வாயு பகவான்

kaattru

இந்து மத தொன்மைவியல் படி வாயு பகவான் என்பவர் காற்றின் அதிபதியாவார். வாயு பகவானுக்கும் அஞ்சனை என்று பெண்ணிற்கும் பிறந்தவராக ஆஞ்சநேயர் அறியப்படுகிறார்.

வாயு பகவான்
வாயு பகவான்
தேவநாகரிवायु
சமசுகிருதம்'Vāyu
தமிழ் எழுத்து முறைவாயு பகவான்

பதினெட்டு புராணங்களில் வாயு பகவானின் வாயு புராணமும் அடங்குகிறது. இருந்தும் சிவ புராணம் பதினெட்டு புராணங்களில் ஒன்றா என்ற சிறு ஐயப்பாடு உள்ளது.

வாயு புராணம் தொகு

வாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. மேலும் நூற்றிப் பன்னிரெண்டு (112) அத்தியாயங்களேயும், இருபத்து நான்காயிரம்(24,000) ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயுபகவானால் கூறப்பட்டதால் வாயு புராணம் என அழைக்கப்படுகிறது.

வாயு மைந்தன் தொகு

அஸ்தினாபுரத்தின் அரசனான தசரத மன்னன் தனக்கு குழந்தை பேறு வேண்டி யாகம் செய்தார். அந்த யாகத்தில் கிடைத்த பிரசாதத்தினை மனைவிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பொழுது, கௌசல்யாவின் பங்கிலிருந்து சிறிய அளவினை கழுகொன்று எடுத்து சென்றது. அது குழந்தை வரம் வேண்டி தவமிருந்த அஞ்சலையிடம் சேர்ப்பித்து. இதற்கு காரணமான வாயு பகவானின் அருளால் பிறந்தமையால் "ஆஞ்சிநேயரை" வாயு மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள்.

பீமன் தொகு

மகாபாரத இதிகாசத்தி்ல் வருகின்ற பஞ்ச பாண்வர்களில் பீமன் குந்திக்கும் வாயு பகவானுக்கும் பிறந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாயு_பகவான்&oldid=2965074" இலிருந்து மீள்விக்கப்பட்டது