பகதத்தன்

பகதத்தன் ஆதிவராக மூர்த்திக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனான நரகாசுரனின் மகனாகக் கூறப்படுகின்றான். இந்திரனுடன் அரக்கர்கள் யுத்தத்தில் ஈடுபட்ட போது அவர்களைத் தோற்கடித்து இந்திரனுக்கு வெற்றியைத் தந்து அவனிடத்தில் நட்புரிமை பெற்றிருந்தான்.

அருச்சுனன், பகதத்தனை குருச்சேத்திரப் போரில் வீழ்த்துதல்

இவனது நகரம் பிராக்ஜோதிசம் எனப்படும். இது இன்றைய (அசாம்) குவஹாத்தி நகரத்தின் பழைய உருவம்.

மூப்பால் அவனது நெற்றியின் மடிப்புகள் கீழே தொங்கிக்கொண்டிருந்தன. தன் கண்களை மறைக்காமல் இருக்க அவற்றைத் தூக்கித் துணியால் கட்டிக்கொண்டு யுத்தத்தில் இறங்கிய பகதத்தன், குருசேத்திரப் போரில் துரியோதனன் படைக்கு ஆதரவாய் விளங்கியவன்.

"தார் ஆர் ஓடைத் திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும், மன வலியும், சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும், சிலை வலியும், பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே." நான்காம் நாள் போர்ச் சுருக்கம்.

அவனது யானை சுப்ரதீகம், [1] வீரத்தில் அவனுக்கு இணையானது. பாண்டவப் படைகளை ஏறி மிதித்துக் கூழாக்கியது.[2] பகதத்தன் விடுவித்த சக்தி ஆயுதத்தைக் கண்ணன் தன் மார்பில் ஏற்றதாலேயே அர்ச்சுனன் உயிர் பிழைத்தான். கண்ணனும் அர்ச்சுனனும் தங்கள் திறமைகள் அத்தனையும் பயன் படுத்தித்தான் அவனைக் கொல்ல முடிந்தது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. கிழவன் பகதத்தனும்! யானை சுப்ரதீகமும்!! - துரோண பர்வம் பகுதி – 024
  2. பகதத்தன் செய்த போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 096
  3. கொல்லப்பட்டான் பகதத்தன்! - துரோண பர்வம் பகுதி – 027

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதத்தன்&oldid=3463257" இருந்து மீள்விக்கப்பட்டது