கை கொடுக்கும் கை
கை கொடுக்கும் கை (Kai Kodukkum Kai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில்[1][2][3] வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரேவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
கை கொடுக்கும் கை | |
---|---|
இயக்கம் | மகேந்திரன் |
தயாரிப்பு | ஆர், விஜயகுமார் ஸ்ரீ ராகவேந்திரா ஆர்ட்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ரேவதி |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
வெளியீடு | சூன் 15, 1984 |
நீளம் | 3775 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ரஜினிகாந்த்- காளிமுத்துவாக
- ரேவதி- சீதாவாக
- ராஜ்யலட்சுமி - மங்கம்மாவாக
- ரங்கநாத்- பெரிய பண்ணையாக (குரல் சண்முகசுந்தரம்)
- வி. எஸ். ராகவன்- காளிமுத்துவின் சகோதரராக
- சௌகார் ஜானகி- காளிமுத்துவின் மைத்துனியாக
- ஒய். ஜி. மகேந்திரன்
- பூர்ணம் விஸ்வநாதன்
- தேங்காய் சீனிவாசன்
- சின்னி ஜெயந்த்
பின்புலம்
தொகுரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க நடிகர் விஜயகுமார் முடிவு செய்தார். இப்படத்திற்கு இயக்குனராக மகேந்திரன் பெயரை ரஜினிகாந்த் பரிந்துரைத்தார்.[4] இப்படம் 1975 இல் புட்டன கனகல் இயக்கிய தொகுப்பு படமான கதா சங்கமாவின் மூன்றாவது பகுதியான முனிதாயி என்பதன் நீட்டிக்கப்பட்ட ஆக்கமாகும். கன்னடத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.[4] கதையில் சிறு மாற்றங்களுடன் இப்படத்திற்கு மகேந்திரன் திரைக்கதையை எழுதினார். மகேந்திரனின் ஆஸ்தான குழுவான இளையராஜா, அசோக் குமார் மற்றும் படத்தொகுப்பு கலைஞர்களான பி. லெனின் - வி. டி. விஜயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[சான்று தேவை] மாலைமலர் நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் ரஜினிகாந்தின் ஜோடி மானபங்கப்படுத்தப்படுவதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் படத்தின் கிளைமாக்ஸ் தனக்கு பிடிக்கவில்லை என்று விஜயகுமார் கூறியிருந்தார். ஆனால் கிளைமாக்ஸை மாற்ற மகேந்திரன் விரும்பவில்லை.[5]
பாடல்கள்
தொகுஇப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதினர்.[4][6]
எண் | பாடல் | பாடியவர்கள் | வரிகள் | நீளம் |
1 | "ஆத்தா பெத்தாலே" | மலேசியா வாசுதேவன் | வாலி | 04:28 |
2 | "கண்ணுக்குள்ளே யாரோ" | எஸ். பி. சைலஜா, பி. சுசீலா | நா. காமராசன் | 04:20 |
3 | "தாழம் பூவே வாசம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | 04:13 |
4 | "பாத்தா படிச்சபுள்ள" | எஸ். ஜானகி, சாய்பாபா | கங்கை அமரன் | 04:08 |
ஆதாரங்கள்
தொகு- ↑ "திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
- ↑ மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011
- ↑ 4.0 4.1 4.2 "கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த கை கொடுக்கும் கை" (in Tamil). மாலை மலர். 29 November 2007. http://cinema.maalaimalar.com/2012/11/29234855/actor-rajini--act-in-kai-koduk.html. பார்த்த நாள்: 4 March 2014.
- ↑ "கை கொடுக்கும் கை பட கிளைமாக்ஸ்" (in Tamil). Maalai malar. 10 June 2007. http://cinema.maalaimalar.com/2013/06/10213203/maalaimalarcom-cinema-history.html. பார்த்த நாள்: 4 March 2014.
- ↑ "Kai Kodukkum Kai". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-11-23.