ஏரம்ப கணபதி

ஏரம்ப கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 11வது திருவுருவம் ஆகும். இது இந்துக் கடவுளான விநாயகரின் ஐந்து முகங்களைக் கொண்ட வடிவம். நேபாளத்தில் இவ்வடிவம் மிகவும் புகழ் பெற்றது.[1] விநாயகக் கடவுளுக்கான தாந்திரிய வழிபாட்டு முறையில் இவ்வடிவம் முக்கியமானது. விநாயகரின் 32 வடிவங்களுள் மிகவும் புகழ் பெற்றவற்றுள் இதுவும் ஒன்று.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் ஏரம்ப கணபதியின் உருவப்படம்.
தேவியுடன் ஏரம்ப கணபதி, 18 ஆம் நூற்றாண்டு, நேபாளம்.

பெயர்தொகு

பிரம்ம வைவர்த்த புராணம், ஏரம்ப (ஹேரம்ப) என்னும் சமசுக்கிருதச் சொல்லின் பொருளை விளக்குகிறது. இதன்படி "ஹே" என்பது "உதவியற்றதன்மை" அல்லது "இயலாமை" என்பதைக் குறிக்கும். "ரம்ப" என்பது "பாதுகாத்தல்" என்னும் பொருள் உடையது. இதனால் "ஹேரம்ப" என்பது "இயலாதவர்களைப் பாதுகாப்பவர்" அல்லது "உதவியற்றவர்களைப் பாதுகாப்பவர்" என்று பொருள்படும்.[2] "ஹேரம்ப" என்பது தமிழ் மரபுக்கு ஏற்ப "ஏரம்ப" ஆகிறது.

ஏரம்ப கணபதி (ஹேரம்ப கணபதி) என்னும் பெயர் பல்வேறு புராணங்களில் காணப்படுகின்றது. 'முத்கல புராணத்தில்' விநாயகரின் 32 வடிவங்களுள் ஒன்றாக இப்பெயர் வருகிறது. வாராணாசிப் பகுதியில் உள்ள 56 விநாயகர்களில் ஒன்றாக இப்பெயரைக் கந்த புராணம் குறிப்பிடுகிறது. பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் ஆகியவற்றில் உள்ள விநாயகரின் பெயர்களுள் ஒன்றாக இப்பெயரும் உள்ளது.[3] கணேச புராணத்திலும் விநாயகருக்கான அடைமொழிகளுள் ஒன்றாக இதுவும் காணப்படுகிறது.[4]

திருவுருவ அமைப்புதொகு

பசுமை கலந்த கருமை நிறமும் ஐந்து முகங்களும் உடையவர். அபயம், வரதம் ஆகிய கைகளையும், ஏனைய கரங்களில் பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் இவற்றைத் தாங்கி சிங்கவாகனத்தில் அமர்ந்து இருக்கிறார்.

குறிப்புகள்தொகு

  1. Royina Grewal (2009). Book of Ganesha. Penguin Books Limited. பக். 67–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5118-091-3. 
  2. Rao, T.A. Gopinatha (1916). Elements of Hindu Iconography. 1: Part I. Madras: Law Printing House. பக். 46–7, 57, 65. 
  3. Grimes, John A. (1995), Ganapati: Song of the Self, SUNY Series in Religious Studies, Albany: State University of New York Press, pp. 52–59, ISBN 0-7914-2440-5
  4. Greg Bailey (2008). Gaṇeśapurāṇa: Krīḍākhaṇḍa. Otto Harrassowitz Verlag. பக். 656. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-447-05472-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரம்ப_கணபதி&oldid=1759111" இருந்து மீள்விக்கப்பட்டது