மீனா (நடிகை)
(மீனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மீனா (Meena, பிறப்பு: 16 செப்டம்பர், 1976) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும்.[2] 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
மீனா | |
---|---|
![]() | |
பிறப்பு | மீனாட்சிசுந்தரேசுவரி (மீனா) செப்டம்பர் 16, 1976[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1982 - தற்போது வரை |
பெற்றோர் | துரைராஜ் ராஜமல்லிகா |
வாழ்க்கைத் துணை | வித்தியாசாகர் (2009 - 2022) (இறப்பு) |
பிள்ளைகள் | நைநிகா |
குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்கள்தொகு
- அண்ணாத்த
- அரிச்சந்திரா
- அவ்வை சண்முகி
- அன்புடன்
- அன்புள்ள ரஜினிகாந்த்
- ஆளுக்கொரு ஆசை
- ஆனந்த பூங்காற்றே
- இவன்
- உயிரே உனக்காக
- உளவுத்துறை
- என் ராசாவின் மனசிலே
- எஜமான்
- ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி
- கூலி
- சிட்டிசன்
- செங்கோட்டை
- சேதுபதி ஐ.பி.எஸ்
- தாய் மாமன்
- தீர்ப்புகள் திருத்தப்படலாம்
- நம்ம வீட்டு கல்யாணம்
- நாடோடி மன்னன்
- நாம் இருவர் நமக்கு இருவர்
- பாரதி கண்ணம்மா
- பாளையத்து அம்மன்
- பாறை
- பெரியண்ணா
- பொற்காலம்
- மரியாதை
- மருமகன்
- மாமன் மகள்
- மாயி
- முத்து
- ராஜகுமாரன்
- ரிதம்
- வசந்தி
- வானத்தைப் போல
- வில்லன்
- வீரா
- வெற்றிக் கொடி கட்டு