சோதிடம்

ஜோதிடம்
சோதிடம்
Venice ast sm.jpg
Aries symbol (planetary color).svg
Taurus symbol (planetary color).svg
Gemini symbol (planetary color).svg
Cancer symbol (planetary color).svg
Leo symbol (planetary color).svg
Virgo symbol (planetary color).svg
Libra symbol (planetary color).svg
Scorpius symbol (planetary color).svg
Sagittarius symbol (planetary color).svg
Capricornus symbol (planetary color).svg
Aquarius symbol (planetary color).svg
Pisces symbol (planetary color).svg
மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்
விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்
சோதிடம் உள்ளடக்க வகைகள்
——————
குறிப்புதவிக்கு
பட்டியலை விரிவுபடுத்தவும்

——————
விரைவு இணைப்பு: கிளைகள்
சீன முறைமருத்துவ சோதிடம்கிளி சோதிடம்நிதியியல் சோதிடம்இடவமைப்பு சோதிடம்

சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள். சோதிடத்துக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை.

கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.

சொல்லிலக்கணம்தொகு

சோதிடம் என்ற வார்த்தையான ἀστρολογία என்ற கிரேக்கப் பெயர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும். இதற்குக் கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திரக் கணிப்பு என்றாக மாற்றமடைந்தது.

மேற்கத்திய சோதிடம்தொகு

மேற்கத்திய சோதிடம் தாலமி கோட்பாடுகளின் அடிப்படையிலும், ஹெலினிஸ்டிக் மற்றும் பாபிலோனிய மரபுகளின் அடிப்படையிலும் உருவானவையாகும். இதில் பன்னிரு ராசிகளும், நட்சத்திரங்களும் அடங்கிய ராசிச்சக்கரம் சோதிடக் கணிப்புமுறைக்குப் பயன்படுகிறது.

ஆசிய சோதிடம்தொகு

இந்திய சோதிடம்தொகு

ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் ( jyótis ) என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினைக் கொண்டு அந்நேரத்தில் நவக்கிரகங்களின் நிலையைக் கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.

இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணை கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.

ஜோதிடம், வேதத்தின் ஐந்தாம் வேதாங்கமாகக் கருதப்படுகிறது. இது வேதங்களின் கண்களாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதைக் கணிக்கவும் எப்போது, எவ்வாறு வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிக்கக் கணிதம் தெரிந்து வைத்திருப்பது கட்டாயாமாகும். கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம். ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.

இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பு முறையில் சிறந்தவர். இவர் குறித்துத் தந்த நாளில் குருச்சேத்திரப் போரைத் தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான கௌரவர்களே இவரிடம் நாள் குறித்துச் சென்றதாக மகாபாரதம் கூறுகிறது.

கிழக்காசிய சோதிடம்தொகு

சீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டி அடிப்படையாகக் கொண்டது. சீன ஜோதிடம் சீன தத்துவத்துடன் (மூன்று நல்லிணக்கம்: சொர்க்கம், பூமி, நீர் கோட்பாடு) நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவ மரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதைக் கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்குப் பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.

சோதிடமும் வான்குறியியலும் (astrology)தொகு

 
சோகி மற்றும் கை ரேகை பார்த்து குறி சொல்லுதல்
 
தமிழகக் கிராம மக்களிடம் கிளி சோதிடம் பார்க்கும் பழக்கமுள்ளது.

கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தைக் காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:

  1. சூரியன் (ஞாயிறு Sun)
  2. சந்திரன் (திங்கள் Moon)
  3. செவ்வாய் (Mars)
  4. புதன் (அறிவன் Mercury)
  5. குரு (வியாழன் Jupiter)
  6. சுக்கிரன் (வெள்ளி Venus)
  7. சனி (காரி Saturn)
  8. இராகு (நிழற்கோள்)
  9. கேது (நிழற்கோள்)

கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்குப் புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:

  1. மேடம் (மேஷம்)
  2. இடபம் (ரிஷபம்)
  3. மிதுனம்
  4. கர்க்கடகம் (கடகம்)
  5. சிங்கம் (சிம்மம்)
  6. கன்னி
  7. துலாம்
  8. விருச்சிகம்
  9. தனு (தனுசு)
  10. மகரம்
  11. கும்பம்
  12. மீனம்

சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்தொகு

ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 1313 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூறு செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூறாகும், 'ரேவதி' கடைக்கூறாகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதைக் கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 313 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூறாகும், 'மீனம்' கடைக்கூறாகும்.

இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்துப் பட்டியலிடலாம்:

விண்மீன் குழு இராசி பாகை
அசுவினி மேடம் 13°20'
பரணி மேடம் 26°40'
கிருத்திகை பாதம் 1 மேடம் 30°
கிருத்திகை பாதம் 2,3,4
ரோகிணி பாதம் 1
இடபம் 43°20'
ரோகிணி பாதம் 2,3,4
மிருகசீரிடம் பாதம் 1
இடபம் 56°40'
மிருகசீரிடம் பாதம் 2 இடபம் 60°
மிருகசீரிடம் பாதம் 3,4
திருவாதிரை பாதம் 1,2
மிதுனம் 73°20'
திருவாதிரை பாதம் 3,4
புனர்பூசம் 1,2
மிதுனம் 86°40'
புனர்பூசம் பாதம் 3 மிதுனம் 90°
புனர்பூசம் பாதம் 4
பூசம் பாதம் 1,2,3
கடகம் 103°20'
பூசம் பாதம் 4
ஆயில்யம் பாதம் 1,2,3
கடகம் 116°40'
ஆயில்யம் பாதம் 4 கடகம் 120°
மகம் சிங்கம் 133°20'
பூரம் சிங்கம் 146°40'
உத்திரம் பாதம் 1 சிங்கம் 150°
உத்திரம் பாதம் 2,3,4
அட்டம் பாதம் 1
கன்னி 163°20'
அட்டம் பாதம் 2,3,4
சித்திரை பாதம் 1
கன்னி 176°40'
சித்திரை பாதம் 2 கன்னி 180°
சித்திரை பாதம் 3,4
சுவாதி பாதம் 1,2
துலாம் 193°20'
சுவாதி பாதம் 3,4
விசாகம் பாதம் 1,2
துலாம் 206°40'
விசாகம் பாதம் 3 துலாம் 210°
விசாகம் பாதம் 4
அனுடம் பாதம் 1,2,3
விருச்சிகம் 223°20'
அனுடம் பாதம் 4
கேட்டை பாதம் 1,2,3
விருச்சிகம் 236°40'
கேட்டை பாதம் 4 விருச்சிகம் 240°
மூலம் தனுசு 253°20'
பூராடம் தனுசு 266°40'
உத்திராடம் பாதம் 1 தனுசு 270°
உத்திராடம் பாதம் 2,3,4
திருவோணம் பாதம் 1
மகரம் 283°20'
திருவோணம் பாதம் 2,3,4
அவிட்டம் பாதம் 1
மகரம் 296°40'
அவிட்டம் பாதம் 2 மகரம் 300°
அவிட்டம் பாதம் 3,4
சதயம் பாதம் 1,2
கும்பம் 313°20'
சதயம் பாதம் 3,4
பூரட்டாதி பாதம் 1,2
கும்பம் 326°40'
பூரட்டாதி பாதம் 3 கும்பம் 330°
பூரட்டாதி பாதம் 4
உத்திரட்டாதி பாதம் 1,2,3
மீனம் 343°20'
உத்திரட்டாதி பாதம் 4
ரேவதி பாதம் 1,2,3
மீனம் 356°40'
ரேவதி மீனம் 360°

சோதிட முறைகள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு

சோதிடம் நோக்கிய விமர்சனங்கள்தொகு

எந்த ஓர் அறிவியலும் அது எந்த அளவு விளக்கி வரவுரைக்குமென்பதைப் பொறுத்துத்தான் அதன் தரம் கணிக்கப்பட வேண்டும். ஒரு விடயம் பரிசோதனைக்கு உட்பட்டு நிறுவப்பட வேண்டும். சோதிடம் அறிவியல் அணுகுமுறைப்படி நிறுவப்பட முடியாது. காரணம் அதற்கு அறிவியல் அடிப்படை கிடையாது. எனவே சோதிடத்தை நம்புவது ஒரு வகை மூடநம்பிக்கைதான் என்பது ஒரு சாராரது கருத்து.

சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களைக் குறிப்பிடும் சோதிடம் யுரேனஸ், நெப்டியூன் பற்றிக் குறிப்பிடாதது. பூமியின் துணைக்கோளான சந்திரனைக் கோளாகக் குறிப்பிடுதல் போன்றவை வானியலுக்கு எதிரானதாகவும், ராகு, கேது போன்றவை கோள்களாகச் சோதிடத்தில் குறிப்பிடப்பட்டாலும், இவை சூரியக் குடும்பத்தில் இல்லாத கற்பனைக் கோள்களாகும்.[1]

உசாத்துணைகள்தொகு

  • வே. தங்கவேலு. (2008). சோதிடப் புரட்டு. கனடா.
  • பெங்களூரு வெங்கடராமன் (1973). Astrology for Beginners 16th Edition, Raman Publications.

மேலும் காண்கதொகு

கோள்கள்

ஆதாரம்தொகு

  1. சோதிடம் என்பதும் அறிவியலா? பேரா.சோ.மோகனா

வெளி இணைப்புகள்தொகு

விமர்சன இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதிடம்&oldid=3508319" இருந்து மீள்விக்கப்பட்டது