குரு (1980 திரைப்படம்)
இ. வீ. சசிதரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
குரு (Guru) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஸ்ரீலங்கா நாட்டில் 1095 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியது.[1]
குரு | |
---|---|
இயக்கம் | ஐ. வி. சசி |
தயாரிப்பு | ஆர். சி. பிரகாஷ் |
வசனம் | ஹாசன் பிரதர்ஸ் (கமல்ஹாசன், சந்திரஹாசன்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி ஒய். ஜி. மகேந்திரன் |
ஒளிப்பதிவு | ஜெயணன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
விநியோகம் | சிவசக்தி பிலிம்ஸ் |
வெளியீடு | சூலை 18, 1980 |
நீளம் | 4440 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன் - குரு / அசோக்
- ஸ்ரீதேவி - சுஜாதா
- ஆர். முத்துராமன் - ரகு, அசோக்கின் தந்தை (தமிழ் மொழியில்)
- கைகால சத்தியநாராயணனா (தெலுங்கு மொழியில்)
- எம். என். நம்பியார் - கொள்ளையர்களின் தலைவன் (தமிழ் மொழியில்)
- எம். பிரபாகர் ரெட்டி (தெலுங்கு மொழியில்)
- மேஜர் சுந்தரராஜன் - காவல்துறை ஆணையர், சுஜாதாவின் உறவினர் (தமிழ் மொழியில்)
- காந்தாராவ் (தெலுங்கு மொழியில்)
- பண்டரிபாய் - சுஜாதாவின் தாயார்
- எஸ். வி. ராமதாஸ் - சுஜாதாவின் தந்தை
- பூர்ணம் விஸ்வநாதன் - ரகுவின் தந்தை
- வெண்ணிற ஆடை நிர்மலா - பார்வதி, ரகுவின் மனைவி அசோக்கின் அம்மா.
- ஒய். ஜி. மகேந்திரன் - மகேஷ், அசோக்கின் நண்பர்.
- ஜெயமாலினி - மகேஷின் காதலி
- மோகன் பாபு - ரமேஷ்
- ஏ. ஈ. மனோகரன் - அடியாட்கள்
- வி. கோபாலகிருஷ்ணன் - காவல்துறை ஆய்வாளர்
- ஐ.எஸ்.ஆர்.(ஐ.எஸ்.ராமச்சந்திரன்)
- டி. கே. எஸ். நடராஜன்
பாடல்கள்
இளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு அருணாசலம் அவர்களால் அனைத்து பாடல் வரிகள் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
1 | ஆடுங்கள் பாடுங்கள் ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் |
2 | பறந்தாலும் விடமாட்டேன் ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | கண்ணதாசன் |
3 | பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | கண்ணதாசன் |
4 | எந்தன் கண்ணில் ... | எஸ். ஜானகி | கண்ணதாசன் |
5 | மாமனுக்கு பரமக்குடி ... | எஸ். ஜானகி | கங்கை அமரன் |
6 | நான் வணங்குகிறேன் ... | எஸ். ஜானகி | பஞ்சு அருணாசலம் |
மேற்கோள்கள்
- ↑ ராம்ஜி, வி. (19 சூலை 2020). "கமலின் கமர்ஷியல் 'குரு'வுக்கு 40 வயது! - இலங்கையில் செய்த மெகா சாதனை!". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 July 2020.