சடகோபன் ரமேஷ்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சடகோபன் ரமேஷ் (Sadagoppan Ramesh), பிறப்பு: அக்டோபர் 16 1975), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2001 – 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சடகோபன் ரமேஷ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 19 24
ஓட்டங்கள் 1367 646
மட்டையாட்ட சராசரி 37.97 28.08
100கள்/50கள் 2/8 -/6
அதியுயர் ஓட்டம் 143 82
வீசிய பந்துகள் 54 36
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 38.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

2005-2007 காலப்பகுதியில் கேரளா துடுப்பாட்ட அணியிலும், 2007-2008 காலப்பகுதியில் அசாம் துடுப்பாட்ட அணியிலும் இணைந்து விளையாடினார். தனது முதலாவது ஒருநாள் போட்டியில் முதலாவது பந்து வீச்சில் ஒரு இலக்கைக் கைப்பற்றிய ஒரே ஒரு இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இவர் கொண்டுள்ளார். இவர் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்த நிக்சன் மெக்லீன் இனுடையது.

திரைத்துறை தொகு

சடகோபன் ரமேஷ் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் மூத்த சகோதரனாக சஞ்சய் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். போட்டா போட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சடகோபன்_ரமேஷ்&oldid=3838114" இலிருந்து மீள்விக்கப்பட்டது