அவதாரம்
அவதாரம் என்பது தர்மக் கோட்பாட்டு சமயங்களான இந்துசமயத்திலும் அய்யாவழியிலும் குறிப்பிடப்படும் ஒரு கோட்பாடு ஆகும். இரு சமயங்களிலும் பொதுவாக திருமாலே அவதாரக்கடவுளாக கருதப்படுகிறார். மனிதன் மற்றும் அனைத்து சீவராசிகளும் பூமியில் கர்ம வினை காரணமாக பிறப்பெடுக்கிறது. ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார். இவ்விடம் அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள்.
திருமாலின் அவதாரங்கள்தொகு
விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்[1].
- மச்ச அவதாரம்
- கூர்ம அவதாரம்
- வராக அவதாரம்
- மோகினி அவதாரம்
- நரசிம்ம அவதாரம்
- வாமன அவதாரம்
- பரசுராமர் அவதாரம்
- இராமர் அவதாரம்
- கிருஷ்ண அவதாரம்
சிவபெருமானின் அவதாரங்கள்தொகு
சைவ சமயக்கடவுளான சிவபெருமான் அவதாரங்களை எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும், சிவபெருமான் இருபத்து எட்டு அவதாரங்களை எடுத்ததாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது. [2]