அரவிந்த்சாமி
அர்விந்த்சாமி (Arvind Swami) (பிறப்பு: 30 ஜூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
அரவிந்த் சாமி | |
---|---|
இயற் பெயர் | அர்விந்த்சாமி |
பிறப்பு | 30 சூன் 1967 திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு[1] |
தொழில் | நடிகர், தொழிலதிபர் |
நடிப்புக் காலம் | 1991 - 2005 2015 - தற்போது வரை |
துணைவர் | காயத்திரி |
இளமை வாழ்வு
தொகுஅர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
திரைப்பட வாழ்வு
தொகுஅவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம். இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.
தனி வாழ்வு
தொகுஅர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.
அர்விந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.[2] அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். [3]
திரைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.imdb.com/name/nm0841552/bio
- ↑ "Aravind Swamy's 'happy' divorce". Sify. Archived from the original on 3 December 2010. பார்க்கப்பட்ட நாள் 2 December 2010.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-25. பார்க்கப்பட்ட நாள் 2010-04-22.
வெளியிணைப்புகள்
தொகு|}