ஜெயம் ரவி

இந்தியத் திரைப்பட நடிகர்

ஜெயம் ரவி (Jayam Ravi) (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மதுரை திருமங்கலத்தில் மோகன் ரவியாக பிறந்தார்.[1] இவரது தந்தை எடிட்டர் மோகன், ஒரு தமிழ் ராவுத்தர் ஆவார்.[2][3] இவரது தாயார் ஆந்திராவை சேர்ந்தவர்.

ஜெயம் ரவி

இயற் பெயர் ரவி மோகன்
பிறப்பு செப்டம்பர் 10, 1980 (1980-09-10) (அகவை 43)
திருமங்கலம், தமிழ்நாடு, இந்தியா
குறிப்பிடத்தக்க படங்கள் ஜெயம் (2003)
எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004)
உனக்கும் எனக்கும் (2006)

திரை வரலாறு

தொகு

ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குனர் பாத்திரப் பெயர் குறிப்பு
2018 டிக் டிக் டிக் (2018 திரைப்படம்) சக்தி சௌந்தர்ராஜன் எம். வாசுதேவன்
2015 பூலோகம் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் என். கல்யாணகிருஷ்ணன் பூலோகம்
தனி ஒருவன் அரவிந்த்சாமி, நயன்தாரா மோகன் ராஜா மித்திரன்
ரோமியோ ஜூலியட் ஹன்சிகா மோட்வானி கார்த்திக்
2014 பூலோகம் பூலோகம்
2014 நிமிர்ந்து நில் அமலா பால் சமுத்திரக்கனி
2014 நினைத்தது யாரோ கௌரவத் தோற்றம்
2013 ஆதிபகவன் நீத்து சந்திரா அமீர்
2011 எங்கேயும் காதல் ஹன்சிகா மோட்வானி பிரபுதேவா கமல்
2010 தில்லாலங்கடி தமன்னா ராஜா கிருஷ்ணா தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம்
2009 பேராண்மை ஜனநாதன்
2008 தாம் தூம் கங்கனா ரனாத் ஜீவா கௌதம்
2008 சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா ராஜா சந்தோஷ் பொம்மரில்லு தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2007 தீபாவளி பாவனா எழில் பில்லு
2006 சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் த்ரிஷா எம். ராஜா சந்தோஷ் தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2006 இதயத் திருடன் காம்னா ஜெத்மலானி சரண் மஹேஷ்
2005 மழை ஷ்ரியா ராஜ்குமார் அர்ஜீன் தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2005 தாஸ் ரேணுகா மேனன் பாபு யோகேஷ்வரன் அந்தோணி தாஸ்
2004 எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி அசின் எம். ராஜா குமரன்
2003 ஜெயம் சதா எம். ராஜா ரவி

மேற்கோள்கள்

தொகு
  1. T, Manigandan K. "HBD Jayam Ravi: ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ் படம் எது தெரியுமா?". Tamil Hindustan Times. Archived from the original on 17 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
  2. Exclusive - "15 ரூபாய்ல ஆரம்பிச்ச வாழ்க்கை"- எடிட்டர் மோகன் | Part - 1 | Rewind with Ramji. Hindu Tamil Thisai. 8 January 2020. Archived from the original on 9 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2 December 2022 – via YouTube.
  3. "Lovable Madurai People". Ananda Vikatan (Chennai, India). 14 September 2011 இம் மூலத்தில் இருந்து 8 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140408231532/http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=10297&r_frm=search. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜெயம் ரவி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயம்_ரவி&oldid=3993241" இலிருந்து மீள்விக்கப்பட்டது