டெல்லி கணேஷ்

இந்திய நடிகர்

டெல்லி கணேஷ் (பிறப்பு : ஆகத்து 1, 1944) திருநெல்வேலியில் பிறந்த மூத்த தமிழ் நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. அவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றினார்.[1]

டெல்லி கணேஷ்
பிறப்புகணேஷ்
ஆகத்து 1, 1944 (1944-08-01) (அகவை 77)
வல்லநாடு, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1976–தற்போதுவரை

டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம்(1977), தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி.[2]

டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித்தொடர் நடிகர். இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்.

பெற்ற விருதுகள்தொகு

 1. முதலமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி. ஆர்) அவர்களிடம் இருந்து பசி (1979) திரைப்படத்துக்காக "தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகருக்கான" விருதினைப் பெற்றார்.
 2. டெல்லி கணேஷ் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் இருந்து தமிழ்நாடு மாநில அரசின் 1993 - 1994 ஆம் ஆண்டிற்கான "கலைமாமணி" விருது பெற்றார்.[3]

டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்தொகு

குறிப்பிடத்தக்க சின்னத்திரை தொடர்கள்தொகு

 • மர்ம தேசம்
 • கஸ்தூரி
 • பொறந்த வீடா புகுந்த வீடா
 • பல்லாங்குழி
 • வசந்தம்
 • மனைவி
 • எங்கே பிராமணன்
 • செல்லமே
 • இப்படிக்குத் தென்றல்
 • திருப்பாவை
 • மனிதர்கள்
 • தினேஷ் கணேஷ்
 • வீட்டுக்கு வீடு லூட்டி
 • ஆஹா

பின்னணிக் குரல்தொகு

 • விஷ்ணுவர்த்தன் (மழலைப் பட்டாளம்)
 • சிரஞ்சீவி (47 நாட்கள்)

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்லி_கணேஷ்&oldid=3247055" இருந்து மீள்விக்கப்பட்டது