வசந்தி (திரைப்படம்)
சித்ராலயா கோபு இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வசந்தி 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழகத் தமிழ்த் திரைப்படம். சித்ராலயா கோபு இயக்கிய இப்படத்தில் மோகன், மாதுரி, தேவிலலிதா, மனோரமா, எஸ். எஸ். சந்திரன், வினுச்சக்ரவரத்தி மற்றும் லூஸ் மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.[1]
வசந்தி | |
---|---|
இயக்கம் | சித்திராலயா கோபு |
தயாரிப்பு | ஏவிஎம் |
கதை | சித்திராலயா கோபு |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | மோகன் மாதுரி தேவிலலிதா மனோரமா எஸ். எஸ். சந்திரன் வினு சக்ரவர்த்தி சின்னி ஜெயந்த் லூசு மோகன் மீனா (நடிகை) |
வெளியீடு | 2 டிசம்பர் 1988 |
மொழி | தமிழ் |
சிறப்பம்சங்கள்
தொகுஇந்த படத்தில் மோகன் மற்றும் அவரது சகோதரி தேவிலலிதா சேர்ந்து "சந்தோசம் காணாத வாழ்வுண்டா என்னும் பாடல் பாடியுள்ளார். இந்தப் படம் இறுதியில், ஏ வி எம் தயாரிப்புகளின் சின்னத்துடன் முடிவடைகிறது.
பாடல்கள்
தொகுவைரமுத்து எழுதிய பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் சந்திரபோசு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் இசைத்தட்டு 1988 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[2][3]
வசந்தி | |
---|---|
இசைத்தட்டு
| |
வெளியீடு | 1988 |
இசைப் பாணி | திரைப்பட ஒலிவரி |
இசைத்தட்டு நிறுவனம் | ஏவிஎம் |
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் (நிமிடம். நொடி) | பாடலாசிரியர் | குறிப்புகள் |
1 | சந்தோசம் காணாத - 1 | கே. ஜே. யேசுதாஸ் | 03:39 | வைரமுத்து | |
2 | வாழ்க்கையோ கையிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 03:36 | ||
3 | கூ கூ குளிருது | வாணி ஜெயராம் | 04.41 | ||
4 | சந்தோசம் காணாத - 2 | கே. எஸ். சித்ரா | 04:46 | ||
5 | முருங்கக்கா | எஸ். பி. சைலஜா | 04:11 | ||
6 | ரவிவர்மன் | கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா | 04:11 |