மாயை என்பது இந்தியத் தத்துவங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பதங்களில் (சொல்) ஒன்று. இது வேதாந்தம் சிறப்பாக 1. சங்கர வேதாந்தம்,2. சைவ சித்தாந்தம் என்பவற்றில் முதன்மை பெறும் விடயமாகும்.[1][2][3]

சங்கர வேதாந்தம்

தொகு

சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். சங்கரர் மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். பிரம்மம் உலகாகவும், ஆன்மாவாகவும் தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.

மாயையின் குணங்கள்

தொகு

அத்வைதிகளின் கருத்துப்படிபிரம்மத்தை மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை.

மா = ஒடுங்குதல்
யா = விரிதல்

மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும். (தமிழில், மாயம் என்பது தெளிவில்லாமை, குழப்பம், மறைந்து போகும் தன்மை என்ற பல பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றது.)

சங்கர வேதாந்தத்தின்படி மாயையின் தோற்றம்

தொகு

பிரம்மத்தின் ஒரு சிறு அம்சமே(பகுதி) மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் முக்குணங்களுடன் விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட)) ஐந்து பூதங்களைத் தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோண்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில் அழிவுக்கு உட்பட்டதுதான். ஊழிக்காலத்தில் இவையெல்லாம் பிரம்மத்திடம் ஒன்றித்துவிடும். பிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.

சைவ சித்தாந்தம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M (in ஆங்கிலம்). The Rosen Publishing Group. p. 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780823931798.
  2. M Hiriyanna (2000), The Essentials of Indian Philosophy, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120813304, pp. 25, 160-161
  3. Lynn Foulston and Stuart Abbott (2009), Hindu Goddesses: Beliefs and Practices, Sussex Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1902210438, pp. 14-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயை&oldid=4101816" இலிருந்து மீள்விக்கப்பட்டது