கிளி
கிளி | |
---|---|
ஆப்பிரிக்காவில் ஒரு செனகல் கிளி இணை Poicephalus senegalus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Psittaciformes |
உயிரியல் அமைப்புமுறை | |
(ஆனால் கீழே பார்க்கவும்) குடும்பம் Cacatuidae (cockatoos)
குடும்பம் Psittacidae (பொதுவான கிளிகள்)
|
கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆஸ்திரலேசியாவிலும்,[1] தென் அமெரிக்காவிலுமே[2] மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet).
உணவு
தொகுவிதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை.
வாழ்வியல்
தொகுகிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது. பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன.
பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Olah, George; Theuerkauf, Jörn; Legault, Andrew; Gula, Roman; Stein, John; Butchart, Stuart; O’Brien, Mark; Heinsohn, Robert (2018-01-02). "Parrots of Oceania – a comparative study of extinction risk". Emu - Austral Ornithology 118 (1): 94–112. doi:10.1080/01584197.2017.1410066. பன்னாட்டுத் தர தொடர் எண்:0158-4197. Bibcode: 2018EmuAO.118...94O. https://georgeolah.com/documents/olah_et_al_2018a_parrots_of_oceania.pdf.
- ↑ Berkunsky, I.; Quillfeldt, P.; Brightsmith, D.J.; Abbud, M.C.; Aguilar, J.M.R.E.; Alemán-Zelaya, U.; Aramburú, R.M.; Arce Arias, A. et al. (2017). "Current threats faced by Neotropical parrot populations" (in en). Biological Conservation 214: 278–287. doi:10.1016/j.biocon.2017.08.016. Bibcode: 2017BCons.214..278B. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0006320717306298.