சின்னி ஜெயந்த்

சின்னி ஜெயந்த் (ஆங்கிலம்:Chinni_Jayanth, பிறப்பு: ஜூலை 26, 1960) ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார்.

சின்னி ஜயந்த்
Chinni Jayanth.jpg
பிறப்புகிருஷ்ணமூர்த்தி நாராயணன்
சூலை 26, 1960 (1960-07-26) (அகவை 60)
சென்னை, இந்தியா
வாழ்க்கைத்
துணை
ஜெயஸ்ரீ
வலைத்தளம்
http://www.chinnejayanth.com/

தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009 ஆம் ஆண்டு பெற்றார்[1]. இவர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்[2].

மேற்கோள்கள்தொகு

  1. http://cinema.dinamalar.com/tamil-news/3472/cinema/Kollywood/Kalaimamani-Awards-presented.htm
  2. 3-1-2014 வெளிவந்த தினத்தந்தி வெள்ளிமலர்

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னி_ஜெயந்த்&oldid=2717079" இருந்து மீள்விக்கப்பட்டது