நான் அடிமை இல்லை (திரைப்படம்)

நான் அடிமை இல்லை (Nann Adimai Illai) துவாரகீஷ் இயக்கத்தில் 1986 ல் வெளிவந்த காதல் திரைப்படமாகும். இதில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி முக்கிய கதாபாதிரங்களில் நடித்துள்ளனர்.[1][2][3][4] ஸ்ரீதேவி நடித்த கடைசித் தமிழ்ப்படம் இதுவேயாகும். இப்படதிற்குப் பின்னர் அவர் இந்தி படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மீண்டும் 2012 ல் வெளிவந்த இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில்தான் தமிழில் தோன்றினார். இப்படம் துவாரகீஷ் இயக்கத்தில் விஷ்ணுவர்தன் நடித்து கன்னடத்தில் வெளிவந்த 'நீ பரேடே காதம்பரி' படத்தின் மறு ஆக்கமாகும். மேலும் இந்தியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் நடிப்பில் 'பியார் ஜுக்தா நஹின்' என்ற பெயரில் வெளிவந்தது. இது தெலுங்கு மொழியில் கிருஷ்ணா, ஸ்ரீதேவி நடிக்க 'பஞ்சனி கோபுரம்' என்ற பெயரில் வெளிவந்தது.

நான் அடிமை இல்லை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்துவாரகீஷ்
தயாரிப்புதுவாரகீஷ்
திரைக்கதைஎஸ்.எல்.பிகாரி,
பார்தோ முகர்ஜி
இசைவிஜய் ஆனந்த்
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
க்ரீஷ் கர்னாட்
மனோரம
விஜயகுமார்
தேங்காய் சீனிவாசன்
ஒய்.ஜி.ககேந்திரா
டெல்லி கணேஷ்
ஒளிப்பதிவுதேவி பிரசாத்
படத்தொகுப்புகவுதம்ராஜ்
கலையகம்துவாரகீஷ் சித்ரா
வெளியீடு1 மார்ச் 1986
ஓட்டம்145 நிகிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்l

கதைச்சுருக்கம்

தொகு

விஜய் (ரஜினிகாந்த்) ஒரு தொழில்முறை புகைப்படக் களைஞனாவான். பணக்காரப் பெண் பிரியா ஸ்ரீதேவிவின் மீது காதல் கொள்கிறான். அவர்களின் பெற்றோரது சம்மதமின்றி இருவரின் திருமணம் நடைபெறுகிறது. இருவருடைய குடும்பப் பின்னணி காரணமாக வெகு விரைவிலேயே இத்திருமணம் மிகவும் கடினமாக மாறுகிறது. இருவருக்கும் சண்டை மூண்டு பிரியா தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்புகிறாள். சில நாட்களுக்குப் பிறகு பிரியா அடிக்கடி வயிற்று வலியால் துடிக்கிறாள். அவளை பரிசோதித்த மருத்துவர் அவள் ஒரு குழந்தைக்கு தாயாகப் போவதாக கூறுகிறார். இந்த செய்தியை கேட்டவுடன் பிரியா தனக்கும் விஜய்க்கும் இடையே உள்ள வேலியை உடைக்க நினைக்கிறாள். விஜயிடம் இதைப்பற்றிக் கூற நினைக்கிறாள், ஆனால் அவளது தந்தை அவளைத் தடுத்து வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆனால் தனது தந்தை தூங்கியவுடன் விஜய்யின் வீட்டிற்குச் செல்கிறாள். விஜய் அங்கே இல்லை. சமீபத்தில் வேறு எங்கோ சென்று விடுகிறான்.

அடுத்த காட்சியில் விஜய் தனது நண்பனை சந்திக்க மருத்துவமனை வருகிறான். வயிற்று வலியால் அவதிப்படும் பிரியாவும் அதே மருத்துவமனைக்கு வருகிறாள். இதையறிந்த விஜய் மிக்க மகிழ்ச்சியடைந்து பிரியாவிடம் பேச விழைகிறான். விஜய் இனி ஒருபோதும் பிரியாவைச் சந்திக்காமால் இருந்தால் குழந்தையை அவனுக்குத் தருவதாக பிரியாவின் தந்தை சொல்கிறார். விஜய்யும் வாக்குறுதித் தந்து குழந்தையுடன் திரும்புகிறான். கண் திறந்த பிரியா குழந்தையைத் தேட குழந்தை இறந்தே பிறந்து விட்டதென அவளது தந்தை கூறுகிறார். பிரியா மிகுந்த மனச்சோர்வடைந்து காணப்படுகிறாள். ஆனாலும் அவளுடைய குழந்தை இன்னும் உயிரோடுதான் இருப்பதாக நம்புகிறாள். விஜய் தனது மகனை ஆளாக்குகிறான். சில வருடங்களுக்குப் பின்னர் விஜய் இருக்குமிடத்தை நெருங்கிய பிரியா தனது மகனைக் காண்கிறாள். அவன் பிரியாவை விஜய்யிடம் அழைத்து செல்கிறான். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர்.

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு விஜய் ஆனந்த் இசையமைத்திருந்தார்.[5][6] "ஒரு ஜீவன்தான்" என்ற பாடல் சிவரஞ்சனி இராகத்தில் அமைக்கப்பட்டது.[7]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஒரு ஜீவன்தான்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:48
2. "தேவி தேவி தேனில்"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், S. ஜானகி 4:32
3. "வா வா இதயமே 1"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:35
4. "போனா போகுது புடவ"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:19
5. "ஒரு ஜீவன்தான் (சோகப்பாடல் 1)"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:56
6. "ஒரு ஜீவன்தான் (சோகப்பாடல் 2)"  வாலிஎஸ். ஜானகி 5:20
7. "வா வா இதயமே 2"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:27
மொத்த நீளம்:
29:35

மேற்கோள்கள்

தொகு
  1. Film News Anandan (2004). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru (in Tamil). Chennai: Sivagami Publications. pp. 28:2712. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "Rajinikanth filmography" இம் மூலத்தில் இருந்து 27 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100627074933/http://www.southtamil.in/2008/12/tamil-actor-rajini-kanth.html. பார்த்த நாள்: 2 August 2010. 
  3. "Jointscene listing for Naan Adimai Illai". Jointscene. பார்க்கப்பட்ட நாள் 2 August 2010.
  4. "Rajnikant birthday specials on TV channels". Screen. 23 December 2005. http://www.screenindia.com/old/fullstory.php?content_id=11764. பார்த்த நாள்: 2 August 2010. 
  5. "Naan Adimai Illai". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 19 April 2022. பார்க்கப்பட்ட நாள் 16 April 2022.
  6. "Naan Adimai Illai Tamil Film LP Vinyl Record by Vijay Anand". Banumass. Archived from the original on 19 April 2022. பார்க்கப்பட்ட நாள் 19 April 2022.
  7. Charulatha Mani (28 September 2012). "Sivaranjani for pathos". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201050204/http://www.thehindu.com/features/friday-review/music/sivaranjani-for-pathos/article3945587.ece. 

வெளிப்புற இணைப்புகள்

தொகு