பிருகு சம்ஹிதை

(பிருகு சம்ஹிதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகரிஷி பிருகு, ஏறக்குறைய பொ.ஊ.மு. 3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில் எழுதிய நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. ஆனால் தற்கால ஆய்வின்படி இது பல்வேறு காலகட்டங்களில் அவரது சீடர்களால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. நவகிரகங்களின் இடத்தைப்பொறுத்து 5,௦௦,௦௦௦ ஜாதகங்களை இவர் கணித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் தற்பொழுது அழிந்துவிட்டன. நாலந்தா பல்கலையில் இருந்த இவை முகலாய படையெடுப்பால் அழிந்து விட்டன. எனினும் ஒரு சில பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், பஞ்சாப் மாநிலத்திலும் சில சோதிட வல்லுனர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருகு_சம்ஹிதை&oldid=3790519" இலிருந்து மீள்விக்கப்பட்டது