போடிகளில் இந்த அணி விளையாடி வருகிறது . இந்த அணி இரண்டு முறை ரஞ்சி கோப்பையினை வென்றுள்ளது. மேலும் ஒன்பது முறை இரண்டாம் இடம்பெற்றுள்ளனர்.[1] . விஜய் ஹசாரே கோப்பையினை அதிகமுறை வென்ற அணியும் என்ற சாதனையினைம் தக்க வைத்துள்ளனர்,[2] சையத் முஷ்டாக் அலி கோப்பையினை வென்ற முதல் அணியும் இவர்கள்தான். மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடுவதற்கு முன்பு 1970-71 பருவம் வரை இந்த அணி மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரஞ்சி டிராபி, இரானி டிராபி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகியவற்றை வென்ற ஒரே அணி தமிழ்நாடு அணி ஆகும்.

தமிழ்நாடு கிரிக்கெட் அணி
சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்விஜய் சங்கர் & தினேஷ் கார்த்திக்
பயிற்றுநர்திவாகர் வாசு
மட்டைவீச்சுப் பயிற்றுநர்இராமசாமி பிரசன்னா
அணித் தகவல்
நிறங்கள்     மஞ்சள்      கடும் நீலம்
உருவாக்கம்1930
உள்ளக அரங்கம்எம்.ஏ.சிதம்பரம் அரங்கம்
கொள்ளளவு50,000
வரலாறு
ரஞ்சிக் கோப்பை வெற்றிகள்2
இராணி கோப்பை வெற்றிகள்1
தியோதர் கோப்பை வெற்றிகள்1
விஜய் அசாரே கோப்பை வெற்றிகள்5
அதிகாரபூர்வ இணையதளம்:TNCA

மைதானம்தொகு

இந்த அணி பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவரான [எம்.ஏ.சிதம்பரம்] பெயரிடப்பட்ட எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அமைந்துள்ளது. 1916 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது 38,000 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது மற்றும் 1996 இல் ஃப்ளட் லைட்களை நிறுவியது.[3]

சாதனைகள்தொகு

முதல் தரத் துடுப்பாட்டம்தொகு

1988-89 ஆம் ஆண்டுகளில் கோவா மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி ஆரு இலக்குகளை இழந்து 912 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.2009-10 ஆம் ஆண்டுகளில் ஐதராபாத்து மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி 785 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். 1987-88 ஆம் ஆண்டுகளில் இந்திய ரயில்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி 709 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். 2011-12 ஆம் ஆண்டுகளில் குசராத்து மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி எட்டு இலக்குகளை இழந்து 698 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் நான்காவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். 1999-00 ஆம் ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி ஐந்து இலக்குகளை இழந்து 695 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் ஐந்தாவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.

(இறுதியாக பார்க்கப்பட்டது அக்டோபர் 20, 2016)

ரஞ்சி கோப்பைதொகு

கீழே தமிழ்நாடு கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை சாதனைகள்.

ஆண்டு சாதனை
2011-12 ரன்னர் அப்
2003-04 ரன்னர் அப்
2002-03 ரன்னர் அப்
1995-96 ரன்னர் அப்
1991-92 ரன்னர் அப்
1987-88 சாம்பியன்
1972-73 ரன்னர் அப்
1967-68 ரன்னர் அப்
1954-55 சாம்பியன்
1940-41 ரன்னர் அப்
1935-36 ரன்னர் அப்

விஜய் ஹசாரே கோப்பைதொகு

கீழே தமிழ்நாடு கிரிக்கெட் அணி விஜய் ஹசாரே கோப்பை சாதனைகள்.

ஆண்டு சாதனை
2002–03 சாம்பியன்
2004–05 சாம்பியன்
2008–09 சாம்பியன்
2009–10 சாம்பியன்
 • 2004–05ம், ஆண்டு உத்தர பிரதேசம் அணியுடன், இணைந்து சாம்பியன்

தமிழக வீரர்கள்தொகு

கீழே இந்திய அணிக்காக விளையாடிய தமிழக வீரர்கள். இந்திய அணியின் தலைவராக விளையாடிய தமிழக வீரர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பு தமிழ்நாடு கிரிக்கெட் அணிதொகு

இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் தடித்த எழுத்துக்களால் பட்டியலிடப்பட்டுள்ளனர்

மட்டையாளர்கள்

 • பாபா அபரஜித்
 • ஷாருக் கான்
 • பாபா இந்திரஜித்
 • லக்ஷ்மேஷ சூரியப்ரகாஷ்
 • அபினவ் முகுந்த்
 • கௌஷிக் காந்தி
 • சி. ஹரி நிஷாந்த்
 • பிரதோஷ் ரஞ்சன் பால்
 • கங்கா ஸ்ரீதர் ராஜு
 • அருண் கார்த்திக்
 • கருணாகரன் முகுந்த்

பன்முக வீரர்கள்

இலக்குக் கவனிப்பாளர்கள்

சுழற்பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து வீச்சாளர்கள்

 • எம். மொஹம்மத்
 • கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ்
 • தங்கராசு நடராசன்
 • சோனு யாதவ்
 • ரகுபதி சிலம்பரசன்

சான்றுகள்தொகு

 1. "Ranji Trophy winners list : Teams who have won most Indian championships".
 2. {{https://en.wikipedia.org/wiki/Vijay_Hazare_Trophy}}
 3. "MA Chidambaram Stadium | India | Cricket Grounds | ESPN Cricinfo".

வெளி இணைப்புகள்தொகு