கிளி சோதிடம்
கிளி சோதிடம் அல்லது கிளி ஜோசியம் தமிழ்நாட்டிலும் சிங்கப்பூரிலும் காணப்படும் ஒரு சோதிட வகை. இதில் பச்சைக் கிளிகளைக் கொண்டு சீட்டுகளில் ஒன்றை எடுக்கச் செய்து அச்சீட்டின் படி சோதிடப் பலன்கள் சொல்லப்படுகின்றன.
இம்முறையில் சோதிடர் பழக்கப்பட்ட ஒன்று அல்லது இரு பச்சைக்கிளிகளை கூண்டில் வைத்திருப்பார். சோதிடம் பார்க்க வருபவர் சோதிடர் முன் அமர்ந்த பின்னால், சோதிடர் கூண்டினைத் திறந்து ஒரு கிளியினை வெளியில் விடுவார். அது வெளிவந்து சோதிடர் முன் பரப்பி் அல்லது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 27 சீட்டுகளில் இருந்து ஒன்றை எடுத்து சோதிடரிடம் தரும். அச்சீட்டுகளில் சிவன், விநாயகர் போன்ற தெய்வங்களின் படங்கள் இருக்கும். இந்து சமய தெய்வங்கள் மட்டுமல்லாது அன்னை மரியா அல்லது புத்தர் ஆகியோரின் படங்களும் இதில் இருக்கலாம். அச்சீட்டில் உள்ள தெய்வத்தின் படத்தினைக் கொண்டு சோதிடர் முன் அமர்ந்திருப்பவரிடம் சோதிட பலன்களைக் கூறுவார்.[1][2][3]
வெளி இணைப்புகள்
தொகு- Parrot astrologers பரணிடப்பட்டது 2012-01-01 at the வந்தவழி இயந்திரம்
- Art of parrot predictions on verge of extinction பரணிடப்பட்டது 2012-05-06 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hindus and their Prayers". Wesleyan Juvenile Offering (London: Wesleyan Mission House) XXII: 65. May 1865. https://books.google.com/books?id=1VwEAAAAQAAJ. பார்த்த நாள்: 1 December 2015.
- ↑ "Art of parrot predictions on verge of extinction". தி டெக்கன் குரோனிக்கள். 17 October 2011 இம் மூலத்தில் இருந்து 6 May 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120506033522/http://www.deccanchronicle.com/channels/cities/chennai/art-parrot-predictions-verge-extinction-215. பார்த்த நாள்: 23 December 2011.
- ↑ Naidu Ratnala, Thulaja. "Parrot astrologers". National Library Board Singapore. Archived from the original on 1 January 2012. பார்க்கப்பட்ட நாள் 23 December 2011.