காதலா! காதலா!

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதலா! காதலா! (Kaathala Kaathala) என்பது 1998 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி. எல். தேனப்பன் தயாரித்த இத்திரைப்படம் கார்த்திக் ராஜா இசையமைப்பில் 1998 ஏப்ரல் 10 அன்று வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]

காதலா! காதலா!
இயக்கம்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்புபி. எல். தேனப்பன்
கதைகிரேசி மோகன்
திரைக்கதைகமல்ஹாசன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புகமல்ஹாசன்
பிரபுதேவா
சௌந்தர்யா
ரம்பா
ஒளிப்பதிவுதிரு
படத்தொகுப்புஎன். பி. சதிஷ்
கலையகம்சரசுவதி பிலிம்ஸ்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு10 ஏப்ரல் 1998
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அவ்வை சண்முகி திரைப்படத்தைத் தொடர்ந்து இத்திரைப்படத்தையும் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. ஆனாலும் 1997இல் நடந்த பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால் அவரால் இப்படத்தை இயக்க முடியாமல் போனது. ஆகவே இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார்.[2] நடிகைகள் மீனா, சிம்ரன் ஆகியோர் வேறு படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அவர்களால் இப்படத்தில் நடிக்க இயலவில்லை. ஆகவே இப்படத்தில் ரம்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[3][4]

தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பத்திரிக்கை ஒன்றில் அளித்த பேட்டியில், "நடிகர் பிரபு எனக்கொரு கால்ஷீட் குடுத்திருந்தார். அது தள்ளிப்போச்சு. இதைப் பத்தி கமல் சார்கிட்ட பேசினேன். ஆனால், அவரே அதில் நடிக்க 'காதலா காதலா'னு வந்துச்சு", என்று கூறியுள்ளார்.[5]

பாடல்

இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார்.[6] "காசு மேலே" பாடல் வரிகளை வாலி எழுதினார். அப்பாடலில் வாச கதவ ராஜ லட்சுமி… தட்டுகிற வேளையிது… என்ற வரியில் கமல்ஹாசனின் தாயார் "ராஜலட்சுமி" அவர்களின் பெயர் வரும் படி எழுதியிருந்தார்.[7]

எண் பாடல் பாடியவர்கள்
1 "காசுமேலே" கமல்ஹாசன், உதித் நாராயண்
2 "லைலா லைலா" ஹரிஹரன், பவதாரிணி, ஸ்ரீபிரியா, பிரசன்னா
3 "தகிடுதத்தம் அண்ணாச்சி" இளையராஜா, ஜாக்
4 "சரவணபவ" கமல்ஹாசன், கார்த்திக் ராஜா, ஸ்ரீபிரியா, சுஜாதா
5 "அணகோன்டா" கமல்ஹாசன், கவிதாபட்வால்
6 "அணகோன்டா 2" ஹரிஹரன், பவதாரிணி

மேற்கோள்கள்

  1. ""வாழ்த்துகள் கிரேஸி, கமல். யூ போத் ஆர் வெரி கிரேஸி!"". ஆனந்த விகடன். 16 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Strike Page". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
  3. "Tamil Movie News: March edition". Archived from the original on 2016-04-30. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
  4. "The Hindu : National : `An intelligent top star'". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
  5. "6 வது படிச்சப்ப ஒயின்ஷாப்புல வேலை பார்த்தேன்... தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் பி.எல்.தேனப்பன்". குங்குமம். 15 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "கார்த்திக் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: இசைஞானியின் பேர் சொல்லும் தலைமகன்". இந்து தமிழ். 29 சூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. Vasanth TV (2019-02-15). ""Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show - Actor Crazy Mohan". பார்க்கப்பட்ட நாள் 2024-07-10.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலா!_காதலா!&oldid=4045121" இலிருந்து மீள்விக்கப்பட்டது