உக்கிரசேனர்

உக்கிரசேனர் (Ugrasena) (சமக்கிருதம்: उग्रसेन) வட இந்தியாவின் மதுரா நாட்டின் யது குல மன்னரும், கம்சனின் தந்தையும், கிருஷ்ணரின் தாய் வழி பாட்டனும் ஆவார்.

உக்கிரசேனர்
துணைவர்பத்மாவதி
குழந்தைகளின்
பெயர்கள்
கம்சன் மற்றும் இராஜமதி
அரசமரபுயது குலம்
தந்தைஆஹூகன்
மதுரா அரசவைக்கு வரும் பலராமன் மற்றும் கிருட்டிணை வரவேற்கும் மன்னர் உக்கிரசேனர்

புராண வரலாறு தொகு

வாயு புராணத்தின் படி (96.134), உக்கிரசேனர் யது குலத்தின் குக்குர கிளையினர் ஆவார்.[1] புராணங்களின் படி, உக்கிரசேனர் ஆஹூகனின் மகன் ஆவார்.[2]

இவரது மகனான கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டார் மன்னர் உக்கிரசேனர். பின்னர் கம்சனை கொன்று கிருட்டிணன் உக்கிரசேனரை சிறை மீட்டு மீண்டும் அரியணையில் அமர்த்தினார். சூரசேனரின் மகனும், கிருஷ்ணரின் தந்தையும், மன்னர் உக்கிரசேனரின் மருமகனுமான வசுதேவருக்கு பட்டத்து இளவரசு பட்டம் வழங்கப்பட்டது.

முடிவு தொகு

குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் துவாரகையில் கிருஷ்ணரின் மூத்த மகன் சாம்பனுக்கு, முனிவர்கள் அளித்த சாபத்தின் விளைவால், பெரும்பாலான யது குல ஆண்கள் மதுவின் மயக்கத்தால் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டு இறந்தனர். இந்நிகழ்வுக்குப் பின்னர் கிருஷ்ணர் வேடுவனின் அம்பால் தவறாகக் கொல்லப்பட்ட செய்தி அறிந்த உக்கிரசேனர் மனவேதனையுடன் உயிர் நீத்தார்.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Law, B.C. (1973). Tribes in Ancient India, Bhandarkar Oriental Series No.4, Poona: Bhandarkar Oriental Research Institute, p.389
  2. Pargiter, F.E. (1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, p.105.
  3. Encyclopaedic Dictionary of Puranas. 1. Sarup & Sons. 2001. பக். 1315. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176252263. https://books.google.co.in/books?id=FdIkaccgneAC. பார்த்த நாள்: 2015-06-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கிரசேனர்&oldid=3801508" இலிருந்து மீள்விக்கப்பட்டது