பிருகு

இவர் சைவ சிவ பக்தர்

மகரிஷி பிருகு, சப்தரிசிகளுள் ஒருவர். பிரம்மதேவரால் தன் படைக்கும் தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்ட பிரஜாபதியில் ஒருவர். அவரது மானசபுத்திரராகவும் கருதப்படுகிறார். ஏறக்குறைய பொ.ஊ.மு. 3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில், இவர் எழுதிய பிருகு சம்ஹிதா எனும் நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. இவரது துணைவியின் பெயர் கியாதி ஆகும். இவர் தக்க்ஷனின் மகளாவார். இவர்களுக்கு ததா, விததா, சுக்ரன், சியவனர் என்ற மகன்களும், ஸ்ரீ என்ற மகளும் உண்டு.[1]

பிருகு
பிருகு
பிருகு முனிவரைச் சித்தரிக்கும் ஒரு ஓவியம்
வகைசப்தரிஷி
குழந்தைகள்

பிருகு முனிவரும் சிவபெருமானும்

தொகு

பிருகு மகரிஷி சிவபெருமான் பிரணவப் பொருள் மறக்கக் காரணமாக இருந்தவர்.[2]

பிருகு மகரிஷி ஜீவன் முக்தனாக விரும்பி கடும்தவம் இருந்தபோது தம் தவத்திற்கு இடையூறு ஏற்படாமலிருக்க விரும்பினார். எனவே தம் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க வேண்டும் என்று சாபமிட்டுவிட்டு தவம் இயற்றினார். அவருடைய தவ அக்னி தேவர்களை தாக்கியது. தேவர்கள் திருமாலுடன் வந்து சிவபெருமானிடம் பிரார்த்திக்கவே, தமது திருக்கரத்தை பிருகு முனிவரின் சிரசில் வைத்து அவரது தவாக்னியை அடக்கினார் சிவபெருமான். சிவபெருமான் பிருகு முனிவரது விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார். சிவ தரிசனம் பெற்று மகிழ்ந்த பிருகு முனிவர் தமது சாபத்தால் சிவபெருமான் பாதிக்கப்படுவாரே என்று வருந்தி தம்மை மன்னிக்க வேண்டினார். பிருகு முனிவரின் சாபத்தைத் தாம் மகிழ்வுடன் ஏற்பதாகக் கூறினார் சிவபெருமான்.இதனாலேயே பின்னர் சுவாமிமலையில் தமது புத்திரன் முருகரிடம் உபதேசம் பெற்றார் சிவபெருமான்.[2] பிருகு முனிவன் மனைவி கியாதி. இவள் அரக்கன் (தக்கன்) மகள். இவள் ஆவியைத் திருமால் கவர்ந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. History of Bhriru
  2. 2.0 2.1 சுவாமிமலை தலவரலாறு; அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்; சுவாமிமலை; பக்கம் 36
  3.   
    'பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை
    வரு கயல் கண் கியாதி, வல் ஆசுரர்க்கு
    உருகு காதலுற, உறவாதலே
    கருதி, ஆவி கவர்ந்தனன், நேமியான். (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம் 39-2)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருகு&oldid=3855477" இலிருந்து மீள்விக்கப்பட்டது