விந்தியவாசினி

இந்து பெண் தெய்வம்

விந்தியவாசினி அல்லது யோகமாயா என்பது தேவி அல்லது துர்க்கையின் ஒரு பெயர் ஆகும். இவரது கோயில், இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரையிலுள்ள மிர்சாபூரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் விந்தியாஞ்சலில் அமைந்துள்ளது. மற்றொரு சன்னதி இமாச்சல பிரதேசத்தின் பாண்ட்லாவில் உள்ளது. இது, பாண்ட்லா மாதா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

விந்தியவாசினி
பெற்றோர்கள்நந்தகோபன் (தொன்மவியல்) (தந்தை) யசோதை (தாய்)
சகோதரன்/சகோதரிகிருட்டிணன்

தொன்மம் தொகு

 
விந்தியவாசினி

இந்த தெய்வம் தனது பெயரை விந்தியா மலைத்தொடரிலிருந்து, விந்தியவாசினி என்ற பெயரைப் பெற்றதாக கருதப்படுகிறது. அதாவது விந்திய மலைத்தொடரில் இந்த கோயில் இருப்பதால் இப் பெயர்க்காரணம் ஏற்பட்டது. ஆதி சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த பூமியில் சக்தி பீடங்கள் உருவாக்கப்பட்டன என்று நம்பப்படுகிறது. ஆனால் விந்தியாஞ்சல் என்பது தேவி பிறந்த பிறகு வசிக்கத் தேர்ந்தெடுத்த இடமாகும். இதுவும் சக்திபீடங்களில் ஒன்றாக உள்ளது.

தேவகி - வசுதேவரின் 8 வது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்த அதே நேரத்தில், மஹா-யோகினி மகாமாயா, நந்தகோபன் - யசோதாவிற்கு மகளாகப் பிறந்தார். விஷ்ணுவின் அறிவுறுத்தலின் படி, வசுதேவர், கிருஷ்ணருக்கு பதிலாக யசோதாவிற்குப் பிறந்த, பெண் குழந்தையை இடம் மாற்றி வைத்தார். கம்சன் இந்த பெண் குழந்தையை கொல்ல முயன்றபோது, கம்சனின் கையில் இருந்து தப்பித்து, தேவி வடிவமாக மாறினார். மேலும், இவர், கம்சனிடம், ஓ !! முட்டாளே! ! உன்னைக் கொல்வவன் ஏற்கனவே பிறந்து பாதுகாப்பாக இருக்கிறான் என்று கூறிவிட்டு மதுராவின் சிறையிலிருந்து மறைந்து போனார். அதன்பிறகு, இவர், விந்திய மலைகளைத் தனது இருப்பிடமாகத் தேர்வு செய்து, அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார் என புராணங்களில் செய்தி உள்ளது.

பாகவத புராணத்தில் தொகு

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பின்வருமாறு யோகமாயா பற்றிய குறிப்பு உள்ளது.

"விஷ்ணுவின் தங்கையான யோகமாயா தேவி, கம்சனின் கைகளிலிருந்து மேல்நோக்கி நழுவி வானத்தில் தோன்றினார். தேவி, துர்க்கையின் வடிவம் எடுத்து, முழுமையாக ஆயுதங்களுடன் கூடிய எட்டு கரங்களுடன் கம்சனுக்கு காட்சியளித்தார்."

- ஸ்ரீமத்பாகவதம், காண்டம் 10, அத்தியாயம் 4, வசனம் 9 [1] "ஓ கம்சனே, முட்டாள், என்னைக் கொல்வதால் என்ன பயன்? ஆரம்பத்தில் இருந்தே உந்தன் எதிரியாக இருந்தவர், நிச்சயமாக உன்னைக் கொன்றுவிடுவார், கடவுளின் உயர்ந்த ஆளுமை, அவருடைய பிறப்பை ஏற்கனவே வேறு எங்கோ எடுத்தாகிவிட்டது. எனவே, மற்ற குழந்தைகளை தேவையில்லாமல் கொல்ல வேண்டாம்."

- ஸ்ரீமத்பாகவதம், காண்டம் 10, அத்தியாயம் 4, வசனம் 12 [2]

தேவி மஹாத்மியத்தில் தொகு

தேவி மஹாத்மியத்தில் தேவி சும்ப நிசும்பர்களை அழித்த பின், தேவர்களிடம் தான் எடுக்க போகும் அவதாரங்களை பற்றி தேவர்களிடம் கூறுகிறார்.

"இன்னொரு சும்ப நிசும்பர்களை அழிக்க துர்க்கை நந்தகோபன்-யசோதையின் மகளாக அவதரித்து, விந்திய மலையில் வாழ்வதோடு, இவ்விரு அரக்கர்களையும் அழிப்பேன்" என்று தேவி மஹாத்மியம், 11 ஆம் அத்தியாத்தில் துர்கா தேவி தேவர்களிடம் கூறினார்.

பிற கோயில்கள் தொகு

இந்து சமயத்தில், இந்தியாவிலுள்ள மிகவும் மதிப்பிற்குரிய சக்தி பீடங்களில் ஒன்றாக மிர்சாபூரில் உள்ள விந்தியவாசினி கோயில் கருதப்படுகிறது. விந்தியவாசினி தேவி, 'கஜலா தேவி' என்ற பெயரிலும் பிரபலமாக அறியப்படுகிறார். பொதுவாக, காளி தேவி, விந்தியவாசினி தேவி வடிவத்தில் அலங்கரிக்கப்படுகிறார்.

குறிப்பாக, இந்து நாட்காட்டியில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் நவராத்திரியின் போது ஏராளமான மக்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். இங்கு, ஆனி, மாதத்தில், நாட்டுப்புற பாடல் வகைகளை வெளிப்படுத்தும் விதமாக, 'கஜலி போட்டி' நடத்தப்படுகின்றது.

விந்தியவாசினி கோயிலில் இருந்து, சுமாராக 3 கி.மீ தூரத்தில், உள்ள ஒரு சிறுகுன்றின் மேல் மகா சரசுவதிக்கு ஒரு கோவில் உள்ளது. இது, 'அஷ்டபுஜ கோயில்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஒரு காளி தேவியின் கோயில் ஒன்றும் அருகில் உள்ளது. இங்குள்ள காளி குகையில் உள்ளதால், 'காளி கோ கோவில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று கோயில்களையும் யாத்ரீகர்கள் பார்வையிட விரும்புகிறார்கள். இது, திரிலோகன் பரிக்ரமா என்று அழைக்கப்படுகிறது.

நேபாளத்திலுள்ள போகாராவில் விந்தியவாசினி தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஒன்று உள்ளது. [3]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தியவாசினி&oldid=3742466" இலிருந்து மீள்விக்கப்பட்டது