ஸ்ரீதேவி

நடிகை

ஸ்ரீதேவி (Sridevi, 13 ஆகத்து 1963 - 24 பெப்ரவரி 2018) தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டியில்[1][6] பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.[7]

ஸ்ரீதேவி
இலக்மி ஃபேசன் வீக் 2010இல் ஸ்ரீதேவி
பிறப்பு(1963-08-13)13 ஆகத்து 1963
மீனம்பட்டி,[1] சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு24 பெப்ரவரி 2018(2018-02-24) (அகவை 54)
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்[2]
இறப்பிற்கான
காரணம்
தவறுதலாக நீரில் மூழ்குதல்[3][4][5]
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1967–2018
வாழ்க்கைத்
துணை
போனி கபூர், (1996-2018)
பிள்ளைகள்ஜான்வி, குஷி

கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.[8]

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படமும் 300வது படமாகும்.

கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

குடும்பம்

தொகு

ஸ்ரீதேவி, அய்யப்பன் - இராஜேஸ்வரி தம்பதியருக்கு 13 ஆகஸ்டு 1963 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர்.[1] அவரது தங்கை லதாவின் கணவர் சஞ்சய் ராமசாமி, 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[9]

2 சூன் 1996 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி - போனி கபூர்[10] தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.[11]

நடித்த திரைப்படங்கள்

தொகு

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் குறிப்புகள்
1969 துணைவன் முருகன்
1969 நம் நாடு கிங்
1970 அகத்தியர்
1970 பெண் தெய்வம்
1971 பாபு
1971 யானை வளர்த்த வானம்பாடி மகன்
1972 கனிமுத்து பாப்பா
1972 மலைநாட்டு மங்கை
1972 வசந்த அறைகள்
1973 நண்பன்
1973 தெய்வ குழந்தைகள்
1973 பிரார்த்தனை
1973 பாரத விலாஸ்
1974 திருமாங்கல்யம்
1974 திருடி
1974 எங்கள் குல தெய்வம் இளம் வள்ளி
1974 அவளுக்கு நிகர் அவளே இளம்‌ மீனா
1976 தசாவதாரம் இளவரசி சீதா
1976 மூன்று முடிச்சு செல்வி
1977 உன்னை சுற்றும் உலகம் சீதா
1977 காயத்ரி காயத்ரி
1977 கவிக்குயில் ராதா
1977 16 வயதினிலே மயில்
1977 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு கவுரி
1978 இளைய ராணி ராஜலட்சுமி
1978 யமுனா கங்கா காவேரி
1978 டாக்ஸி டிரைவர்
1978 வணக்கத்திற்குரிய காதலியே
1978 இது எப்படி இருக்கு
1978 மச்சானைப் பார்த்தீங்களா
1978 மனிதரில் இத்தனை நிறங்களா
1978 முடிசூடா மன்னன் தோற்றம்
1978 பைலட் பிரேம்நாத்
1978 சிகப்பு ரோஜாக்கள் சாரதா
1978 ஆண்கள் பிரியா
1978 கண்ணன் ஒரு கைக்குழந்தை
1978 ராஜாவுக்கேத்த ராணி
1978 சக்கபோடு போடு ராஜா
1979 அரும்புகள்
1979 தர்ம யுத்தம் சித்ரா
1979 கல்யாணராமன் கல்யாணராமன் செண்பகம்
1979 பகலில் ஒரு இரவு சிந்து
1979 கவரிமான்
1979 நீலமலர்கள் மீனா
1979 நான் ஒரு கை பார்க்கிறேன்' '
1979 பட்டாக்கத்தி பைரவன் தீபா
1979 சிகப்புக்கல் மூக்குத்தி
1979 லட்சுமி லட்சுமி
1979 தாயில்லாமல் நானில்லை புவனா
1980 குரு
1980 ஜானி அர்ச்சனா
1980 வறுமையின் நிறம் சிவப்பு தேவி
1980 விஸ்வரூபம்
1981 பால நாகம்மா பாலா
1981 தெய்வ திருமணங்கள்
1981 சங்கர்லால் ஹேமா
1981 மீண்டும் கோகிலா கோகிலா
1981 ராணுவ வீரன்
1982 மூன்றாம் பிறை பாக்கியலட்சுமி/ விஜயா / விஜி
1982 தேவியின் திருவிளையாடல்
1982 தனிக்காட்டு ராஜா வாணி
1982 போக்கிரி ராஜா வனஜா
1982 வாழ்வே மாயம் தேவி
1982 வஞ்சம்
1983 அடுத்த வாரிசு வள்ளி / ராதா
1983 சந்திப்பு கீதா
1985 மீனாட்சியின் திருவிளையாடல்
1986 நான் அடிமை இல்லை பிரியா
1986 ஹரே ராதா ஹரே கிருஷ்ணா ராதா
2012 இங்கிலீஷ் விங்கிலிஷ் சசி
2015 புலி ராணி யுவராணி

பாலிவுட்

தொகு

ஸ்ரீதேவி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிப் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற பின்னர், 1980-களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் பெயர்ப் பெற்றார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக நீண்ட காலம் பாலிவுட்டில் அவர் நடித்துவந்தார்.

மறைவு

தொகு

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது.[12] பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது.[13][14] உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[15]

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 1.2 "ஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை". BBC News தமிழ். 25 February 2018.
 2. https://m.huffingtonpost.in/amp/2018/02/24/breaking-sridevi-dies-at-55_a_23370162/[தொடர்பிழந்த இணைப்பு]
 3. "நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு தகவல்".
 4. http://gulfnews.com/life-style/celebrity/desi-news/bollywood/traces-of-alcohol-found-in-bollywood-actress-sridevi-s-body-died-of-accidental-drowning-1.2178719
 5. https://www.aljazeera.com/news/2018/02/bollywood-star-sridevi-died-accidental-drowning-180226104638021.html
 6. "sridevi birth place". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 7. "Baby Sridevi in pictures: From charming child to stunning teen". The News Minute. 25-02-2018. பார்க்கப்பட்ட நாள் 25-02-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 8. நடிகை ஸ்ரீதேவியின் திரைப்பட வாழ்க்கை வரலாறு
 9. ஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை
 10. Boney Kapoor
 11. "ஸ்ரீதேவி". Archived from the original on 2018-02-13. பார்க்கப்பட்ட நாள் 2018-02-25.
 12. "Bollywood actor Sridevi passes away". Indian Express. 25-02-2018. பார்க்கப்பட்ட நாள் 25-02-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 13. "Traces of alcohol found in Bollywood actress Sridevi's body, died of accidental drowning". கல்ப் நியூசு. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 14. "Sridevi died due to accidental drowning, case transferred to Dubai Public Prosecution: Updates". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 15. "இறுதி சடங்குகளுக்கு பின் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்".

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஸ்ரீதேவி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீதேவி&oldid=3946666" இலிருந்து மீள்விக்கப்பட்டது